Published:Updated:

"12 வருஷம் கழிச்சுக் கிடைச்சாலும் எனக்குத் தரப்படுகிற மாநில விருதுல ஒரு மெசேஜ் இருக்கு!" – ஸ்ரீ

ஶ்ரீ குமார்

"இப்ப வழங்கப்பட்டிருக்கிற சீரியல் விருதுகள்லயே ரெண்டு சீரியல்களுக்கு விருது வாங்குகிற ஒரு நடிகர் நான் மட்டும்தான். எனக்குத் தரப்பட்ட விருதுல சீரியல் நடிகர்களுக்கு ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கு." – ஸ்ரீ

"12 வருஷம் கழிச்சுக் கிடைச்சாலும் எனக்குத் தரப்படுகிற மாநில விருதுல ஒரு மெசேஜ் இருக்கு!" – ஸ்ரீ

"இப்ப வழங்கப்பட்டிருக்கிற சீரியல் விருதுகள்லயே ரெண்டு சீரியல்களுக்கு விருது வாங்குகிற ஒரு நடிகர் நான் மட்டும்தான். எனக்குத் தரப்பட்ட விருதுல சீரியல் நடிகர்களுக்கு ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கு." – ஸ்ரீ

Published:Updated:
ஶ்ரீ குமார்
தமிழக அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் நாளை (4/9/22) சென்னையில் நடக்கும் விழாவில் வழங்கப்பட இருக்கின்றன. 2009-ம் ஆண்டு முதல் 2014 வரையிலான ஆண்டுகளுக்கான விருதுகள் இவை. பல்வேறு காரணங்களால் வருடக்கணக்கில் தாமதமாகி ஒரு வழியாக நாளை வழங்கப்பட இருக்கின்றன. விருது பெறுபவர்களுக்குக் காசோலை, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கின்றன.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க இருக்கிற இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விருதுகளை வழங்க இருக்கிறார். இதில் 2009ம் ஆண்டுக்கான சிறந்த கதாநாயகன் விருதை இரண்டு சீரியல்களில் நடித்ததற்காக நடிகர் ஸ்ரீ குமார் பெறுகிறார்.

அன்றைய நாள்களில் பரபரப்பாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் இவர். அதன் பிறகு சில வருடங்கள் சீரியல்களில் நடிக்காமலிருந்தவர், தற்போது மீண்டும் செகண்ட் ரவுண்டை டிவியில் தொடங்கி நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த ‘யாரடி நீ மோகினி’ தொடர் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து இப்போது ‘வானத்தைப் போல’ தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடருக்குமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஶ்ரீ மனைவியுடன்
ஶ்ரீ மனைவியுடன்

ஸ்ரீயிடம் வாழ்த்துக்களைச் சொல்லிப் பேசினோம்.

"'சிவசக்தி' சீரியல் முடிஞ்சு 12 வருஷமாச்சு. குறிஞ்சிப் பூ பூக்கிற மாதிரி இந்த விருது இப்ப என் கைக்குக் கிடைச்சிருக்கிறதுக்கு. உண்மையிலேயே ஜீசஸ்க்கு நன்றி சொல்லியே ஆகணும். ’இவ்ளோ தாமதமா’ங்கிற விஷயத்துக்குள் நாம போக வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். அரசு இயந்திரம்னா நிர்வாக ரீதியா சில கட்டுப்பாடுகள், விதிமுறைகள்ன்னு இருக்கலாம்.

இருந்தாலும் அரசு வழங்குகிற போது அந்த விருதுக்கு ஒரு தனி மரியாதை, கௌரவம் இருக்கு. இன்னைக்கு இந்த விருதுகளை வாங்குற ஒவ்வொருத்தரும் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்ப வழங்கப்பட்டிருக்கிற சீரியல் விருதுகள்லயே ரெண்டு சீரியல்களுக்கு விருது வாங்குகிற ஒரு நடிகர் நான் மட்டும்தான். ‘சிவசக்தி' மற்றும் 'உறவுகள்' ரெண்டு தொடர்கள்ல நடிச்சதுக்காக சிறந்த கதாநாயகன் விருதை எனக்குத் தந்திருக்காங்க. இந்த நேரத்துல ரெண்டு சீரியல்களின் தயாரிப்பாளர்களான சான் மீடியா மற்றும் ஹோம் மீடியா நிறுவனங்களுக்கும் சீரியல் ஒளிபரப்பான சன் டிவிக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

அதேபோல எனக்குத் தரப்பட்ட விருதுல சீரியல் நடிகர்களுக்கு ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கு. அதாவது பொதுவா பிரைம் டைம்ன்னு சொல்லப்படுகிற ஆறரை மணியில இருந்து பத்து மணிக்குள்ளான ஸ்லாட்டுல ஒளிபரப்பாகுற சீரியல்களே சிறந்ததுன்னும் அதுல நடிக்கிற ஆர்ட்டிஸ்டுகள்தான் பிரபலமாகுறாங்கன்னும் ஒரு தவறான கணிப்பு இன்னைக்கும் இங்க இருக்கு. அப்படி இல்லைங்கிறதை எனக்குத் தரப்பட்ட விருதுகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

ஷமிதா - ஶ்ரீகுமார் இருவரும் மகளுடன்...
ஷமிதா - ஶ்ரீகுமார் இருவரும் மகளுடன்...

'உறவுகள்' காலை 11.30க்கும் 'சிவசக்தி' இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகிய சீரியல்கள். அதனால பகல் நேரத்துல ஒளிபரப்பாகி வர்ற சீரியல்களில் நடித்து வரும் ஆர்ட்டிஸ்டுகளுக்கு எனக்குக் கிடைச்ச இந்த விருதுகள் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் நிச்சயம் தரும்ன்னு நான் நம்புறேன்’’ என்கிறார் இவர்.

இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது. ‘சிவசக்தி’ தொடரில்தான் ஸ்ரீயும் பின்னாளில் அவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகை ஷமிதாவும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி சேர்ந்து நடித்தார்கள்.