விஜய் டிவியில் தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் ‘வைதேகி காத்திருந்தாள்’.
கடந்த டிசம்பர் மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியலில் பிரஜின் ஹீரோவாகவும் சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வந்தனர்.
இந்நிலையில் தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளால் சீரியலுக்கு கால்ஷீட் தருவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறினார் பிரஜின். பிரஜின் வெளியேறி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் புதிய ஹீரோவாக நடிக்க பல ஹீரோக்களிடம் பேசி வந்தது சேனல்.

விஜய் டிவியில் ஏற்கெனவே சில சீரியல்களில் நடித்திருந்த நடிகர் தினேஷ், பிரஜினுடன் சின்னத்தம்பி சீரியலில் நடித்த லோகேஷ் மற்றும் புதுமுக நடிகர் ஒருவருடனும் பேசி வந்ததார்கள். நடிகர் தினேஷிடம் சம்பளம் முதலான விஷயங்கள் வரை பேசப்பட்டு விட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்தச் சூழலில் என்ன நடந்ததோ, தற்போது கடைசியாக நடிகர் முன்னாவை பிரஜினுக்குப் பதிலாக ‘வைதேகி காத்திருந்தாள்’ தொடரில் ஹீரோவாகக் கமிட் செய்திருக்கிறார்கள். முன்னா நேற்று முதல் ஷூட்டிங் வருகிறாராம்.
முன்னா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த ‘ராஜபார்வை’ தொடரில் நடித்தவர்.