Published:Updated:

``என் செண்பகம் நினைவு நாளில் ஒரு புத்தகம், ஒரு நாடகம்!'' - `தறி' மு.ராமசாமி

மு.ராமசாமி
மு.ராமசாமி ( படங்கள்: கே.ராஜசேகரன் )

இவரின் உணர்வுபூர்வமான நடிப்பு, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் 'தறி' சீரியலின் தனி அடையாளம்.

காஞ்சிபுரம் கடைவீதிகளில் அவர் நடந்துசென்றால் பெரும் கூட்டம் கூடுகிறது. 'தறி தாத்தா நல்லா இருக்கீங்களா' என்ற நெசவாளர்களின் நலம் விசாரிப்பில் உருகிப்போகிறார், மு.ராமசாமி. தறியும், தறி சார்ந்த வாழ்வின் ஊடாக வாழ்ந்து வரும் இவரின் உணர்வுபூர்வமான நடிப்பு, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் 'தறி' சீரியலின் தனி அடையாளம்.

மு.ராமசாமி
மு.ராமசாமி
படங்கள் கே.ராஜசேகரன்

'பருத்தி வீரன்', 'களவாணி' உள்ளிட்ட திரைப்படங்களில் அசத்திய இவர், சின்னத்திரை சீரியல்களிலும் தனி முத்திரை பதித்து வருபவர். எழுத்தாளர், நாடக ஆசிரியர், பேராசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்ட மு.ராமசாமியிடம் பேசினோம்.

"என்ன சொல்றதுன்னே தெரியல. 'தறி' சீரியல்ல நெசவு மக்களுக்காகப் போராடக்கூடிய, அவங்க வாழ்க்கையில உள்ள பிரச்னைகளைப் பேசக்கூடிய கதாபாத்திரத்துல வர்றேன். பட்டு நெசவுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்துலதான் ஷூட்டிங் நடக்குது. படப்பிடிப்பை முடிச்சுட்டு, எப்போ வெளியே போனாலும், நெசவாளர்கள் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு சூழ்ந்துக்கிறாங்க. எங்களோட கஷ்டங்களையெல்லாம் நீங்க பேசுறீங்க; ரொம்ப நன்றினு நெகிழ்ச்சியா பேசுறாங்க.

நெசவு மக்கள் அவங்கள்ல ஒருத்தராதான் என்னைப் பார்க்கிறாங்க. இதை என்னால சந்தோசமா எடுத்துக்க முடியல. மனசு பாரமாகுது.
`தறி' மு.ராமசாமி

சொல்லப்போனா, அவங்கள்ல ஒருத்தராகத்தான் நெசவு மக்கள் என்னைப் பார்க்கிறாங்க. இதை என்னால சந்தோஷமா எடுத்துக்க முடியல, மனசு பாரமாகுது. இவங்களுக்கு என்னால என்ன செஞ்சுட முடியும்? வயிற்றுப் பசியைப் போக்குற விவசாயிக்கு என்ன நிலைமையோ, அதே பரிதாப நிலையிலதான், மானத்தைக் காக்குற நெசவாளர்களும் இருக்காங்க.

நெசவுத் தொழில் செத்துக்கிட்டிருக்கு. தறியோடவே வாழ்ந்துகிட்டிருக்கிற இவங்களோட கண், கை, கால்னு உடல் முழுவதும் இதுக்குள்ளேயேதான் கெடக்குது. நகரமயமாதல் இவங்களோட நெசவு வாழ்க்கையில பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. நூலைப் பக்குவப்படுத்த தெருவுல இழுத்துக்கட்டித்தான் சரி செஞ்சாகணும்.

நகரமயமாதல் நெசவு வாழ்க்கையில பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு.
`தறி' மு.ராமசாமி
`கலர்ஸ் `திருமணம்' சீரியலின் இயக்குநர் திடீர் மாற்றம்.  யார் அந்தப் புதிய இயக்குநர்?

முன்னாடியெல்லாம் நெசவு மக்கள் வாழ்ற தெருக்கள்ல இதுக்கான சுதந்திரம் இருந்துச்சு. வீடுகளும், வாகனங்களும் அதிகமானதால இப்போ அவங்க திண்டாடி நிற்கிறாங்க.

