Published:Updated:

``என் பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணிட்டீங்களே... அப்புறம் ஏன் வர்றீங்க?'' - `தாடி' பாலாஜி பஞ்சாயத்து

Thadi Balaji
Thadi Balaji

``இனிமேலாவது, தயவுசெய்து மரியாதையா நடந்துக்கோங்க. இவ்ளோ நாள் நான் தீபாவுக்கு பயந்து பேசாம இருந்தேன். அவங்களுக்கு கெட்ட பேர் உண்டாகிடும்னு பொறுமையா இருந்தேன். இனிமேல் அப்படி இருக்க மாட்டேன்.''

நடிகர் `தாடி' பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்குமிடையே உருவான பிரச்னை போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வரை போனது எல்லோருக்கும் தெரிந்ததே. இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கிற சூழலில், `பிக்பாஸ்' இரண்டாவது சீசனில் இருவருமே கலந்துகொண்டார்கள். ஷோ முடிந்தபோது, இருவரும் சேர்ந்துவிட்டது போல் காட்டப்பட்டாலும், தற்போது வரை அவர்கள் பிரிந்தே வாழ்ந்துவருகிறார்கள்.

நீதிமன்ற உத்தரவுப்படி, இவர்களின் மகள் போஷிகா, நித்யாவுடன் வசித்துவருகிறார். மாதம் இருமுறை, மகளை `தாடி' பாலாஜி வீட்டுக்கு கூட்டிச்சென்று சில மணி நேரங்கள் அங்கு இருக்கவிடுகிறார் நித்யா.

இந்நிலையில், மறுபடியும் பாலாஜியைத் தொடர்புபடுத்தி இணையத்தில் கடந்த சில தினங்களாக வீடியோ ஒன்று வலம் வந்துகொண்டிருக்கிறது.

Thadi balaji
Thadi balaji
Vikatan

வீடியோவில் பேசும் ராஜ்துரை என்பவர், தன்னை பாலாஜியின் முதல் மனைவியின் கணவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பேசுகிறார்.

வீடியோவில், ``பாலாஜி உங்களால்தான் என் குடும்பத்துல இப்ப பயங்கர பிரச்னை. தொடர்ச்சியா நீங்க ரொம்பத் தவறு பண்ணிட்டு வர்றீங்க. உங்க சினிமா குடும்பம் வேற. என்னோட குடும்பம் வேற. இனிமேலாவது தயவுசெய்து மரியாதையா நடந்துக்கோங்க. இவ்ளோ நாள் நான் தீபாவுக்குப் பயந்து பேசாம இருந்தேன். அவங்களுக்கு கெட்ட பேர் உண்டாகிடும்னு பொறுமையா இருந்தேன். இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். செம கோபத்துல இருக்கேன். இதுக்கு மேல என் வீட்டுக்கு நீங்க வந்தா, உங்க மேல கேஸ் போடுவேன்'' என்கிறார் அவர்.

வீடியோவில், நித்யா பெயரையும் ராஜ்துரை குறிப்பிட்டிருந்ததால், நித்யாவிடம் இந்த வீடியோ குறித்துக் கேட்டோம். ``நானுமே வீடியோவைப் பார்த்தேன். தீபா, பாலாஜியின் முதல் மனைவிங்கிறதும், தருண் அவரோட மகன்கிறதும் உண்மையே. ஆனா, இந்த ராஜதுரை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செஞ்ச பிறகே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார் பாலாஜி. ஆனா, அதன் பிறகும் முதல் மனைவியுடன் தொடர்பை உண்டாக்க அவர் நினைச்சதுதான் எங்களுக்கிடையிலான பிரச்னையின் தொடக்கம். மகனுக்குப் பிறந்தநாள்னு சொல்லி சைக்கிள் வாங்கித் தந்தப்ப, `இன்னும் அவங்களோட தொடர்புல இருந்தா அப்புறம் என்னை ஏன் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க'ன்னு நான் கேட்டேன். அங்கதான் பிரச்னை ஆரம்பமாச்சு. நான் பாலாஜிகிட்ட கேட்க விரும்பறதெல்லாம் ஒரே கேள்விதான். தொடர்புலயே இருக்கணும்னு நினைக்கிறவர், ஏன் அவங்களை டைவர்ஸ் பண்ணணும்; சம்பந்தமில்லாத மத்த சிலரோட வாழ்க்கையில புகுந்து அவங்க வாழ்க்கையோடு ஏன் விளையாடணும்?'' என்கிறார் நித்யா.

Balaji and Nithya
Balaji and Nithya

வீடியோ விவகாரம் குறித்து பாலாஜியிடமும் பேசினோம்.

``வீடியோவில் பேசுகிற கேரக்டர் யாருனே எனக்கு சத்தியமா தெரியாது. என்னுடைய கணிப்பு என்னன்னா, என்னோட பெயரை மறுபடியும் கெடுக்கறதுக்காக இப்படியொரு கேரக்டரைப் பிடிச்சு யாரோ பேச வெச்சிருக்காங்க. தெளிவான ஆளா இருந்தா முகத்தை நல்லா லைட் வெளிச்சத்துல காட்டி அந்த ஆள் பேசலாமே? பிக்பாஸ்ல இருந்து எனக்குக் கிடைச்ச பணம் பத்தில்லாம் பேசறார். அந்தப் பணத்தை என்ன செஞ்சேன், என்ன செய்யணும்கிறதெல்லாம் என்னோட தனிப்பட்ட விஷயம். இவருக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனே, ஃப்ரெண்ட்டுங்குற பேர்ல ஒரு சப் இன்ஸ்பெக்டர் நித்யாவை தப்பா வழிநடத்தறார்னு... அதோட தொடர்ச்சியாத்தான் நான் இந்த வீடியோவைப் பார்க்குறேன்'' என்கிறார் பாலாஜி.

அடுத்த கட்டுரைக்கு