Published:Updated:

``தனியா விட்டுட்டுப் போனதுக்கு காரணம் தெரியாமேயே சண்டை போட்டாங்க..!’’ - தீபக்கின் காதல் கதை

தீபக், சிவரஞ்சனி
தீபக், சிவரஞ்சனி

"திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆனாலும் எங்க காதல் குறையாது. அதுக்காக எப்பவுமே ஐ லவ் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன்." - தீபக்

இயல்பான பேச்சால் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தொகுப்பாளனாகத் தடம்பதித்த தீபக், கொஞ்ச நாள்களாகவே குக்கிங் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

Deepak Cooking Photos
Deepak Cooking Photos

சமையல் மீது ஏன் இந்தத் திடீர் ஆர்வம் என்று அவரிடமே கேட்டோம்...

"எனக்கு கொஞ்ச நாளாவே சமையல் மேல காதல் ஏற்பட்டிருக்கு. என் குடும்பத்துக்கு விதவிதமா சமைச்சு கொடுத்துகிட்டு இருக்கேன். சின்ன வயசுல இருந்தே சமையல் மீது ஆர்வம் அதிகம். இப்போ அந்த ஆர்வம் காதலா மாறிடுச்சு. ஃப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் கிச்சன் பக்கம் போய்டுவேன். காய்கறி நறுக்குறது, யூடியூப் பார்த்து புதுப்புது டிஷ் டிரை பண்றதுனு மனசுக்கு நிறைவா இருக்கு. நான் சமைக்கிற ப்ரோக்கோலி டிஷ்தான் என் மனைவியோட ஆல் டைம் ஃபேவரைட்'' என்றவரிடம் காதலர் தின ஸ்பெஷல் கேள்விகளைக் கேட்டோம்.

மனைவியிடம் ரீசன்ட்டா எப்போ ஐ லவ் யூ சொன்னீங்க?

தீபக், சிவரஞ்சனி
தீபக், சிவரஞ்சனி
`நான் லவ் பண்றது அவங்க புருஷனுக்கே தெரியும்!' - `மின்னல்' தீபாவுடன் ரகளை செய்த இளைஞர்

"இன்னைக்கு காலைலகூட சொன்னேன். கல்யாணமாகி எத்தனை வருஷமானாலும் எங்களோட காதல் குறையாது. அதுக்காக எப்பவுமே ஐ லவ் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன். சண்டை வந்துச்சுன்னா சமாதானம் ஆகணும்னு சொல்லுவேன். அவங்களும் உருகிடுவாங்க.''

மனைவி உங்ககிட்ட அடம்பிடிச்சு கேட்டு வாங்கிய விஷயம்?

தீபக், சிவரஞ்சனி
தீபக், சிவரஞ்சனி

"அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை அடம் பிடிச்சு எதாவது வாங்கித் தரச் சொல்ற ஆள்தான் என்னோட மனைவி. ஆனா, பெரிய விஷயத்துக்கெல்லாம் அடம்பிடிக்க மாட்டாங்க. அவங்க அடம் பண்றதும் ரசிக்கும்படியாதான் இருக்கும். ஒரு வருஷத்துக்கு முன்னாடி வீடு வாங்கணும்னு அடம் பிடிச்சு கடைசியில அதை வாங்கவும் வெசிட்டாங்க. ஆனா, நான் யோசிச்சு பொறுமையாதான் வாங்கலாம்னு இருந்தேன்" என்றார் சோக ஸ்மைலியோடு!

சர்ப்ரைஸ்?

தீபக், சிவரஞ்சனி
தீபக், சிவரஞ்சனி

"சமீபத்துல மலேசியா போயிருந்தோம். அவங்க பிறந்தநாளைக்கு சர்ப்ரைஸா எதாவது கிஃப்ட் பண்ணணும்னு தோணுச்சு.ரெண்டு பேரும் ஷாப்பிங் போனப்போ நான் மட்டும் திடீர்னு கிஃப்ட் வாங்கணும்னு எஸ்கேப் ஆகிட்டேன். அவங்க என்னைத் தேடி பயந்துட்டாங்க. நான் வாட்ச் வாங்கிட்டு திரும்பி வந்தப்போ பெரிய சண்டையே வந்துடுச்சு. `நீ என்னை விட்டுட்டு தனியா ஊர் சுத்திட்டு இருக்கியா’னு பயங்கரமா திட்டினாங்க. அப்புறம் ஒரு மாசம் கழிச்சு அவங்களுக்குப் பிறந்த நாள் வந்தது. `மலேசியாவுல நான் வாங்கி வெச்சிருந்த வாட்ச்சைக் கொடுத்தேன். `மலேசியாவுல தனியா விட்டுட்டு போனேன்ல, இதோ இந்த வாட்சை வாங்கத்தான் போனேன்'னு சொன்னேன். அப்படியே அசடு வழிஞ்சு க்யூட்டா சிரிச்சாங்க.’’

அதைத் தொடர்ந்து சிவரஞ்சனியிடமும் சில கேள்விகளை முன்வைத்தோம்...

இந்த வருஷம் என்ன ரெசல்யூஷன் எடுத்தீங்க?

சிவரஞ்சனி
சிவரஞ்சனி

"எனக்கும் தீபக்குக்கும் சமீப காலமாக ஃபிட்னஸ் மேல அதிக கவனம் வந்துடுச்சு. இந்த 2020 ஆரோக்கியமான வருஷமா இருக்கணும்னு ஆசைப் பட்றேன். ரெண்டு பேரும் வேலை வேலைனு ஓடிட்டு இருக்கதால சேர்ந்து நேரம் ஸ்பென்ட் பண்ண முடியாம இருக்கு. இப்போ தினமும் ஒரு மணி நேரம் நானும் தீபக்கும் உடற்பயிற்சி செய்றோம். தீபக் வேற இப்போ விதவிதமா சமைச்சுக் கொடுக்குறார். அன்போட அவர் சமைச்சுக் கொடுக்குறத சாப்பிட்டு வெயிட் கூடாம ஃபிட்டா இருக்க நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் வொர்க் அவுட் பண்ண வேண்டியிருக்கு!’’

தீபக்குக்கு நீங்க கொடுத்த மறக்க முடியாத சப்ரைஸ்?

தீபக், சிவரஞ்சனி
தீபக், சிவரஞ்சனி
``தனுஷோட கேரவன்ல இவரோட காமெடிதான் ஓடிட்டே இருக்கும்!" - சுப்ரமணியம் சிவா

"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தீபக் பிறந்தநாளுக்கு அவருக்குத் தெரியாம அவரோட நெருங்கிய நண்பர்களை எல்லாம் வர வெச்சு குடும்பத்தையும் அழைச்சு பெரிய ஹோட்டலா புக் பண்ணி பிரமாண்டமா கொண்டாடினோம். எல்லாரையும் பார்த்துட்டு தீபக் நெகிழ்ந்துட்டார். அங்க ஒரு பர்ஃபாமன்ஸும் பண்ணோம். இதுக்காகவே நானும் என் பையனும் 10 நாளைக்கு முன்னாடி ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சிட்டோம். அவருக்குக் கடைசி வரை எதுவும் தெரியாம பார்த்துக்கிட்டோம். பிறந்தநாள் அன்னைக்கு மனுஷன் ஆடிப்போய்ட்டார்’’ என்று உற்சாகத்துடன் சிரிக்கிறார் சிவரஞ்சனி.

அடுத்த கட்டுரைக்கு