Published:Updated:

``விவேக் சாரின் கனவை இன்று நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறோம்!" - செல்முருகன்

விவேக் சாருடைய பிறந்தநாள் அன்னைக்கு காலையில் கோயிலுக்குப் போயிட்டு பலருக்கும் அன்னதானம் பண்ணுவோம். அவருக்கு அது ரொம்பவும் பிடிச்ச விஷயம்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக். சமீபத்தில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். அவரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று நடிகர் விவேக்கின் பிறந்தநாள். எப்போதும் அவருடன் நிழலாய் உடன் பயணித்த அவருடைய உதவியாளர், நண்பர் செல் முருகன் விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவாக மரக்கன்றுகள் நட்டிருக்கிறார். அவரிடம் பேசியபோது,

செல் முருகன்
செல் முருகன்
நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகள் நட்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!
விவேக் - செல்முருகன்
விவேக் - செல்முருகன்

``சாருடைய பிறந்தநாள் அன்னைக்கு காலையில் கோயிலுக்குப் போயிட்டு பலருக்கும் அன்னதானம் பண்ணுவோம். அவருக்கு அது ரொம்பவும் பிடிச்ச விஷயம். அதனால, எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே கொஞ்ச பேருக்கு அன்னதானம் பண்ணினேன். 'மரம் வளர்க்கணும்' என்கிற அவரோட கனவை நிறைவேற்றுவதற்காக பெரிய அளவில் மரக்கன்று நட திட்டமிட்டிருந்தோம். அதற்கு இயக்குநர் வெற்றிமாறனும் வருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், மழையின் காரணமாக அந்த நிகழ்வை அடுத்தவாரம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அதற்கு பதிலாக, ஏவிஎம் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்தோம். சாருடைய மனைவியும் அவங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கியிருக்காங்க. மரம் வளர்க்கணும் என்கிற அவர் கனவை நிச்சயம் நினைவாக்கணும். அதற்கான அவர் விட்டுச் சென்ற அவரின் வேலைகளைத்தான் இப்போ அவர் சார்பாக முன்னெடுத்திருக்கிறோம்!' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு