Published:Updated:

``மனைவிக்கும் வயித்துல இருக்க குழந்தைக்கும் பயம் போகணும்னுதான் அதை செஞ்சேன்!'' - சிங்கப்பூர் தீபன்

மனைவிகிட்ட `எனக்குப் பொண்ணு, உனக்குப் பையன்'னுதான் சொன்னேன். அத்தோடு நிறுத்திக்காம டெலிவரி ஆகறதுக்கு முன்னாடியே ரெண்டு குழந்தைகளுக்கும் பெயரும் செலக்ட் பண்ணிட்டோம். டிரெஸ்கூட எடுத்துட்டோம். கடைசியில அந்த ஆச்சர்யமும் நிகழ்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உற்சாகத்தில் இருக்கிறார், `கலக்கப் போவது யாரு', `சிரிச்சா போச்சு' புகழ் `சிங்கப்பூர்' தீபன். `ஆண் ஒன்று பெண் ஒன்று' என இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதே மகிழ்ச்சிக்குக் காரணம்.

வாழ்த்துகள் சொல்லிப் பேசினேன்.

``ஸ்டேஜ் ஷோ'க்களைத் தாண்டி டிவி, சினிமாப்பக்கம் வர வாய்ப்பு கிடைக்காம எவ்வளவோ பேர் இன்றைக்கும் கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அதை நினைக்கிறப்ப `நாலு பேருக்கு நம்மைத் தெரியுதே'ங்கிறதை நினைச்சு திருப்தி அடையுறேன். டிவியில பிரபலம் ஆகறதுக்கு முன்னாடி கஷ்டமான பல சூழல்களைக் கடந்து வந்திருக்கேன். அப்போவெல்லாம் சந்தோஷமான காலம்கிறது நமக்கெல்லாம் வரவே வராதான்னு தோணும். `கலக்கப் போவது யாரு' ஷோல செமி ஃபைனல் வரைக்கும் வந்தேன்.

சிங்கப்பூர் தீபன்
சிங்கப்பூர் தீபன்

அந்த நாள்கள்ல `பேரு பெத்த பேரு தாக நீலு லேது'னு (பேருதான் பெரிசு குடிக்கத் தண்ணீர் இல்லை) ஒரு சொலவடை சொல்வாங்களே அந்தக் கதைதான். அதாவது நிகழ்ச்சி மூலமா ரசிகர்களை சிரிக்க வைப்போமே, அதுக்குப் பின்னாடி பெரிய வேடிக்கை இருந்தது. அப்ப நான் தனியார் பேங்க்ல எக்ஸிக்யூட்டிவா இருந்தேன். அப்பதான் ஷோவுக்குப் போயிட்டிருந்தேன். மாசம் பிறந்தா வீட்டுல சம்பளம்னு ஒரு தொகையைத் தந்தாகணும். ஷோவுக்குப் போறோமே அதுக்கான செலவெல்லாம் எங்களோடதுதான். சேனல்ல டீ பிஸ்கட் வேணும்னா தருவாங்க. சில நாள்கள்ல அதுவும் இருக்காது. சரியான அங்கீகாரம்னா `சிரிச்சா போச்சு'-க்குப் பிறகே கிடைச்சது.

இதுக்கிடையில காதல் வேற வந்திடுச்சு. சுகன்யாவைக் காதலிச்சிட்டிருந்த நாள்கள் சுகமான நாள்களா இருந்தாலும், `இந்தக் காதல் சக்சஸ் ஆகுமா'ங்கிற பீதி மனசுக்குள்ள ஒரு ஓரத்துல இருந்துகிட்டே இருந்தது. எப்படியோ வீட்டுல சம்மதிக்க வச்சு ஒருவழியா கல்யாணம் பண்ணோம்.`டிவி, சினிமால இருக்கிறவனுக்கெல்லாம் எப்படிக் கல்யாணம் முடியும்'னு கேட்டவங்க முன்னாடி குடும்பம் இப்பக் குழந்தைகள்னு இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சிருக்குன்னா, எல்லாம் கடவுள் அருள்.

மனைவி குழந்தைகளுடன் சிங்கப்பூர் தீபன்
மனைவி குழந்தைகளுடன் சிங்கப்பூர் தீபன்
``நானும், என் மகளும் இருக்க எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு வெறுப்பேத்துவார்!'' -சீரியல் ஜெயஶ்ரீ

அதேபோல நீங்க நம்பறீங்களோ இல்லையோ, ரெட்டைக் குழந்தைகள்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் நான் என் மனைவிகிட்ட `எனக்குப் பொண்னு; உனக்குப் பையன்'னுதான் சொன்னேன். அப்படியே கற்பனை பண்ணிணோம். அத்தோடு நிறுத்திக்காம டெலிவரி ஆகறதுக்கு முன்னாடியே ரெண்டு குழந்தைகளுக்கு பெயரும் செலக்ட் பண்ணிட்டோம். டிரெஸ்கூட எடுத்துட்டோம். கடைசியில அந்த ஆச்சர்யமும் நிகழ்ந்தது. நாங்க எதிர்பார்த்த மாதிரியே பையனும் பொண்ணும்!

இந்த இடத்துல இன்னொரு விஷயம் சொல்ல ஆசைப்படறேன். கர்ப்பமா இருக்கற பெண்கள்கிட்ட `அங்க போகாத, இங்க போகாத', அதைச் செய்யாத; இதைச் செய்யாத'னு சில வீடுகள்ல சொல்றாங்க. மாசமா இருக்கிற பெண்கள் ஏற்கெனவே டெலிவரியை நினைச்சு பயத்துல இருப்பாங்க. அவங்ககிட்ட இப்படியெல்லாம் பேசறது நல்லதானு யோசிச்சுப் பாருங்க. அதனால அப்படிச் சொல்லும் எதையும் நான் ஃபாலோ செய்யலை. `பொழுதடையற நேரத்துல வெளியில கூட்டிட்டுப் போக வேண்டாம்'னு சொன்னாங்க. வேணும்னே நைட் ஷோவுக்குக் கூட்டிட்டுப் போனேன். இதை வம்புக்காகச் செய்யலை. அம்மாவுக்கு மட்டுமல்ல வயித்துல உள்ள என் குழந்தைக்கும் பயம் போகட்டும்னுதான் செஞ்சேன்'' என்கிற தீபன், தற்போது `செம்பருத்தி' தொடரிலும் கமிட் ஆகியிருக்கிறார்.

`ரெட்டைக் குழந்தைகள் பிறந்த நேரம்தான் இந்த ஹிட்டு சீரியலுக்குக் கூட்டி வந்திருக்குன்னு நினைக்கிறேன் ப்ரோ' என்கிறார் மகிழ்ச்சியாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு