Published:Updated:

``எங்க ரெண்டு பேர்ல சாயாதான் ரொமான்டிக்; ஏன்னா?" - கிருஷ்ணா - சாயா சிங் லவ் ஸ்டோரி

சாயா சிங், கிருஷ்ணா

மற்ற நாட்களில் நடிப்பு, பாட்டு, நடனம் என இருவரும் பிஸியாக இருக்க, க்வாரன்டீன் நாள்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள சாயாசிங்- கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டோம்.

``எங்க ரெண்டு பேர்ல சாயாதான் ரொமான்டிக்; ஏன்னா?" - கிருஷ்ணா - சாயா சிங் லவ் ஸ்டோரி

மற்ற நாட்களில் நடிப்பு, பாட்டு, நடனம் என இருவரும் பிஸியாக இருக்க, க்வாரன்டீன் நாள்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள சாயாசிங்- கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டோம்.

Published:Updated:
சாயா சிங், கிருஷ்ணா

`` `ரன்’ சீரியல் இப்பவும் யூடியூப்ல தேடி திரும்பத் திரும்ப பார்க்குற ஆடியன்ஸ் இருக்காங்க. இன்ஸ்டால போஸ்ட் போட்டாகூட கமென்ட்ல, `உங்களை ரொம்ப மிஸ் பண்றோம். `ரன் 2' எப்ப வரும்?’னு கேட்க்குறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. இந்த லாக்டெளன்லாம் முடிஞ்ச பிறகு சீக்கிரமே நல்ல புராஜெக்ட்டோட ரசிகர்களை சந்திப்போம்கிற நம்பிக்கை இருக்கு” என புன்னகைக்கிறார்கள் கிருஷ்ணா - சாயாசிங்.

சாயா சிங், கிருஷ்ணா
சாயா சிங், கிருஷ்ணா

மற்ற நாட்களில் நடிப்பு, பாட்டு, நடனம் என இருவரும் பிஸியாக இருக்க, க்வாரன்டீன் நாள்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள சாயாசிங்- கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டோம்.

``க்வாரன்டீன் எப்படிப் போயிட்டிருக்கு?"

 சாயா சிங்
சாயா சிங்

``இந்த லாக்டெளனுக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேருமே பயங்கர பிஸியா இருந்தோம். நான் சென்னைல ஷூட் பண்ணிட்டு இருந்தா, அவர் பெங்களூர் ஷூட்ல பிஸியா இருப்பார். ரெண்டு பேரும் அதிகம் பார்த்துக்க முடியாம அங்க இங்கன்னு வேலை விஷயமா ஓடிட்டிருந்தோம். இப்பதான் ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்குது நல்ல விஷயம். நிறைய படங்கள், புத்தகங்கள், யோகா, வீட்டு வேலைகள்னு நாள்கள் அழகா போயிட்டிருக்கு” என கிருஷ்ணா சொல்லி முடிக்க, ``ரெண்டு பேரும் எதை அதிகம் மிஸ் பண்ணறீங்க இந்த நாள்கள்ல?” என்று கேட்டால் கேள்வி முடிக்கும் முன்பே, ``ஷூட்டிங் நாள்களைத்தான்” என ஒரு சேர பதில் வருகிறது.

``பிஸியா இருந்துட்டு இப்ப திடீர்னு வெளிய போகமுடியாம வீட்டுக்குள்ள இருக்குறது ஆரம்பத்துல பெருசா ஒண்ணும் தெரியல. ஆனா, இப்ப எப்போடா இந்த நிலைமை சரியாகும்னு இருக்கு. இப்படியே போனா, `மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸ்ல வர்ற மாதிரி உள்ளே இருக்க வேண்டியதுதான். எங்க வீட்டுல மூணு நாய்க்குட்டி வெச்சிருந்தோம். `ரன்’ சமயத்துல ரெண்டுபேருமே பிஸியா இருந்ததால, பெங்களூர்ல அம்மா வீட்ல விட்டுட்டோம். திரும்பக் கூட்டிட்டு வர முடியாததால, அவங்களை இந்த டைம்ல ரொம்ப மிஸ் பண்றோம்.”

