Published:Updated:

'அடுத்த பிளான் என்ன... கல்யாணம் எப்போ'- கியூட்  அண்ட்  ஃபிட்  அம்மு பதில்

மிகவும் சிறிய வயதிலேயே சின்னத்திரையில் காலடி எடுத்துவைத்த அம்மு, பத்து வருடங்கள் கடந்த பின்னும் அதே கிரேஸுடன் சீரியல்களில் நடித்து வருகிறார்.

அம்மு
அம்மு

தொலைக்காட்சி பெட்டியைத் திறந்தாலே புதுப்புது முகங்கள் தான் தெரிகின்றன. தமிழ் சீரியல்களிலும் ஹிந்தி சீரியல்களில் வருவது போன்ற முகங்களைத் தேர்வு செய்து நடிக்க வைக்கின்றனர். ஒரு சீரியலோடு அந்த முகங்கள் காணாமல் போய்விடும். ஆனால் முன்பு இருந்த சீரியல் நடிகர், நடிகைகள் இன்றுவரை ரசிகர்களின் நினைவில் நிற்கின்றனர். அப்படியான ஒரு முகம் தான் அம்மு.

அம்மு
அம்மு

மிகவும் சிறிய வயதிலேயே சின்னத்திரையில் காலடி எடுத்துவைத்த அம்மு, பத்து வருடங்கள் கடந்த பின்னும் அதே கிரேஸுடன் சீரியல்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக சமூகம் சார்ந்த பதிவுகளைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் அம்முவிடன் அடுத்த பிளான் என்ன, கல்யாணம் எப்போது.. எப்படி அப்படியே க்யூட்டா ஃபிட்டா இருக்கீங்க.. போன்ற கேள்விகளை முன்வைத்தோம்.

``தற்போது சைக்காலஜி படிச்சுட்டு இருக்கேன். எக்ஸாம்ஸ் வேற வருது. அதற்கு ஏற்ற மாதிரி தேதிகள் கொடுத்துட்டு வரேன். சின்னத்திரை, வெள்ளித்திரைன்னு நிறைய வாய்ப்புகள் வருது. எனக்கு பிடிச்சு இருந்தா உடனே ஓகே சொல்லிடுவேன். சைக்காலஜி படிச்சுட்டு இருந்தாலும் திரைத்துறை தான் என் முதல் சாய்ஸ். இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு இந்த துறையைவிட்டு எங்கும் போகமாட்டேன். அதன் பிறகு கவுன்சலிங் மையம் ஆரம்பிக்கலாம்னு பிளான்ல இருக்கேன்.

அம்மு
அம்மு

இன்றைய காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலுமே ஸ்ட்ரெஸ் அதிகம். குறிப்பா நடிகைகளுக்கு மன அழுத்தம் அதிகம் வரும். ஆனாலும் கவுன்சலிங் போக அனைவருமே தயங்குகிறோம். மனம் சார்ந்த ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம். படிப்பு முடிந்ததும் கண்டிப்பா திரைத்துறையில் இருக்கும் நண்பர்களுக்குத் தேவைப்படும் போது மன அழுத்தம் குறைய கவுன்சலிங் கொடுப்பேன்.

நல்ல விஷயங்களை மட்டும் நினைக்கும் போதும், செய்யும்போதும் நமக்குள்ள புது உற்சாகம் பிறக்கும். அதுவே அழகையும் கூட்டும்
அம்மு

சினிமா, சைக்காலஜி இதை தாண்டி இன்னொரு எண்ணம் எனக்குள்ள வந்திருக்கு. கைவிடப்பட்ட செல்லப்பிராணிகள், தெரு நாய்களுக்காக ஏதாவது செய்யணும். சிலர் ஆசைப்பட்டு நாய் வாங்கி வளர்க்குறாங்க. ஒரு கட்டத்துல அதற்கு உடம்பு முடியாம போனா சாலையில் விட்டுட்டு போயிடறாங்க. விலங்குகள் நலத்துக்காக ஏதாவது பண்ணனும். சமீபத்தில் அரசு விளம்பரத்தில் நடிச்சேன். குழந்தைகள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு விளம்பரம் அது. பேமஸ் ஆனா போதும்னு எனக்கு இருக்க பிடிக்கல. பெருமைக்காக சொல்லல. உண்மையாவே எனக்கு சமூகம் சார்ந்த விஷயங்கள் செய்யுறது பிடிக்கும். அதுதான் எனக்கு மன நிறைவைக் கொடுக்கும்.

அம்மு
அம்மு

பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அம்மு மாதிரியே அப்படியே இருக்கீங்களே எப்படின்னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. எங்க ஃபேமிலி ஜீன் அந்த மாதிரி. அது தவிர ரொம்ப பாசிடிவ்வா இருப்பேன். திடீர்னு வாய்ப்புகள் வராம போன என்ன செய்யுறது.. அடுத்து என்ன பண்ணனும் அப்படின்னு தெளிவா இருக்கேன். என் சந்தோஷத்தை நான் தான் முடிவு பண்றேன். நல்ல விஷயங்களை மட்டும் நினைக்கும் போதும், செய்யும்போதும் நமக்குள்ள புது உற்சாகம் பிறக்கும். அதுவே அழகையும் கூட்டும்’’ என்றவரிடம் கல்யாண சேதி எப்போ சொல்லுவீங்க என்றோம்.

``சீக்கிரமே சொல்றேன்.. வீட்ல மாப்பிளை பார்த்துட்டு இருக்காங்க. இன்னும் ஒரு வருஷத்துல நல்ல சேதி சொல்லிடுவேன்.

அம்மு
அம்மு

ரொம்ப நல்லவரா இருக்கணும்னு அவசியமில்லை. யாராலையும் 100% நல்லவங்களா இருக்க முடியாது. ஓரளவுக்காச்சு நல்லவரா இருக்கணும். என்னை புரிஞ்சிக்கணும். அதுவே போதும்’’ என்றார் மெல்லிய சிரிப்புடன்.