இதுமாதிரி இன்னும் பல நெருக்கடி. இதையெல்லாம் நான் பேசி நடிக்கிறதுனால, என்னை நெசவு மக்கள் உச்சத்துல வெச்சுப் பார்க்கிறாங்க. நடிப்புக் கலைக்கு இப்படி ஒரு மதிப்பா, ஊடகத்துக்கு இப்படியொரு வலிமையான்னு வியப்பா இருக்கு. ஊடகத்துக்கெல்லாம் நடிக்கமாட்டேன்னு ஒருகாலத்துல பிடிவாதமா இருந்தவன் நான். என் மனைவி செண்பகத்தாலதான் வாழ்க்கையே மாறுச்சு." கனத்த மனதோடு பழைய நினைவுகளில் மூழ்குகிறார், மு.ராமசாமி.

மு.ராமசாமி
மு.ராமசாமி
படங்கள் : கே.ராஜசேகரன்

"தெருவுல நாடகம் போட்டுக்கிட்டு இருந்த ஒரு சாதாரண ஆள் நான். மதுரை பாத்திமா கல்லூரியில பேராசிரியையா வேலை பார்த்துக்கிடிருந்த செண்பகம், என் நடிப்பை நேசிச்சாங்க. நாங்க ரெண்டுபேரும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டோம். ஊடகத்துல நடிக்கிறதையே விரும்பாத என்னை, கலைஞர் கதை வசனத்துல உருவான 'தென்பாண்டிச் சிங்கம்' சீரியல்ல நடிக்கச் சொல்லி அணுகினாங்க. நான், வேண்டாம்னு மறுத்தேன். என் மனைவிதான், 'இது ஒரு பெரிய வாய்ப்பு. நீங்க நடிச்சே ஆகணும்'னு பிடிவாதமா இருந்தாங்க.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 14-ஆம் தேதி என் மனைவி நினைவாக ஒரு புத்தகம் வெளியிடுறதையும், புதுசா ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்றதையும் வழக்கமா வெச்சிருக்கேன்.
`தறி' மு.ராமசாமி

என்னை டிவி-யில பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசை. அவங்களுக்காகவே அந்த சீரியல்ல நடிச்சேன். எப்போ ஒளிபரப்புவாங்கனு ஆர்வமா இருந்த சமயத்துலதான், என் மனைவிக்குப் புற்றுநோய் வந்திடுச்சு. அவங்க ரொம்ப ஆசைப்பட்டதனால, படப்பிடிப்புல எடுத்த என்னோட போட்டோவைக் கொண்டுவந்து காட்டினோம். எப்போ டிவி-யில ஒளிபரப்புவாங்கனு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. 1998-ஆம் வருடம் மார்ச் 14-ஆம் தேதி தூர்தர்ஷன்ல 'தென்பாண்டிச் சிங்கம்' முதல் எபிசோடு ஒளிப்பரப்பாச்சு. ஆனா, அதை நாங்க பார்க்க முடியல." ராமசாமியின் குரல் தழுதழுக்கிறது.

Vikatan

"அன்னைக்குதான் என் மனைவி இறந்துபோனாங்க. ஒவ்வொரு வருடமும் மார்ச் 14-ஆம் தேதி என் மனைவி நினைவாக ஒரு புத்தகம் வெளியிடுறதையும், புதுசா ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்றதையும் வழக்கமா வெச்சிருக்கேன். முடியாதவங்களுக்கு என்னால முடிஞ்ச சில உதவிகளும் செஞ்சுக்கிட்டிருக்கேன்.

'தென்பாண்டிச் சிங்க'த்துக்குப் பிறகு சினிமா, சீரியல்னு என் நடிப்புப் பயணம் போய்க்கிட்டிருக்கு. நடிப்புக் கலைக்கு என்னைக்குமே ஓய்வு கிடையாது. இதுக்கிடையில, தமிழ்ப் பல்கலைக்கழகத்துல நாடகத்துறை பேராசிரியரா இருந்த நான், பணி நிறைவுக்குப் பிறகும், மதுரையில மாணவர்களுக்கு நடிப்பு சொல்லிக்கிட்டிருக்கேன்.
`தறி' மு.ராமசாமி

நடிப்புகூட ஒரு படிப்புதான். என் மனைவியின் நினைவுகளோடு, என் படிப்பும் தொடர்ந்துக்கிட்டிருக்கு!" எனச் சொல்லும் மு.ராமசாமியின் யதார்த்த வார்த்தைகள் நம்மை ஏதோ செய்கிறது.

பின் செல்ல