சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் TV: “என் மகள் சீரியலில் இருந்து வெளியேற்றப்படவில்லை! வெளியேறுகிறார்!”

 ஜோவிதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோவிதா

- லிவிங்ஸ்டன்

சில மாதங்களுக்கு முன்புதான் அடுத்தடுத்து சன் டிவி சீரியல்களில் கமிட் ஆனார்கள் நடிகர் லிவிங்ஸ்டனும் அவர் மகள் ஜோவிதாவும். ‘பூவே உனக்காக’ சீரியல் மூலம் முதன்முறையாக சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார் ஜோவிதா. சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘கண்ணான கண்ணே’ தொடரில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்திற்கு கமிட் ஆனார் லிவிங்ஸ்டன். இந்நிலையில், தற்போது ஜோவிதா அந்த சீரியலிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகத் தகவல் கிடைக்க, `என்ன நடந்தது’ என லிவிங்ஸ்டனிடமே கேட்டோம்.
விகடன் TV: “என் மகள் சீரியலில் இருந்து வெளியேற்றப்படவில்லை! வெளியேறுகிறார்!”

“சீரியல்ல இருந்து என் மகளை அனுப்பிட்டதா சிலர் வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்னு பேசிட்டு, எழுதிட்டிருக்காங்க. அது நிஜமில்லை. அந்த சீரியல்ல இருந்து விலகியது நாங்களா எடுத்த முடிவு. நடிக்கத் தொடங்கின கொஞ்ச நாளிலேயே இப்படியொரு முடிவை எடுக்கத் தள்ளப்பட்டதை நினைக்கிறப்ப உண்மையிலேயே வருத்தமாத்தான் இருக்கு. ஒரேயொரு காரணம்னா பட்டுனு சொல்லிடலாம். இந்த விலகலின் பின்னணியில நிறைய விஷயங்கள் இருக்கு. `நான் வெளியேறிக்கறேன்’னு என் பொண்ணு சொன்னதும் சில நாள் அவகாசம் கேட்டிருக்காங்க. அதன்படி டிசம்பர் 15-ம் தேதி வரைக்கும் டைம் தந்திருக்கோம்.

அதுக்குள் அந்தக் கேரக்டரை காலி பண்ணுவாங்களோ, அல்லது, வேறு யாரையாச்சும் கமிட் பண்ணுவாங்களோ தெரியாது. ஆனா சீரியல்ல இருந்து முழுசா வெளியேறுவதற்குள்ளேயே எதையும் பேசி யாரையும் கஷ்டப்படுத்த நான் விரும்பலை. அவசியப்பட்டா பிறகு நிச்சயம் பேசறேனே’’ என்றவரிடம்,

விகடன் TV: “என் மகள் சீரியலில் இருந்து வெளியேற்றப்படவில்லை! வெளியேறுகிறார்!”

``அதே டிவியில நீங்க நடிச்சிட்டிருக்கீங்க. மகள் விலகறப்ப அது ஒருவித நெருடலை உருவாக்காதா’’ என்றோம்.

“நான் தெளிவா இருக்கேன். நான் நடிக்கிற சீரியலின் இயக்குநர் நட்பு ரீதியில என்னை நடிக்கக் கூப்பிட்டார். மாசத்துக்கு நாலு நாள்தான் ஷூட்டிங். கொரோனாவால நிதிநிலைமை கொஞ்சம் மந்தமா இருக்கா, அதனால `சரி’ன்னு கமிட் ஆனேன். நான் நடிக்கறதையும் என் பொண்ணு வெளியேறுவதையும் ஒப்பிடத் தேவையில்லை. இது வேற, அது வேற’’ என்கிறார் லிவிங்ஸ்டன்.