Published:Updated:

`அசிமுக்கு நான்தான் என்கிற எண்ணம் அதிகமா இருக்கும்!' - தேவிபிரியா ஷேரிங்ஸ்

தேவிபிரியா

சன், விஜய், ராஜ், ஜெயான்னு எல்லா சேனல்களிலும் அடுத்தடுத்த ஸ்லாட்ல நடிச்சிருக்கேன். டிவியை ஆஃப் பண்ணாலும் தேவிபிரியா வருவாங்கன்னுலாம் கிண்டல் பண்ணியிருக்காங்க. இப்ப டிரெண்ட் மாறிடுச்சு. - தேவிபிரியா

`அசிமுக்கு நான்தான் என்கிற எண்ணம் அதிகமா இருக்கும்!' - தேவிபிரியா ஷேரிங்ஸ்

சன், விஜய், ராஜ், ஜெயான்னு எல்லா சேனல்களிலும் அடுத்தடுத்த ஸ்லாட்ல நடிச்சிருக்கேன். டிவியை ஆஃப் பண்ணாலும் தேவிபிரியா வருவாங்கன்னுலாம் கிண்டல் பண்ணியிருக்காங்க. இப்ப டிரெண்ட் மாறிடுச்சு. - தேவிபிரியா

Published:Updated:
தேவிபிரியா
'சின்னத்திரை உலகில் வில்லியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தேவிபிரியா. டப்பிங்கிலும் இவர் கில்லாடி. சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'புதுப்புது அர்த்தங்கள்' தொடரிலும் நடித்திருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம்.
தேவிபிரியா
தேவிபிரியா

` பெண் சிசுக் கொலையை மையமாக வச்சு ஒரு டாக்குமென்ட்ரி பிலிமில் நடிச்சேன். அந்த சமயம்தான் நான் சிந்தூரி ஹோட்டலில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்த டாக்குமென்ட்ரி முடிச்சிட்டு வழக்கம்போல வேலைக்கு போயிட்டு இருந்தேன். அந்தப் படத்துல நடிச்சதுக்காக இயக்குனர் ராஜீவ் மேனன் சார்கிட்ட இருந்து விருதும் வாங்கியிருந்தேன். அங்க பார்த்துட்டு தான் அவர் `மின்சார கனவு' படத்துக்கு எனக்கு ஆஃபர் வந்துச்சு. அப்ப தான் நான் ஃபர்ஸ்ட் டைம் ஊட்டிக்குப் போனேன். என் கூட வேலை பார்த்த பொண்ணுங்க ஒவ்வொருத்தரும் அவங்களுடைய டிரஸ் எல்லாம் கொண்டு வந்து கொடுத்து போட்டுட்டு போகச் சொன்னாங்க. அப்படித்தான் அந்தப் படத்துல நடிச்சேன்.

சீரியலில் சின்ன, சின்ன கேரக்டர் பண்ணிட்டு இருந்தேன். அப்ப ஹீரோயினா தான் நடிக்கணும். அப்பத்தான் நாம ஹீரோயினாகவே தொடர்ந்து நடிக்க முடியுங்கிறதெல்லாம் எனக்குத் தெரியல. ஒருவேளை அப்படி நடிச்சிருந்தா இன்னைக்கு சீனியர் ஹீரோயினாக சீரியல் உலகில் வலம் வந்திருப்பேன்னு நினைக்கிறேன். அப்ப அதெல்லாம் மைண்ட்ல இல்ல என்றவரிடம் டப்பிங் பயணம் குறித்துக் கேட்டோம்.

