Published:Updated:

’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்

சாயா சிங், கிருஷ்ணா

``நான் ரொம்பவே ஆசீர்வதிக்கபட்டவள். கர்நாடகாவுக்கும், தமிழ் நாட்டுக்கும் பிரச்னை இருக்கும்னு பயமுறுத்தினாங்க. ஆனால், இங்கே வந்த பிறகு சென்னைப் பெண்ணாக மாறிட்டேன்’’ - சாயாசிங்

’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்

``நான் ரொம்பவே ஆசீர்வதிக்கபட்டவள். கர்நாடகாவுக்கும், தமிழ் நாட்டுக்கும் பிரச்னை இருக்கும்னு பயமுறுத்தினாங்க. ஆனால், இங்கே வந்த பிறகு சென்னைப் பெண்ணாக மாறிட்டேன்’’ - சாயாசிங்

Published:Updated:
சாயா சிங், கிருஷ்ணா

`திருடா திருடி' படத்தின் 'மன்மத ராசா...' பாடல் வாயிலாக சாயா சிங் பிரபலமானார் என்றால், 'தெய்வமகள்' சீரியல் வாயிலாக பிரபலமானவர் கிருஷ்ணா. இருவருமே 'அனந்தபுரத்து வீடு' படத்தில் நடிக்கும்போது காதலாகி, கல்யாணம் செய்து கொண்டார்கள். தற்போது, 'ரன்' சீரியலில் செம்ம போல்டானா, திமிரான கேரக்டரில் நடித்து வருகிறார் கிருஷ்ணா. இரண்டு நபர்களையும் இணைத்து ஒரு பேட்டி எடுக்கலாமே என நினைத்தோம்; ஆஜரானோம்...

'ரன்' சீரியல் எப்படி வந்திருக்கு... உங்கள் அனுபவம்..?

’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்

`` `தெய்வமகள்' சீரியலுக்குப் பிறகு எனக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்திருக்கும் சீரியல் இது. சூப்பரா வந்திருக்கு. செம்ம வேகமா படம் மாதிரி ஸ்கிரீன் பிளே நகரும். டைரக்டர் செல்வா சார், ஷூட்டிங் ஸ்பாட்ல செம்ம கூலா இருப்பாங்க. ஹாங்காங்கில்தான் ஷூட் பண்ணினோம். அங்க வெயில் அதிகம் என்பதால் சாயாதான் புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மாதிரி வேலை பார்த்தாங்க. ஷூட்டிங் நடக்கும்போது எப்போ பிரேக் கிடைக்குமோ அப்போது அங்கிருப்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுப்பாங்க'' எனச் சிரிக்கும் கிருஷ்ணாவை செல்லமாக முறைத்த சாயா சிங்கிடம், அவரது கணவரின் ஆக்டிங் பற்றிக் கேட்டேன்.

``கிருஷ்ணா ஆக்டிங் பண்ணும் போது, பர்சனல் லைஃப்ல எப்படி இருப்பாரோ அதில் இருந்து டோட்டலா வேற மாதிரி இருப்பார். நான் அவருக்கு டிப்ஸ் நிறைய கொடுப்பேன். `ரன்’ சீரியல்ல இவருக்கு ஜோடியா நடிக்கிற சரண்யா செம்ம பப்ளி கேர்ள். அவங்ககூட பேசும்போது, அவங்களைப் பேச வைத்துக் கேட்டுட்டே இருக்கலாம்'' என்றார் சாயாசிங்.

``கே.பாலசந்தர் சார் 'சிந்து பைரவி' படத்தின் இரண்டாம் பாகத்தை ’சஹானா’ங்கிற சீரியலா எடுக்கும் போது, அதில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த டைம்ல எனக்கு கே.பி சாரைப் பற்றி எதுவுமே தெரியாது. 'கே.பிசார்னு ஒருத்தர் இருந்தார், ஆடிஷன் முடிச்சிட்டேன்’னு வீட்ல போய் சொன்னேன். அப்போதான் அவர் யார்னு என் வீட்டில் இருந்தவங்க சொன்னாங்க. அடுத்த நாளில் இருந்து பதற்றம் தொத்திக்கிடுச்சு'' என்ற கிருஷ்ணாவை இடம் மறித்த சாயா...

