Published:Updated:

"இப்போ ஏன் சினிமா வாய்ப்புகள் வரலைன்னு தெரியல! ஆனாலும்..." - `அபியும் நானும்' அகிலா ஷேரிங்ஸ்!

அகிலா
News
அகிலா

"இப்போ ஏன் சினிமா வாய்ப்புகள் வரலைன்னு தெரியலை. ஆனா, இப்பவும் மீடியாவில் பிஸியாகத்தான் இருக்கிறேன். அதனால, ஏன் வாய்ப்புகள் அமையலைன்னு யோசிக்கிறது இல்லை!" - `அபியும் நானும்' அகிலா

கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருப்பவர், அகிலா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'அபியும் நானும்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
அகிலா
அகிலா

"சினிமா, சீரியல், ஆங்கர் இந்தப் பயணம் எல்லாம் எப்படி எங்க ஆரம்பிச்சதுன்னு தெரியலை. ஆனா, எல்லாமே அமைஞ்சு லைப் ரொம்ப பிஸியா போச்சு. பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்கள், பெரிய பேனர்கள் கொண்ட திரைப்படங்களில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்தச் சமயமும் சினிமா, சீரியல்னு ரெண்டுமே பண்ணிட்டு இருந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போ ஏன் சினிமா வாய்ப்புகள் வரலைன்னு தெரியலை. ஆனா, இப்பவும் மீடியாவில் பிஸியாகத்தான் இருக்கிறேன். அதனால, ஏன் வாய்ப்புகள் அமையலைன்னு யோசிக்கிறது இல்லை.

அகிலா
அகிலா

எப்பவும் என்னை நானே கம்பேர் பண்றேன். என் கூடவே போட்டி போடுறேன். ஆரம்பத்தில் மீடியாவிற்குள் வருவேன்னே நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. நல்லா படிக்கிற பொண்ணு. கேமரா முன்னாடி நிற்க ரொம்ப கூச்சப்படுவேன். அப்போலாம் எனக்கு நாம பார்க்கிறதுக்கு நல்லா இல்லைங்கிற எண்ணம் இருக்கும். அதெல்லாம் வளர, வளர சரியாச்சு. ஆங்கரிங், சீரியல், சினிமான்னு என்னை தேடி வாய்ப்புகள் வந்துச்சு. வர்ற வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கிட்டேன்" என்றவரிடம் உடன் நடித்த நடிகர் தனுஷ் குறித்தும், பானுப்பிரியா குறித்தும் கேட்ட போது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"தனுஷ் பார்க்கிறதுக்கு ரொம்ப அமைதியான பையன் மாதிரி இருப்பார். ஆனால், உண்மையில் அவர் பயங்கரமா அரட்டை அடிச்சு, செட்ல கலாட்டா பண்ணிட்டு இருப்பார். நிஜத்தில் என் அம்மா எப்படி என்னை பார்த்துப்பாங்களோ அப்படி என்னை பானுப்பிரியா மேம் பார்த்துக்கிட்டாங்க. அவ்வளவு ஏன், அவங்க ஃபேமிலியில் ஒருத்தங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கூட அவங்க ஆசைப்பட்டாங்க. அந்த அளவுக்கு செட்ல அவங்க பொண்ணு மாதிரி கேர் எடுத்து பார்த்துக்கிட்டாங்க!"

அகிலா
அகிலா

இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்!