Published:Updated:

"உயிர் கொடுக்கிற அண்ணனாக, நண்பனாக இருந்தவங்க...!" - மனம் திறக்கும் தேவி கிருபா

தேவி கிருபா

இந்த மூணு வருஷத்துல இதுக்குள்ள நடக்கும் அரசியல் என்னன்னு நான் பார்த்துட்டேன். ஏன்னா, இதுக்கு வர்றதுக்கு முன்னாடி உயிர் கொடுக்கிற அண்ணனாக, நண்பனாக இருந்தவங்க எல்லாரும் இதுக்கு வந்த பிறகு மாறிட்டாங்க!

"உயிர் கொடுக்கிற அண்ணனாக, நண்பனாக இருந்தவங்க...!" - மனம் திறக்கும் தேவி கிருபா

இந்த மூணு வருஷத்துல இதுக்குள்ள நடக்கும் அரசியல் என்னன்னு நான் பார்த்துட்டேன். ஏன்னா, இதுக்கு வர்றதுக்கு முன்னாடி உயிர் கொடுக்கிற அண்ணனாக, நண்பனாக இருந்தவங்க எல்லாரும் இதுக்கு வந்த பிறகு மாறிட்டாங்க!

Published:Updated:
தேவி கிருபா

சின்னத்திரையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இயங்கிவருபவர் தேவி கிருபா. சொற்பமான தொடர்களில் நடித்திருந்தாலும் இவரது முகம் இன்றளவும் பிரபலம். தற்போது, வசந்த் தொலைக்காட்சியில் 'கிச்சன் கில்லாடிகள்' என்கிற சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

தேவி கிருபா
தேவி கிருபா

என்னோட 13 வயசுல மீடியாவுக்குள்ள வந்தேன். நான் நினைச்ச எதையுமே என்னால பண்ண முடியல. எனக்கு டிசைனிங்ல ஆர்வம் அதிகம். அதனால 5 வருஷத்துக்கு முன்னாடி அதை விரும்பிக் கத்துக்கிட்டேன். இப்ப நான் ஆசைப்பட்ட மாதிரியே ஸ்டைலிஸ்ட்டும் ஆகிட்டேன். எனக்குப் பிடிச்ச மாதிரி என் ஆடைகளை நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சிட்டேன் என்றவாறு பேசத் தொடங்கினார்.

`ஆனந்தம்' சீரியலில் நடிச்சப்ப அங்க சுகன்யா மேம் உட்பட பல சீனியர் ஆர்ட்டிஸ்ட் இருந்தாங்க... இந்தப் பொண்ணு புதுசுன்னு என்னை என்னைக்குமே ட்ரீட் பண்ணது கிடையாது. ரொம்ப நல்ல டீம்.. இன்னைக்கு வரைக்கும் எல்லார்கிட்டேயும் டச்ல இருக்கேன். சின்ன வயசிலேயே பெரிய, பெரிய ஆர்ட்டிஸ்ட்களுடன் நடிச்சிருக்கேன்னு இப்ப நினைக்கும்போது ரொம்ப ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருக்கு. காந்திமதி அம்மா, மனோரமா ஆச்சி, எம் எஸ் விஸ்வநாதன் சார் உட்பட பெரிய, பெரிய லெஜண்ட் கூடலாம் நடிச்சிருக்கேன். அவங்களை எல்லாம் தெரியாமலேயே கடந்து வந்தாச்சு என்றவரிடம் சின்னத்திரை நடிகர் சங்கம் குறித்துக் கேட்டோம்.

தேவி கிருபா
தேவி கிருபா

இந்த மூணு வருஷத்துல இதுக்குள்ள நடக்கும் அரசியல் என்னன்னு நான் பார்த்துட்டேன். ஏன்னா, இதுக்கு வர்றதுக்கு முன்னாடி உயிர் கொடுக்கிற அண்ணனாக, நண்பனாக இருந்தவங்க எல்லாரும் இதுக்கு வந்த பிறகு எப்படி மாறிட்டாங்க.. அரசியலுக்கு வந்தா எல்லாரையுமே இழக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன். எல்லாருமே உண்மையானவங்க இல்லைங்கிறதை உணர்ந்தேன். அதுவரைக்கும் என்னை தங்கச்சி, தங்கச்சின்னு சொன்னவங்களே என்னை பற்றி தப்பா பேசினாங்க.. அப்படியெல்லாம் அந்த அளவுக்கு பதவிக்காக மாறினவங்க எல்லாரும் இருக்காங்க. இதை துரோகம்னு சொல்றதைவிட பதவி மோகம்னு சொல்லலாம். நேரடியாகவே என்னை மிரட்டி இருக்காங்க.

