Published:Updated:

''முகம்னா முகப்பரு வரும்தானே?'' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் விலகல் குறித்து தீபிகா!

தீபிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த சீரியலின் இடையில் என்ட்ரி கொடுத்திருந்தாலும் மக்களுக்கு 'ஐஸ்வர்யா' கேரக்டர் ரொம்பவே பிடித்திருந்தது. கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடிக்கு தனியாகவே ரசிகர்கள் தனிப்பக்கம் தொடங்கிவிட்டார்கள்.

''முகம்னா முகப்பரு வரும்தானே?'' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் விலகல் குறித்து தீபிகா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த சீரியலின் இடையில் என்ட்ரி கொடுத்திருந்தாலும் மக்களுக்கு 'ஐஸ்வர்யா' கேரக்டர் ரொம்பவே பிடித்திருந்தது. கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடிக்கு தனியாகவே ரசிகர்கள் தனிப்பக்கம் தொடங்கிவிட்டார்கள்.

Published:Updated:
தீபிகா

இந்நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் இருந்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா விலகிவிட்டார். திடீரென அவர் தொடரில் இருந்து விலகியது சமூகவலைதள பக்கங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் ''இதுவும் கடந்து போகும்... கொஞ்சம் சில் பண்ணு தீப்பி'' என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த தீபிகாவை தொடர்பு கொண்டு பேசினேன்.

தீபிகா
தீபிகா

''எனக்கு முகப்பரு அதிகமாக இருக்குங்குறதால நான் டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். சேனலில் இருந்தும் அதை சரி பண்ண எனக்கு டைம் கொடுத்தாங்க. ஆனா, அந்த டிரீட்மென்டுக்கு கொஞ்சம் டைம் எடுக்குங்கிறதால வேற வழி இல்லாம தான் என்னை மாத்திட்டாங்க'' என்ற தீபிகா தொடர்ந்து பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''முன்னாடி விட சீரியலில் நிறைய விஷயங்கள் மாறியிருக்கு. டஸ்க்கி ஸ்கின் டோனில் ஹீரோயினா நடிக்கிறாங்க. அதே மாதிரி ஜீரோ சைஸ் இல்லாத ஒருத்தங்க ஹீரோயினா நடிக்கிறாங்க. இன்னும் சொல்லணும்னா மாசமா இருக்கும்போதே நடிக்கிறாங்க. அதனால பொதுவா அப்படியான பிம்பம் இப்போ இல்லை. என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே நிறைய பேர் என் போட்டோஸுக்கு கீழ 'முகம் ஏன் இப்படி இருக்கு, நல்லாவே இல்லை'ன்னுலாம் கூட கமென்ட் பண்ணியிருக்காங்க. ஆடியன்ஸோட பார்வை விரிவடையாதவரை மீடியாவுடைய பார்வையை மாத்த முடியாது.

தீபிகா
தீபிகா

எனக்கு சேனலில் இருந்து தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை. நான் நல்லா நடிக்கலைனோ, செட்ல யார்கூடயாச்சும் சண்டை போட்டேன்னோ என்னை வெளியேத்தியிருந்தாங்கனா நான் வருத்தப்பட்டிருப்பேன். முகப்பரு இருக்கிறது என்னுடைய தப்பு இல்லையே... முகம்னா முகப்பரு வரும்தானே?! அதனால நான் சேனலையும் தப்பு சொல்ல மாட்டேன். அவங்க என் டிரீட்மென்ட்டுக்கு நிறைய டைம் கொடுத்தாங்க. என்னால அந்த டைமுக்குள் சரி செய்ய முடியலைங்கிறதனால தான் சீரியலில் இருந்து விலக வேண்டியதாகிடுச்சு.

அப்புறம் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்திடுறேன். நானும், நடிகர் சரவணனும் (பாண்டியன் ஸ்டோர்ஸ் - கண்ணன்) நல்ல நண்பர்கள். இன்னமும் பலர் நாங்க லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்காங்க. அண்ணன் - தங்கச்சி பைக்ல போனாலே லவ்வர்ஸ்னு சொல்ற உலகம். எங்களுக்குள்ளே இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப் பாண்டிங் பற்றி எங்களுக்கு தெரியும். அதுக்கும் மேல, எங்களை எங்க ஃபேமிலியில் உள்ளவங்க புரிஞ்சிக்கிட்டாங்க. அதனால நாங்க அதையெல்லாம் பெருசா எடுத்துக்கல. நானும், சரவணனும் தனித்தனியா யூடியூப் சேனல்கள் வெச்சிருந்தோம். சமீபத்தில் அதை நாங்க ஒன்னாவே கவனிச்சிக்கிட்டோம். ஷூட்டிங் ஸ்பாட்ல கன்டென்ட் பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். இனிமே அப்படி டிஸ்கஸ் பண்ண டைம் இருக்காதுனு குட்டியா ஒரு ஆபிஸ் செட்டப் அமைச்சிருக்கோம். அதுக்கான வேலைகளும் போயிட்டிருக்கு.

தீபிகா
தீபிகா

இப்போதைக்கு டிரீட்மென்ட்டில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். சீக்கிரமே முகப்பருவை சரி செஞ்சிட்டு ஹீரோயினா, இல்லைனா ஐஸ்வர்யா மாதிரியான முக்கியமான கேரக்டர்கள்லயோ மட்டும்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்'' எனப் புன்னகைக்கிறார் தீபிகா.

தீபிகாவுக்கு பதிலாக 'ஐஸ்வர்யா' கதாபாத்திரத்தில் 'ஈரமான ரோஜாவே' சீரியல் புகழ் சாய் காயத்ரி நடிக்கிறார். இன்று முதல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் சாய் காயத்ரி தான் ஐஸ்வர்யாவாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.