Published:Updated:

`காலத்துக்கும் நினைவா இருக்கும்!' - அப்பாவுக்கு சிலை எடுத்த நடிகர் சரவணன்

காலத்துக்கும் அப்பா அம்மா நினைவா இருக்கட்டும்னு அவங்க வசிச்ச வீட்டை வித்து வாங்கின நிலத்துல எழுப்பியிருக்கேன்

actor saravanan
actor saravanan

சேலம் மாவட்டம் வட்டக்காடு கிராமத்தில் நடிகர் சரவணன் கட்டியிருக்கும் விநாயகர், வீரமுனி திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா வருகிற 30-ம் தேதி (30/10/19) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Actor Saravanan
Actor Saravanan

சரவணனிடம் பேசினோம். ``காலத்துக்கும் அப்பா அம்மா நினைவா இருக்கட்டும்னு அவங்க வசிச்ச வீட்டை வித்து வாங்கின நிலத்துல இந்தக் கோவிலை எழுப்பியிருக்கேன். வீரமுனி பீடத்தின் பக்கத்துலேயே அப்பாவுக்கும் சிலை எடுத்திருக்கேன். அக்டோபர் 30-ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையா நடக்குது. சேலம் மாவட்ட ஆட்சியர், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்துக்க இருக்காங்க. அதேபோல எங்கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட போட்டியாளர்களும் திரளா கலந்துக்க இருக்காங்க'' என்றார்.

சரவணனுடன் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்களாம். தவிர, இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னர் ரித்விகா, நடிகர் பரணி ஆகியோரும் வருகையை உறுதி செய்திருக்கிறார்களாம்.