எலெக்‌ஷனே இந்த முறை நடக்குமான்னு தெரியல. எங்க மேல குற்றம் சுமத்துறவங்க நேரடியா மீடியாவில் அதுக்கான எவிடென்ஸ் கொடுத்திருக்கலாமே. அப்படி இல்லைங்கிறப்பவே அது பொய்னு தெரியுது. பொய்யா பதவி மோகத்துக்காகத்தான் இதை பண்றாங்கன்னு நல்லாவே தெரியுது. மற்ற சங்கங்கள் எல்லாம் பார்க்கும்போது எவ்வளவு ஒற்றுமையா இருக்காங்க.. ஒரு ஆர்ட்டிஸ்ட்டிற்கு பிரச்னைன்னா எல்லாரும் எந்த அளவுக்கு குரல் கொடுக்கிறாங்கன்னு பார்க்க முடியுது. நான் இருக்கிற டீம் அப்படிங்கிறதனால எங்க டீம் நல்லது பண்ணுது, எல்லாமே சரியா பண்ணுதுன்னும் நான் சொல்ல வரல. தவறுகள் இருக்கு ஆனா அதை திருத்திக்கிறதுக்கான டைம் யாரும் கொடுக்கிறது இல்ல. இங்கே முதலில் ஒற்றுமை இல்லை. ஒருத்தருக்கொருத்தர் குறை சொல்றது அப்படிங்கிற ஈகோ இருக்கே தவிர ஒற்றுமை இல்லை.

தேவி கிருபா
தேவி கிருபா

ஜனவரி 9 எலெக்‌ஷன் நடக்குறதா இருந்துச்சு. அதுக்கு முன்னாடியே இன்னைக்கு தேர்தல் நடக்குதுன்னு பொய்யா தகவல் பரப்புறாங்க. நாங்க ஜெயிச்ச அன்னையில் இருந்து பிரச்னை தான்.. ஒருத்தர் நல்லது செய்றாரா, இல்லையா.. அவருக்கு அதுக்கான டைம் கொடுக்கிறோமோ அப்படி பார்க்காம நெகட்டிவான விஷயங்களை தொடர்ந்து செய்துட்டே இருக்கணும். நல்லது பண்ண விடக்கூடாது அப்படிங்கிறதுதான் அவங்களுடைய எண்ணம்.

சாய் பிரசாந்த் எல்லாம் ரொம்ப போல்டான கேரக்டர் தான். சாப்பாடு இல்லாம, பணம் இல்லாம தான் அவன் இறந்ததுக்கு இதுதான் காரணம். மனைவியுடன் பிரச்னை, சம்பள பிரச்னையினால தான் இறந்ததா அவனே லெட்டர் எழுதி வச்சியிருந்தான்னு நினைக்கிறேன்.. பண ரீதியா இந்தத் துறையில் எந்த பிரச்னையும் நான் எதிர்கொள்ளல. அதுக்கு நான் ஒர்க் பண்ண எல்லா இயக்குநர்களுக்கும் நன்றி சொல்லியே ஆகணும். எனக்கு என்ன பிரச்னைன்னு எல்லாருக்குமே தெரியும். என் அம்மா என் மேல கம்ப்ளைண்ட் பண்ணியிருந்தாங்க.. என் வாழ்க்கையில் நடந்த பல பிரச்னைகளுக்கு என் அம்மா தான் காரணமே தவிர இந்தத் துறையோ, மத்தவங்களோ காரணம் இல்லை என்றார்.

தேவி கிருபா
தேவி கிருபா

இன்னும் பல விஷயங்கள் குறித்து தேவி கிருபா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றை காண லிங்கை கிளிக் செய்யவும்!