சாயா சிங், கிருஷ்ணா
சாயா சிங், கிருஷ்ணா

``வீட்டுக்குள்ளே இருக்கறதுனால ரெண்டு பேருக்கும் சண்டைலாம் அதிகம் வருதா?'' எனக் கேட்டால் சிரிக்கிறார்கள். ``ரெண்டு பேருக்குமே கோவம் வரும். ஆனா, அது எல்லாம் கொஞ்ச நேரத்துக்குதான். என்னைவிட கிருஷ்ணாவுக்குதான் அதிகம் கோவம் வரும். ஆனா, வீட்டுக்குள்ள என்னை எதாவது பண்ணி டென்ஷன் பண்ணிட்டே இருப்பார். சமையல்ல ஹெல்ப் பண்றேன்னு சொல்லி போன வாரம் நெய் டப்பாவை உடைச்சிட்டார். இப்படி எனக்கு எக்ஸ்ட்ரா வேலை கொடுக்குறதுல சார் எக்ஸ்பர்ட்” என சாயாசிங் கிருஷ்ணாவைப் பார்த்து முறைக்க, ``நல்லது நினைக்கறதுக்கே காலம் இல்லைங்க” என சரண்டர் ஆனார் கிருஷ்ணா.

``சாயாசிங் கிட்ட பிடிச்ச விஷயம் என்ன?"

கிருஷ்ணா - சாயா சிங்
கிருஷ்ணா - சாயா சிங்

``என்னவிட எல்லா விஷயத்துலயும் இவங்க ரொம்ப மெச்சூர்ட். நான் எதாவது ஒரு விஷயம் டக்குனு யோசனையில்லாம பண்ணிடுவேன். ஆனா, இவங்க அப்படி கிடையாது. குறிப்பா, செலவு பண்ணக்கூடிய விஷயத்துல கரெக்ட்டா இருப்பாங்க. ஷாப்பிங் போனாகூட நான் கண்ணுல படுறதை எல்லாம் வாங்கணும்னு நினைப்பேன். ஆனா, அவங்க `எப்ப தேவையோ அப்போ வாங்கிக்கலாம்’னு சரியா இருப்பாங்க. அதே மாதிரி எங்க ரெண்டுபேருல யாரு ரொம்ப ரொமான்டிக்னு கேட்டீங்கனா, சாயாதான். என் பெயர் மட்டும்தான் கிருஷ்ணா. ஆனா, இந்த ரொமான்ஸ் ஏரியால நான் கொஞ்சம் வீக். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் சொல்லிட்டே போகலாம்” என சிரிக்கிறார் கிருஷ்ணா.

``கிருஷ்ணா எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவார்?"

சாயா சிங், கிருஷ்ணா
சாயா சிங், கிருஷ்ணா

``சத்தியமா என்னைப் பார்த்து பயப்பட மாட்டார். ஆனா, பேய்னா இவருக்கு ரொம்ப பயம். ஒரு ஹாரர் மூவி சேர்ந்து பார்க்கலாம்னு கூப்பிட்டாகூட வரமாட்டார்” என சாயாசிங் கம்ப்ளையின்ட் வாசிக்க, ``அதுக்கு என்ன காரணம்னு நானே சொல்றேன்” என இடைமறித்தார் கிருஷ்ணா, ``சின்ன வயசுல நிறைய பேய்ப்படங்கள் எல்லாம் பார்த்துட்டுதான் இருந்தேன். அப்ப அதிகம் பார்த்ததோட பாதிப்போ என்னவோ தெரியலை, இப்ப பார்க்க பிடிக்கறதே இல்லை. அதுமட்டுமல்லாம, இவங்க அடிக்கடி வேற பெங்களூர் போயிடுவாங்க. அதனால, வீட்டுல தனியா இருக்குறது கஷ்டம். நைட் நேரம் வீட்டுல இருந்தா எல்லா லைட்டும் போட்டுதான் படுப்பேன். அதனால, எதுக்கு இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்கணும்னு பேய் படம் பார்க்குறதயே விட்டுட்டேன்” என சீரியஸ் நோட் தந்தார் கிருஷ்ணா.

``லாக்டெளன் முடிஞ்சதும் என்ன பிளான்?"

``கண்டிப்பா கொஞ்ச நாளைக்கு எங்கயும் வெளிய போக மாட்டோம். கூண்டுக்குள்ள அடைச்சு வெச்ச பறவையைத் திறந்து விட்ட மாதிரி எல்லாரும் வெளிய வந்தா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது எல்லாமே இல்லைன்னு ஆகிடும். அதனால, அதுக்கான பொறுப்போட சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்கணும். குடும்பத்துல பெரியவங்க இருந்தாங்கன்னா, அவங்ககிட்ட பேசுங்க. நிறைய கதைகள் கிடைக்கும். இந்த க்வாரன்டீன் நாள்களை முடிஞ்ச அளவுக்கு வீட்டுக்குள்ளே இருந்து சந்தோஷமா இருங்க.”