Published:Updated:

``டிவி நடிகர் சங்கத்துல கொஞ்சம் பணம் சேர்ந்துடுச்சு... அதான இப்படி பண்றீங்க!'' - மனோபாலா

மனோபாலா
மனோபாலா

''என்னை நீக்க செயற்குழுவுக்கு அதிகாரமில்லை; பொதுக்குழு உறுப்பினர்கள் சொல்லட்டும் ராஜினாமா செய்கிறேன்'' என்ற ரவிவர்மாவோ தனக்கு ஆதரவாக பொதுக்குழுவில் ஆள் இருப்பார்கள் என நம்பி வந்தார்.

'பஞ்சாயத்தாடா இது... பஞ்சாயத்தே இல்ல. இங்க நாலு கொலை விழணும்னே இப்படிப் பண்றாங்கடா...'' - 'தேவர் மகன்' படத்தில் சிவாஜி கோபப்பட்டு வெளியேறிச் செல்வாரே, அதேபோல 'அன்னைக்கு நடந்தது பொதுக்குழுவே இல்ல! அந்த இடத்துல கைகலப்பு நடக்கணும்னே திட்டமிட்டு சிலர் வந்திருந்தாங்க. ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைப் பேசி கூட்டம் நல்லபடியா நடந்துடக் கூடாதுங்கிறதுல கவனமா இருந்தாங்க. மொத்தத்துல எல்லாருமா சேர்ந்து சங்கத்தைப் பாழாக்கிட்டாங்க' எனக் குமுறிக்கொண்டிருக்கின்றனர் டிவி நட்சத்திரங்கள். 'முக்கியமான அவசரப் பொதுக்குழு' என அழைத்தும் 1,200 பேர் இருக்கும் சங்கத்தில் 200 பேர்கூட வரவில்லை என்றால் குமுறத்தானே செய்வார்கள்!

ரவி வர்மா அணியினர்
ரவி வர்மா அணியினர்

சங்கத்தை டெவலப் செய்கிறோம் என என்றைக்கு மலேசிய கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்களோ அன்றைக்கே சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. நிகழ்ச்சி முடிந்த அடுத்த சில நாள்களிலேயே 'கலைநிகழ்ச்சிக்காகத் தலைவர் ரவிவர்மாவுக்கு கமிஷன் கைமாறியுள்ளது' எனப் புகார்கள் கிளம்ப, 'தலைவர் மட்டுமில்லையாம். செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அத்தனை நிர்வாகிகளுக்குமே பணம் போயிருக்கு' என இன்னொரு தரப்பு எதிர்க்குரல் எழுப்பியது. தொடர்ந்து ரவிவர்மா சங்க அலுவலகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, இருதரப்பிலும் காரசார அறிக்கைப் போர். விளைவு... அவசரப் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தலைவர் ரவிவர்மாவை நீக்கித் தீர்மானம் கொண்டு வருவது என்ற அஜெண்டாவுடன், செயலாளர் நரேன், துணைத்தலைவர் மனோபாலா உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் வந்தார்கள். ''என்னை நீக்க செயற்குழுவுக்கு அதிகாரமில்லை; பொதுக்குழு உறுப்பினர்கள் சொல்லட்டும் ராஜினாமா செய்கிறேன்'' என்ற ரவிவர்மாவோ தனக்கு ஆதரவாக பொதுக்குழுவில் ஆள் இருப்பார்கள் என நம்பி வந்தார்.

நரேன்
நரேன்
நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. அலுவலகத்துக்கு வரத் தடை!- உச்சக்கட்ட மோதலில் சின்னத்திரை நடிகர் சங்கம்

சுமார் 1,200 உறுப்பினர்களில் பொதுக்குழுவுக்கு 200 பேர்கூட வரவில்லை. அங்கேயே ரவிவர்மாவுக்கு முதல் வெற்றி கிடைத்து விட்டது. இருந்தாலும் நரேன் தரப்பு தளராத முயற்சியுடன், ரவிவர்மா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்ய, இளம் நடிகர்கள் சிலர், எடுத்த எடுப்பிலேயே 'மொத்த நிர்வாகமும் சரியில்லை' எனக் குரல் எழுப்பத் தொடங்கினார்கள். தொடர்ந்து கூட்டத்தில் ஒரே கூச்சல் குழப்பம். கடைசியில் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் ஆளாளுக்கு உறுமிக்கொண்டு வெளியேறிவிட்டார்கள். நல்லவேளையாகக் கைகலப்பு ஏதுமில்லை.

