Published:Updated:

''கெளதமி மேடம் சாமி கும்பிட்டுட்டு சாபம் விட்டாங்க'' 'திருமதி செல்வம்' - அபிதா

திருமதி செல்வம் - அபிதா
News
திருமதி செல்வம் - அபிதா

ஆரம்பத்தில் என் கணவருக்கு நடிகைனு ஒரு பயம் இருந்துச்சு. என்னை நடிக்கப் போகக்கூடாதுன்னு சொன்னார். ஆனால், அவரே திருமணம் முடிஞ்சதும் நடிக்கிறதுக்கு அனுப்பி வைச்சார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பட்டியலில் 'திருமதி செல்வம்' தொடருக்கு முக்கிய இடம் உண்டு. தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் இந்தத் தொடரை பலரும் விரும்பி பார்க்கிறார்கள். அந்தத் தொடரில் நாயகியாக நடித்திருந்த அபிதாவிடம் 'திருமதி செல்வம்' நினைவுகள் குறித்து பேசினேன்.

திருமதி செல்வம்
திருமதி செல்வம்

' நான் அப்போ பார்க்காத எபிசோட்களை எல்லாம் இப்போ மிஸ் பண்ணாம பார்க்குறேன். 'சொர்க்கம்' தொடரில் நடிச்சிட்டு இருக்கும்போதே எங்க வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால நானும் இதுக்கு மேல சீரியலில் நடிக்க வேண்டாம்... கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடலாம்னு முடிவெடுத்துட்டேன். அந்த சமயத்துல தான் 'திருமதி செல்வம்' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு அந்த ப்ராஜெக்ட் பண்ண சுத்தமா விருப்பம் இல்லை. டைரக்டரும், 'விகடன்'ல இருந்து ராதா மேடமும் எங்க வீட்டுக்கு கதை சொல்றதுக்காக வந்திருந்தாங்க. எனக்கு நடிக்க விருப்பம் இல்லாததனால எண்ணெய் தேய்ச்சிக்கிட்டு சிம்பிளா உட்கார்ந்திருந்தேன். அவங்க கதையெல்லாம் சொல்லி முடிச்சு நீங்க தான் நாயகியா நடிக்கணும்னு சொன்னாங்க. அதுமட்டுமில்லாமல், இப்படியே அந்த சீரியல்லயும் எண்ணெய் தேய்ச்சு சிம்பிளான குடும்பப் பொண்ணாவே நீங்க நடிச்ச போதும்னு சொல்லிட்டாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்தக் கதை பிடிச்சிருந்ததால நானும் ஓகே சொல்லிட்டேன். எங்க வீட்லயும் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. ஆரம்பத்துல மதியம் 1 மணிக்கு சீரியல் டெலிகாஸ்ட் ஆச்சு. நிறைய பேர் பாராட்டுவாங்க. எங்க வீட்ல உங்க சீரியல் முடிஞ்சதுக்கு பிறகு தான் மேடம் மதியம் சாப்பாடே வைக்கிறாங்கன்னுலாம் சொல்லுவாங்க. சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போதே எனக்கு திருமணம் நடந்துச்சு. ஆரம்பத்தில் என் கணவருக்கு நடிகைனு ஒரு பயம் இருந்துச்சு. என்னை நடிக்கப் போகக்கூடாதுன்னு சொன்னார். ஆனால், அவரே திருமணம் முடிஞ்சதும் நடிக்கிறதுக்கு அனுப்பி வைச்சார். எனக்கு அவரும் ரொம்ப சப்போர்ட்டா இருந்தார். சீரியல்ல நடிச்சிட்டு இருக்கும்போது கர்ப்பம் ஆனதால சீரியலிலும் நான் கர்ப்பம் ஆன மாதிரி சீனை மாத்தினாங்க.

திருமதி செல்வம்
திருமதி செல்வம்

ஷூட்டிங் போய்ட்டு இருக்கும்போதே திடீர்னு வாந்தி வந்திடும். எட்டு மாதம் வரைக்கும் நடிச்சேன். நிஜத்துல நான் ரொம்ப அமைதியா இருப்பேன். சீரியல்ல மாசமா இருக்கும்போது கத்தி சண்டை போட்டு நடிச்சேன். அந்த குணம் என் பொண்ணுக்கும் கொஞ்சம் வந்துடுச்சு. இப்போ அவ என்னை ஆட்டி படைக்கிறா...(சிரிக்கிறார்). இரண்டாவது பொண்ணு என்னை மாதிரி அமைதி. செட்ல கெளதமி மேடம் எனக்கு சாபம் கொடுக்கிற மாதிரி சீன் வரும்போதெல்லாம், 'நீ நிஜத்துல மாசமா இருக்க... நடிப்புக்காக தான் சாபம் விடுறேன். அது உன்னை எதுவும் செஞ்சிடக்கூடாதுன்னு' சாமி கும்பிட்டுக்கிறேன்னு பிரேயர் பண்ணிட்டுத்தான் நடிக்க வருவாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் மாசமா இருக்கேன்னு கெளதமி மேடம் எனக்கு முறுக்கு கொண்டு வருவாங்க. அதே மாதிரி எனக்கு அப்பாவாக நடிச்சவர் புளியோதரை கொண்டு வந்து கொடுத்தார். ஒவ்வொருத்தரும் அவங்க வீட்ல இருந்து ஸ்பெஷலா ஏதாச்சும் கொண்டு வந்தாங்கன்னா எனக்கு ஷேர் பண்ணாம சாப்பிடமாட்டாங்க.

'திருமதி செல்வம்' அபிதா குடும்பத்துடன்
'திருமதி செல்வம்' அபிதா குடும்பத்துடன்

'திருமதி செல்வம்' தொடருக்கு பிறகு 'பொன்னூஞ்சல்' தொடரில் நடிச்சேன். அந்த சமயம் இரண்டாவது குழந்தை மாசமாகிட்டதால ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு 'லட்சுமி ஸ்டோர்ஸ்' தொடரில் நடிச்சேன்.

இப்போ ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் பட ரிலீஸூக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். மூத்தப் பொண்ணு ஆறாம் வகுப்பு படிக்கிறாங்க. இரண்டாவது பொண்ணு முதல் வகுப்பு படிக்கிறாங்க. சீரியலில் கமிட் ஆனா நிறைய நாட்கள் தேதி ஒதுக்க வேண்டியிருக்கும். படம், வெப் சீரிஸ் எல்லாம் 10,15 நாட்கள் ஒதுக்கினால் போதும். அதனால, இப்போதைக்கு அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிச்சிட்டு இருக்கேன்!'' என்றார் அபிதா!