Published:Updated:

''நம்புங்க இது நான்தான், கண்ணாடி பொய் சொல்லாது'' - வைரலாகும் ஐஸ்வர்யா பிரபாகரின் பதிவு!

வே.கிருஷ்ணவேணி

''நான் உடல் எடையை குறைத்திருப்பது மற்றவர்களுக்குமான மோட்டிவேஷன்தான்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

சன் டி.வி-யில் ஒளிபரப்பான `சன் குடும்பம் விருதுகள், `அமுல் சூப்பர் குடும்பம்', `சன் சிங்கர்’ நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியதோடு, `பைரவி' என்கிற சீரியலிலும் நடித்தார் ஐஸ்வர்யா. தொகுப்பாளர், நடிகை, விளம்பர மாடல் எனப் பன்முகம் கொண்டஐஸ்வர்யாவுக்குக் கடந்த 2015 ம் ஆண்டு பிரனீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

''கண்ணாடி பொய் சொல்லாது. இது நான்தான்''
ஐஸ்வர்யா

திருமணத்திற்குப் பிறகு, கணவர் பிரனீஷூடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இவருடையது என்பது நாம் அறிந்ததே.

``கல்யாணத்துக்கு அப்புறம் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகப் போறேன். அதனால ஆங்கரிங், ஆக்டிங் எல்லாம் பண்ண முடியுமானு தெரியல. இதுவரைக்கும் ‘கல்யாணத்துக்கு அப்புறம் மீடியா வேணாம்’னு எல்லாம் எந்தப் பேச்சும் வரல!’’ என்று அப்போதே நமது பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் சொன்னதுபோலவே, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

அதேநேரம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எனத் தன்னுடைய டயட் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடத் தவறுவதில்லை. சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படம்தான் இப்போதுவரை வைரலாகி வருகிறது.

`திருமணம் ஆன பிறகு உடல் எடை அதிகரித்த படத்தையும், தற்போது உடல் எடையைக் குறைத்த படத்தையும் தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'கண்ணாடி பொய் சொல்லாது' எனத் தலைப்பிட்டு பதிவிட்டிருந்தார். மேலும், அதில், `நான் உடல் எடையைக் குறைத்திருப்பது மற்றவர்களுக்குமான மோட்டிவேஷன்தான்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி தொடர்ந்து தனது ஃபிட்னஸ் தொடர்பான படங்களைப் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

இதற்கு பலரும் பாசிட்டிவ் பதில்களை பதிவிடுவதோடு, பாராட்டியும் வருகிறார்கள். சென்னையில் இருந்த ஐஸூவா இது என ஆச்சர்யப்படவைக்கிறார். அதேபோல சிவகார்த்திகேயனுடன் `ஜோடி சீசன் 3' க்கு சிவாவும், இவரும் இணைந்து டான்ஸ் ரிகர்சல் செய்த வீடியோவையும் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ அவரது ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்தச் செயல் மீண்டும் மீடியாவுக்குள் நுழையும் முயற்சியாக இருக்கலாம் எனவும் அவரின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.