சினிமா
Published:Updated:

விகடன் TV: “என்னை ராணுவம் சுத்தி வளைச்சது!”

ஓ.ஏ.கே சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.ஏ.கே சுந்தர்

‘விருமாண்டி’ திரைப்படம்தான் எனக்கான அடையாளத்தைக் கொடுத்துச்சி.

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் நாம் நன்கறிந்தவர், ஓ.ஏ.கே சுந்தர். இவர் பிரபல நடிகர் ஓ.ஏ.கே தேவரின் மகன். 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் ஜொலித்துக்கொண்டிருப்பவருடன் ஒரு குட்டிக் கலந்துரையாடல்...

“என்னுடைய ஏழு வயசில அப்பா இறந்துட்டாங்க. அப்பாவைப் பற்றிப் பல விஷயங்கள் அம்மா சொல்லித்தான் தெரிஞ்சிகிட்டேன். ஆரம்பத்தில் மீடியாவிற்குள் நுழையணுங்கிற எண்ணமெல்லாம் எனக்கில்ல. அப்பாவைத் தெரிந்தவர்கள் மூலமாதான் எனக்கான பாதை திறந்தது. ஆரம்பக்காலங்களில் எப்படி நடிக்கணும்னு தெரியாம ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன். பலரும் ‘அப்பா அளவுக்கு நீ நடிக்கலை’ன்னு முகத்துக்கு நேராகூடச் சொல்லியிருக்காங்க. இப்ப குறையெல்லாம் சரி செய்துகிட்டு ‘அப்பாவைப் போல பையனும் நல்லா நடிக்கிறான்’னு பெயர் வாங்கியிருக்கேன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு.

விகடன் TV: “என்னை ராணுவம் சுத்தி வளைச்சது!”

‘விருமாண்டி’ திரைப்படம்தான் எனக்கான அடையாளத்தைக் கொடுத்துச்சி. சினிமாவில் எந்த அளவுக்கு பிஸியா இருப்பேனோ அதைவிட அதிகமா சீரியலில் பிஸியா நடிச்சிட்டிருப்பேன். எந்த சேனலை மாத்தினாலும் அந்த சேனலில் ஏதோவொரு சீரியலில் நடிச்சிட்டிருப்பேன். நிறைய மெகா சீரியல்களில் நடிச்சதனால என்னை ‘மெகா சுந்தர்’னு சொல்லுவாங்க” என்றவரிடம் இயக்குநர் ஹரியுடனான பயணம் குறித்துக் கேட்டோம்.

“ ‘ஐயா’வில் ஆரம்பிச்ச பயணம் இப்ப ‘யானை’ வரைக்குமே தொடர்ந்துட்டிருக்கு. ‘யானை’யில் இதுவரை நான் நடிக்காதவொரு புது கெட்டப்பில் நடிக்கிறேன். நிச்சயம் அந்த கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கும்’’ என்றவர், கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்திலும் நடிக்கிறாராம்.

“சுந்தர். சி நடிச்ச ‘வாடா’ பட ஷூட்டிங் ரிஷிகேஷ்ல நடந்துச்சி. அந்தப் படத்துக்காக ‘பின்லேடன்’ கெட்டப் போட்டிருந்தேன். திடீர்னு என்னைத் தீவிரவாதின்னு நினைச்சி இந்தியன் ஆர்மி சுற்றி வளைச்சிட்டாங்க. பக்கத்தில டைரக்டர், புரொடக்‌ஷன் டீம் எல்லாரும் இருந்ததால அவங்க பேசிப் புரிய வச்சிட்டாங்க. பிறகு, கேஷுவலா பேசி போட்டோலாம் எடுத்துட்டுதான் போனாங்க.

என் ஃபேமிலிதான் என் முதல் விமர்சகர்கள். எந்தப் படம் நடிச்சாலும் உடனே பார்த்துட்டு ஒப்பீனியன் சொல்லிடுவாங்க. அவங்க சொல்ற கமெண்ட்ஸ் தான் ஆடியன்ஸும் சொல்லுவாங்க. அதனால, ரிசல்ட்டை நான் வீட்டிலேயே தெரிஞ்சிப்பேன்’’ என்கிறார் சுந்தர்.