Published:Updated:

`வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் பிரஜினுக்குப் பதில் இனி தினேஷ்?

'வைதேகி காத்திருந்தாள்' பிரஜின், தினேஷ்

’வைதேகி காத்திருந்தாள்’ சீரியலுக்கு தினேஷ் கமிட் ஆகும்பட்சத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் விஜய் டிவிக்கு வருகிறார்.

`வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் பிரஜினுக்குப் பதில் இனி தினேஷ்?

’வைதேகி காத்திருந்தாள்’ சீரியலுக்கு தினேஷ் கமிட் ஆகும்பட்சத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் விஜய் டிவிக்கு வருகிறார்.

Published:Updated:
'வைதேகி காத்திருந்தாள்' பிரஜின், தினேஷ்

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல் வைதேகி காத்திருந்தாள். மாலை 6 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் பிரஜின் ஹீரோவாகவும் சரண்யா ஹீரோயினாக நடித்து வந்தனர்.

இந்நிலையில் ஒளிபரப்பாகத் தொடங்கி ஒரு மாத காலமே ஆன நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து ஹீரோ பிரஜின் வெளியேறி இருக்கிறார்.

பிரஜின்
பிரஜின்

"ஆமாங்க சீரியல்ல இருந்து நான் வெளியேறிட்டேன். அடுத்தடுத்து சில படங்கள் இருக்கு. இந்தப் படங்கள் முன்னாடியே கமிட் ஆனதுதான்னாலும் சினிமா, சீரியல் ரெண்டையும் பேலன்ஸ் செய்துடலாம்னு நினைச்சுதான் சீரியல்ல கமிட் ஆனேன். ஆனா இப்ப ஷூட்டிங் ஷெட்யூல்ல சமாளிக்க முடியலை. சீரியலுக்கு தேதி கொடுக்கறதுல சிக்கல் வந்தது. அதனாலதான் வேற வழி இல்லாம சேனல்கிட்ட விஷயத்தை அப்படியே சொல்லிட்டு சுமூகமா தொடர்ல இருந்து வெளியேறிட்டேன். நல்ல புராஜெக்ட். கூட ஒர்க் பண்ணினவங்க எல்லாருமே நல்லா பழகினாங்க. ஜாலியான யூனிட்தான். ஆனாலும் என்னால தொடர முடியாமப் போச்சுன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு’’ எனத் தன்னுடைய விலகலுக்கான காரணம் குறித்துச் சொல்லியிருந்தார் பிரஜின்.

சரி, பிரஜினுக்குப் பதில் இனி இந்த சீரியலில் ஹீரோவாக நடிப்பது யார் என விசாரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினேஷ்
தினேஷ்

பிரஜினுடன் ’சின்னத்தம்பி’ சீரியலில் நடித்த லோகேஷிடம் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். தவிர நடிகர் தினேஷிடமும் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. தினேஷ் கமிட் ஆக அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

நடிகர் தினேஷ் விஜய் டிவியில் ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘புதுக்கவிதை’ ஆகிய சீரியல்களில் நடித்தவர். ’பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தினேஷ், ரச்சிதாவுடன் நடித்தபோதுதான் அவர்களுக்குள் காதல் வந்து நிஜ வாழ்க்கையில் தம்பதி ஆனார்கள். பிறகு விஜய் டிவியிலிருந்து வெளியேறி 'பூவே பூச்சூடவா', 'நாச்சியார்புரம்' என ஜீ தமிழ் பக்கம் போனார் தினேஷ்.

’வைதேகி காத்திருந்தாள்’ சீரியலுக்கு தினேஷ் கமிட் ஆகும்பட்சத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் விஜய் டிவிக்கு வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism