Published:Updated:

"ஹீரோயினைக் கட்டிக்கிறவங்கதான் ஹீரோன்னா காதல் படத்துல நான்தான் ஹீரோ!" - `பசங்க' சிவக்குமார்

சிவக்குமார்

"'லெஜெண்ட் சரவணா' படத்துல நான் கோ-டைரக்டர் ஆக ஒர்க் பண்ணினேன். அந்தப் படம் முடிஞ்சதும் அடுத்து கன்டின்யூ பண்ண எதுவுமில்லை. நமக்கு ஃபேமிலி கமிட்மென்ட் எல்லாமே இருக்குங்கிறதனால இந்த வாய்ப்பு வந்ததும் தவறவிட மனசில்லை."

Published:Updated:

"ஹீரோயினைக் கட்டிக்கிறவங்கதான் ஹீரோன்னா காதல் படத்துல நான்தான் ஹீரோ!" - `பசங்க' சிவக்குமார்

"'லெஜெண்ட் சரவணா' படத்துல நான் கோ-டைரக்டர் ஆக ஒர்க் பண்ணினேன். அந்தப் படம் முடிஞ்சதும் அடுத்து கன்டின்யூ பண்ண எதுவுமில்லை. நமக்கு ஃபேமிலி கமிட்மென்ட் எல்லாமே இருக்குங்கிறதனால இந்த வாய்ப்பு வந்ததும் தவறவிட மனசில்லை."

சிவக்குமார்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் `தவமாய் தவமிருந்து'. இந்தத் தொடரில் மார்க்கண்டேயன் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவக்குமார். `பசங்க' சிவக்குமாராகத்தான் இவர் நமக்கு பரிச்சயம். பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவரை ஷூட்டிங் இடைவெளியில் சந்தித்துப் பேசினோம்.
 சிவக்குமார்
சிவக்குமார்

"என்னுடைய 25 வருட பயணத்தில் இந்தக் கதாபாத்திரம் எனக்கு கிடைச்சது மிகப்பெரிய பாக்கியமாகத்தான் பார்க்கிறேன். இந்த வயசில ஹீரோவாக நடிப்பேன் என்பதெல்லாம் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று! என் ஃப்ரெண்ட் மூலமாகத்தான் இந்த சீரியல் வாய்ப்பு வந்தது. என்னோட கவனம் முழுக்கவும் டைரக்‌ஷனில் மட்டும்தான்! எப்படியாவது இயக்குநராகிடணும் என்கிற கனவோட பயணிக்கிறவன். அதனால நான் சீரியலில் நடிக்கணும்னு கேட்டப்ப கொஞ்சம் தயங்கினேன்.

'லெஜெண்ட் சரவணா' படத்துல நான் கோ-டைரக்டர் ஆக ஒர்க் பண்ணினேன். அந்தப் படம் முடிஞ்சதும் அடுத்து கன்டின்யூ பண்ண எதுவுமில்லை. நமக்கு ஃபேமிலி கமிட்மென்ட் எல்லாமே இருக்குங்கிறதனால இந்த வாய்ப்பு வந்ததும் தவறவிட மனசில்லை. எப்பவும் ஒரு வேலை முடிஞ்சதும் அடுத்த வேலைக்கு போயிடுவேன். சர்வைவலுக்காக ஓடியே ஆகணும். இந்த சீரியல் வாய்ப்பு வரவும் சரின்னு அவங்களை மீட் பண்ண வந்தேன். என்னைப் பார்த்ததும் என் வயசு கேட்டாங்க... இந்தக் கேரக்டருக்கு நான் செட் ஆவேனான்னு கொஞ்சம் தயங்கினாங்க. ஏன்னா, அவங்களை சந்திக்கப் போகும்போது டி-சர்ட், ஜீன்ஸ் பேண்ட்ல போயிருந்தேன். பிறகு லுக் டெஸ்ட் பார்த்துட்டு ஏதோ சாந்தமான அப்பாவாக இருக்கிறேன்னு டிக் அடிச்சிருக்காங்க. எனக்கு அப்பவும் இந்த கேரக்டர் பண்ணலாமா வேண்டாமான்னுதான் ஓடிட்டு இருந்துச்சு. இந்தக் கதையின் நாயகன் நீங்கதான்னு ஆரம்பத்துல சொன்னாங்க. அப்ப கூட சும்மா சொல்றாங்கன்னுதான் நினைச்சேன். சீரியலுடைய பெயரை ஆரம்பத்தில் 'மார்கண்டடேயன்'னு என் கேரக்டர் பெயரில்தான் இருந்திருக்கு. பிறகுதான் 'தவமாய் தவமிருந்து'ன்னு மாத்தியிருக்காங்க" என்றவரிடம் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் 'சிறந்த நடிகர்' விருது வாங்கிய தருணம் குறித்துக் கேட்டோம்.

 சிவக்குமார்
சிவக்குமார்

"அந்த தருணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். என் பொண்ணோட கடிதம் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று. சினிமாக்காரன்னு சொன்னாலே ஃபேமிலியோட நேரம் செலவழிக்க முடியாது. நான் துணை இயக்குநராக இருந்தப்ப பெரும்பாலும் வெளியூர்லதான் இருந்திருக்கேன். விடியற்காலையில் வீட்டிலிருந்து கிளம்பிடுவேன்... ராத்திரி பசங்க தூங்கின பிறகுதான் வீட்டுக்கு வருவேன். இன்னைக்கு சினிமாவில் இருக்கக் கூடிய பெரும்பாலானவர்களுடைய நிலைமை இதுதான். இப்படியான சூழலில் நமக்கு விருது, பாராட்டு எல்லாம் கிடைக்கும்போது சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷங்களே நம்மளுடைய வலியைக் கடக்க செய்துடுச்சு. 

இந்த சீரியல் பார்க்கிற எல்லாருமே இதை அவங்களுடைய குடும்பமாகத்தான் பார்க்கிறாங்க. நான் சின்ன வயசில ஹீரோவாக ஆகியிருந்தால் இப்படியான கேரக்டர் எனக்குக் கிடைச்சிருக்குமான்னு தெரியல. இந்த சீரியல் எல்லாமே கலந்த கலவையா இருக்கு. எனக்கு ஆக்டிங் ஸ்கோப் நிறையவே இருக்கு. சினிமாவில் கதாநாயகனுக்கு அப்பா, கதாநாயகிக்கு அப்பான்னு நிறைய பண்ணியிருக்கேன். ஆனா, இந்த சீரியல் அது மாதிரி நார்மலான அப்பாவாக இல்ல. ஆக்‌ஷன் ஹீரோ, சென்டிமென்ட், ரொமான்ஸ், காமெடின்னு எல்லாமே கலந்து கட்டி பண்றேன். ரெண்டு நாளில் சிலம்பம் கத்துக்கிட்டு இந்த சீரியலில் சிலம்பமும் சுத்தியிருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்! 

 சிவக்குமார்
சிவக்குமார்

நான் ஒர்க் பண்ணின பெரும்பாலான படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டாகவும், நடிகராகவும் இருந்திருக்கேன். ஹீரோயினைக் கட்டிக்கிறவங்கதான் ஹீரோன்னா 'காதல்' படத்துல நான் தாங்க ஹீரோ! அந்தப் படத்தில் சந்தியாவை செலக்ட் பண்ணினதே நான்தான்! அவங்க அம்மா ஒரு பியூட்டி பார்லர் வச்சிருந்தாங்க. அங்கதான் சந்தியாவை செலக்ட் பண்ணினேன். ஆனா, நான் கேட்டப்ப அவங்க நடிக்க சம்மதம் சொல்லலை. பிறகு எப்படியோ ஓகே சொன்னாங்க" என்றவரிடம் அடுத்தக்கட்ட திட்டம் குறித்துக் கேட்டோம்.

"இயக்குநராக கண்டிப்பா கமர்ஷியலுடன் எதார்த்தமான ஒரு படம் டைரக்ட் பண்ணனுங்கிறதுதான் என் எண்ணம். அதுக்காகத்தான் ஓடிட்டு இருக்கேன். ஒரு புரொடியூசர்கிட்ட கதை எல்லாம் சொன்னேன்... எல்லாம் ஓகே ஆகி சில காரணங்களால் தள்ளிப் போச்சு. ஃபேமிலி இருக்கிறதனால ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயம். ஆனாலும் டைரக்‌ஷன் நோக்கியும் பயணிச்சிட்டேதான் இருக்கேன். சீக்கிரமே இயக்குநராக உங்ககிட்ட பேட்டி கொடுப்பேன்" என தன்னம்பிக்கையுடன் பதில் சொன்னவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம். 

 சிவக்குமார்
சிவக்குமார்

இன்னும் பல விஷயங்கள் குறித்து சிவக்குமார் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!