''இவங்க பிறந்தது சென்னை. ஸ்கூல் படிப்பு பெங்களூரில், அதற்குப் பிறகு டெல்லிக்குப் போயிட்டாங்க. எல்லாப் படங்களும் பார்ப்பாங்க. அப்போ ஒவ்வொரு படத்தைப் பார்க்கும்போதும் ஹீரோ மட்டும்தான் தெரியும். ஆனால், டைரக்‌ஷன் யாருனு பெருசா கவனிச்சிருக்க மாட்டார்'' எனத் தன் கணவருக்கு எடுத்துக் கொடுத்தார்.

’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்

சாயா சிங்கிடம், 'ஏழு மொழிகளில் வேலை பார்த்திருக்கீங்க.. தமிழுக்கு வந்தவுடன் எப்படி இருந்தது..?’ எனக் கேட்டேன்.

``நான் ரொம்பவே ஆசீர்வதிக்கபட்டவள். கர்நாடகாவுக்கும், தமிழ் நாட்டுக்கும் பிரச்னை இருக்கும்னு பயமுறுத்தினாங்க. ஆனால், இங்கே வந்த பிறகு சென்னைப் பெண்ணாக மாறிட்டேன். எனக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு ஆதரவு இருந்தது. `திருடா திருடி' படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். `திருடா திருடி’ ரிலீஸ் ஆனபோது மலையாளப் படத்தில் நடிச்சிட்டு இருந்தேன். படம் எப்படி இருக்குனு விசாரிச்சப்போ, 'தியேட்டர் ஸ்கிரீனைக் கிழிச்சிட்டாங்க..'னு சொன்னாங்க. அம்மாகிட்டப் போய் அழுதேன். அம்மா போன் பண்ணி விசாரிச்சாங்க. 'மன்மத ராசா..' பாட்டை மறுபடியும் போடச் சொல்லி, போடாததால் ஸ்கிரீனை கிழிச்சாங்கனு சொன்னதும்தான் எனக்கு சந்தோஷமே திரும்பி வந்தது.'’

'திருடா திருடி’யில் நடிகராகவும் ’பவர் பாண்டி’யில் இயக்குநராகவும் தனுஷைப் பார்த்திருக்கிறீர்கள்.. அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்..?

’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்

''அவர் நிறைய கத்து வெச்சிருக்கார். கடின உழைப்பாளி, கூடவே திறமைசாலி. அவரை மாதிரி ஒரு திறமைசாலியைப் பார்க்க முடியாது. பெசன்ட் நகர் பீச்சில் பைக் எடுத்துட்டு டிரைவ் பண்ணுவார். அப்போ `காதல் கொண்டேன்' படம் ரிலீஸ் ஆகல. அப்படி பார்த்த தனுஷ், இப்போது இருக்கும் உயரம் 'வாவ்..' சான்ஸே இல்லை.''

`திருடா திருடி’ படத்தில் வருவது போல் கால் கட்டை விரலைப் பார்த்து பேசும் சம்பவங்கள் இப்போதும் நடக்கிறதா...?

``ஆமாங்க. `திருடா திருடி' படத்திலிருந்து இப்போது வரை என்கிட்ட பேசுறவங்க விரலைப் பார்த்து பேசுவதுண்டு. சமீபத்தில் மாலுக்குப் போயிருந்தேன். ஒருவர் என்னை விசாரிச்சுப் பேசிட்டு இருக்கும்போது, என்னைப் பார்த்துப் பேசாம காலைப் பார்த்துப் பேசிட்டு இருந்தாங்க. ஏன் இப்படிப் பேசுறார்னு நானும் காலைப் பார்த்தப்போதுதான் தெரிந்தது. அடப்பாவிகளா இன்னுமா அதை ஃபாலோ பண்றீங்கனு மனசுக்குள்ள கேட்டுக்கிட்டேன்'' எனப் பளிச்செனச் சிரிக்கிறார் சாயா சிங்.