Published:Updated:

பிக்பாஸ்:``ரொம்பவே ஜாலியா இருக்கத்தான் போறேன்" -'வைல்டு கார்ட்' என்ட்ரி கொடுத்த சஞ்சீவின் வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் வைல்டு கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் வெங்கட் களம் இறங்கியிருக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் வைல்டு கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் வெங்கட் களம் இறங்கியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்திலேயே இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். கடந்த வாரம் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பப்பட்டார்.

இந்த வாரத்தில் நடன கோரியோகிராபர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த நிலையில் தற்போது சஞ்சீவும் சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சஞ்சீவ்
சஞ்சீவ்

'திருமதி செல்வம்' தொடரின் மூலம் பிரபலமானவர், சஞ்சீவ். சினிமா உலகிலும், சீரியல் உலகிலும் இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகை 'பிரீத்தி'யை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் சஞ்சீவ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். அதே படத்தில் நடித்த சிபி போட்டியாளராக பங்கேற்கும் நிலையில் இன்னொரு மாஸ்டர் பட நடிகரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சஞ்சீவ்
சஞ்சீவ்

சஞ்சீவ் என்ட்ரியானது தொடர்பான புரோமோவினை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குச் செல்வதற்குமுன்பு, சஞ்சீவ் பேசிய வீடியோ ஒன்றை சின்னத்திரை நடிகர் தீபக் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். அதில்,

'நான் நானாகத்தான் இவ்வளவு நாளா இருந்திருக்கேன். அந்த வீட்டுக்குள்ளேயும் நான் அப்படித்தான் இருக்கப் போறேன். கோபம், சிரிப்பு, அழுகை, சண்டைன்னு அந்த நேரத்தில் தோணுறதை பண்ணுவோம். நான் ரொம்பவே ஜாலியா இருக்கத்தான் போறேன்.. பார்க்கலாம்' - சஞ்சீவ்

சஞ்சீவ் என்ட்ரி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மறக்காமல் கம்மெண்ட்டில் பதிவிடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு