Published:Updated:

`மனைவியும் மகளும் ஊர்ல இருக்காங்க.. இந்த குழந்தைகள்தான் எனக்கு ஆறுதல்!’- `வள்ளி' ராஜ்குமார் ஷேரிங்ஸ்

பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியல்..
பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியல்..

பொம்மு கதாபாத்திரத்தில் ரித்வா நடிக்குறாங்க. அத்விக், சந்தோஷ், சஞ்சய் ஆகியோரும் லீட் ரோல்ல நடிக்குறாங்க.

பாரதி கண்ணம்மா, அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட ஹிட் சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் ராஜ்குமார் தற்போது பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்னும் புதிய சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார். சீரியலில் அவரது கதாபாத்திரம் குறித்து அவரிடமே கேட்டோம்..

இயக்குநர் பிரவீன் பெனட் உடன் ராஜ்குமார்..
இயக்குநர் பிரவீன் பெனட் உடன் ராஜ்குமார்..

``சன் டிவியில் வள்ளி சீரியல் முடிந்ததும் கொஞ்சம் கூட இடைவெளி கிடைக்கல. உடனே விஜய் டிவி-யில் அடுத்த சீரியல் கமிட் ஆகிட்டேன். சீரியல் பெயர் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. ப்ரோமோ சமீபத்தில்தான் வெளியாச்சு. அதுமட்டுமல்லாம பாரதி கண்ணம்மா, அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடிச்சிட்டு இருக்கேன்.’’

``பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த சீரியலில் மூன்று குழந்தைகள்தான் லீட் ரோலில் நடிக்குறாங்க. அவங்களை சுத்திதான் கதை நகரும். மூன்று அண்ணன் தம்பி. அவங்க குடும்பம், குழந்தைகள். அந்தக் குழந்தைகள்ல ஒரு குழந்தை தொலைந்து போய்டும். இதுதான் கதையின் கரு. அந்த மூன்று அண்ணன் தம்பியில் நானும் ஒருத்தன்.’’

பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியல்..
பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியல்..

முழுக்க முழுக்க குடும்ப உறவுகளையும், அவர்களுக்குள்ள இருக்க இணக்கத்தையும் பிரதிபலிக்குற சீரியல். பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட ஹிட் சீரியல்களை இயக்கிய பிரவீன் பெனட்தான் பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலையும் இயக்குகிறார். ஒவ்வொரு குழந்தையையும் பார்த்துப் பார்த்து தேர்வு பண்ணியிருக்கார். இந்தச் சின்ன வயசிலேயே அபாரமான நடிப்பை வெளிப்படுத்துறாங்க. பிப்ரவரி 3-ம் தேதி இந்த சீரியல் வெளியாகுது.

``பொம்மு கதாபாத்திரத்தில் ரித்வா நடிக்குறாங்க. அத்விக், சந்தோஷ், சஞ்சய் ஆகியோரும் லீட் ரோல்ல நடிக்குறாங்க. நிஜத்துல நான் ரொம்ப குடும்ப சென்டிமென்ட் உள்ள ஆளு. என் மனைவியும் மகளும் ஊர்ல இருக்காங்க,. நான் வாரத்துக்கு ஒருவாட்டிதான் போய் பார்ப்பேன். அவங்கள பார்க்காம ஒரு வாரம் ரொம்ப கஷ்டமா இருக்கும். ரொம்ப மிஸ் பண்ணுவேன். சில சமயம் சீரியலில் நடிக்கும் ரித்வா, அத்விக் ஆகியோரை பார்க்கும்போது என் மகள் ஞாபகம் வந்துடும். அந்தச் சமயத்துல அவங்களை என் பக்கத்துல கூப்பிட்டுப் பேசிட்டு இருப்பேன். மனசு லேசாகிடும். ஆறுதலா இருக்கும்.

மனைவி  ராகவி, மகள் கிருத்திகாவுடன் ராஜ்குமார்..
மனைவி ராகவி, மகள் கிருத்திகாவுடன் ராஜ்குமார்..

சமீபத்துல என் பிறந்த நாளுக்கு என் மனைவி மறக்க முடியாத சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. என்னைப் பத்தி அவங்க சொல்ல நினைக்குற விஷயங்கள், எங்க காதல் நினைவுகள் எல்லாத்தையும் வாசகங்களா எழுதி எங்க பெட்ரூம் முழுக்க ஆங்காங்கே ஒட்டி வெச்சிருந்தாங்க. அது மட்டுமல்லாம மகள், நான் அவங்கன்னு மூணு பேரும் அன்னைக்கு ஒரே மாதிரி டிரஸ் பண்ணியிருந்தோம். அந்த டிரெஸ் கோடும் என் மனைவி ஏற்பாடு செய்ததுதான். அந்த நாள் நிறைவான நாளா இருந்துச்சு’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

பின் செல்ல