அவசரப் பொதுக்குழு அல்லோலகல்லோலப்பட்ட மறுநாள் சங்க அலுவலகம் சென்ற ரவிவர்மாவை அப்போதும் அலுவலகத்துக்குள் நுழைய விடவில்லை. ஆக தற்போது, தலைவராலும் உள்ளே செல்ல முடியவில்லை. செயலாளர் உள்ளிட்ட மற்றவர்களாலும் போக முடியவில்லை. அப்படியானால் அடுத்து? ''டிசம்பர் மாதம் வழக்கமான பொதுக்குழு கூடும், அப்பத்தான் தெரியும்'' என்கிறார்கள்.

ரவி வர்மா தலைமையிலான டிவி நடிகர் சங்கம்
ரவி வர்மா தலைமையிலான டிவி நடிகர் சங்கம்
"உங்களுக்கு மட்டுமா, விஜய் சேதுபதிக்கே அசெளகரியங்கள் இருந்திருக்கலாம்!" - சின்னத்திரை கலைநிகழ்ச்சி சர்ச்சை

இதற்கிடையில் சங்கத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கடந்த ஒரு வருடத்தில் அலுவலகத்துக்கு வந்த நாள்கள் என ஒரு பட்டியல் வாட்ஸ்அப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் துணைத்தலைவர் மனோபாலா ஒரு வருடத்தில் 8 நாள்களே வந்துள்ளதாகவும் செயற்குழு உறுப்பினர் டி.பி.கஜேந்திரன் ஒரு நாள் மட்டுமே வந்துள்ளதாகவும் இருக்கிறது.

மனோபாலாவிடம் இந்தப் பட்டியல் குறித்துக் கேட்டேன்.

''ஆமா தம்பி. நானும் அந்த லிஸ்டைப் பார்த்தேன். ஒண்ணும் வேணாம், எனக்கு மாதமொரு சம்பளத்தை ஃபிக்ஸ் பண்ணித் தந்திடட்டும், 9 மணிக்கெல்லாம் ஆபீஸ் போயிடுறேன். சாயங்காலம் 5 மணி வரைக்கும் உட்கார்ந்திருக்கேன். இப்படி லிஸ்ட் தயாரிச்சு சுத்துக்கு விடறதை ஒரு வேலைன்னு செய்திருக்காங்களே, என்னெத்தச் சொல்ல? எந்தச் சங்கத்துலயுமே தலைவர், செயலாளர், பொருளாளர்தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. மத்தவங்க தவறாம மீட்டிங் வர்றாங்களா, அது போதும்.

மனோபாலா
மனோபாலா
"விஜய் சேதுபதி நன்கொடை, தலைவர் மீது ஊழல் புகார்!"- சின்னத்திரை நடிகர்சங்கத்தைக் கலங்கடிக்கும் கடிதம்

சினிமா நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம்னு நிறைய சங்கத்துல இருக்கேன். எல்லா இடத்துலயுமே இதுதான் வழக்கம். செயற்குழு மீட்டிங் வர கன்வேயன்ஸ் போட்டாலே 'இது எதுக்கு'னு கேக்குறோம். அப்படியிருக்க, இங்க யார்கிட்ட அட்டென்டன்ஸ் தூக்கிட்டு வர்றீங்க? வேற ஒண்ணுமில்ல, சங்கத்துல கொஞ்சம் பணம் சேர்ந்திடுச்சு. அது பலர் கண்ணை உறுத்திட்டிருக்கு. அதுக்குத்தான் அடிச்சிக்கிறாங்க. முட்டி மோதட்டும் என்னதான் நடக்குதுனு பார்ப்போம்'' என்றார் மனோபாலா.

அடுத்த கட்டுரைக்கு