தேவிப்பிரியா
தேவிப்பிரியா

எனக்கு 7,8 மணிக்கெல்லாம் ஷூட்டிங் இருக்குன்னா காலையில 6 மணிக்கே டப்பிங் பேசப் போயிருவேன். எதுக்காகவும் டப்பிங்கை மட்டும் விடவே மாட்டேன். சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போது திடீர்னு கூப்பிட்டு இந்தக் கேரக்டருக்கு மட்டும் டப்பிங் பேசிட்டுப் போங்கன்னு சொல்லுவாங்க. அப்படி கூப்பிட ஆரம்பிச்சு தொடர்ந்து நிறைய சீரியல்களுக்கு டப்பிங் பேசினேன். இன்னைக்கு நான் டப்பிங் யூனியன்ல லைஃப் டைம் மெம்பராகவும் இருக்கிறேன். கிராமத்து லாங்குவேஜ்ல டப்பிங் பேசுறதுதான் என்னுடைய பிளஸ். அதனால அதுசார்ந்த படங்களுக்கு பெரும்பாலும் என்னை கூப்பிடுவாங்க. 

சீரியலில் வில்லி ரோலில் நடிக்கிறதனால எல்லா நாளும் நமக்கு ஷூட் இருக்காது. ஷூட் இல்லாதப்ப சும்மா வீட்ல உட்கார வேண்டியிருக்கும். சன் டிவியில் ஒரு சீரியலில் நடிச்சா வேற எந்த சீரியலிலும் நடிக்க முடியாது. ஆனா, அப்போதெல்லாம் அப்படிக் கிடையாது. சன், விஜய், ராஜ், ஜெயான்னு எல்லா சேனல்களிலும் அடுத்தடுத்த ஸ்லாட்ல நடிச்சிருக்கேன். டிவியை ஆஃப் பண்ணாலும் தேவிபிரியா வருவாங்கன்னுலாம் கிண்டல் பண்ணியிருக்காங்க. இப்ப டிரெண்ட் மாறிடுச்சு என்றவரிடம் பிக்பாஸ் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

தேவிபிரியா
தேவிபிரியா

மக்கள் நான் பிக்பாஸூக்குள்ள போகணும்னுலாம் ஆசைப்பட்டாங்க. அங்க போனா நாம நாமளா இருக்கலாம்னு சொல்லுவாங்க... ஆனா, உண்மையில் அப்படியில்லை. நான் பயங்கரமான எமோஷனல் கேரக்டர். எனக்கெல்லாம் அது செட்டாகாது என்றவரிடம் அசிமுடன் `பூவே உனக்காக' தொடரில் நடித்தது குறித்து கேட்கவும் `அது உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா!' என்றவாறு பேசத் தொடங்கினார்.

அசிம் ஹைப்பரான கேரக்டர். ஜாலியாகவும் இருப்பாரு... பயங்கரமா சண்டையும் போடுவாரு. நான் தான் என்கிற எண்ணம் அவருக்கு எப்பவும் அதிகமா இருக்கும். சீன் டயலாக் விஷயமா எங்க ரெண்டு பேருக்குமிடையில் ஷூட்டிங் ஸ்பார்ட்ல ஒரு வாக்குவாதம் நடந்துச்சு. சாதரணமா ஆரம்பிச்ச வாக்குவாதம் பெரிய சண்டையில் முடிஞ்சது. அடுத்த நாள் அவர் இத வச்சு ஆரம்பிச்சார். அப்ப ஹீரோயின் அது குறித்து பேச ஆரம்பிக்க அவங்க ரெண்டு பேருக்கும் பெரிய காரசாரமா விவாதம் ஆச்சு. ஹீரோயினுக்கு மொழி தெரியாது. இவர் பேசும்போது வார்த்தையை விட்டுட்டாரு. அவர் கையைத் தூக்கிட்டு அடிக்க வர்ற மாதிரி வரவும் ஹீரோயினுக்குக் கோபம் வந்துடுச்சு. அந்த புரொடியூசர் எங்க எல்லாரையும் சமாதானம் பண்ண டிரை பண்ணினார். அந்தப் பொண்ணுக்காக நாங்க எல்லாரும் ஒன்னா உட்கார்ந்திருந்தோம். அவன் மன்னிப்பு கேட்காம நாங்க நடிக்க மாட்டோம்னு உறுதியா சொன்னதும் கடைசியா போனா போகுதுன்னு மன்னிப்பு கேட்டார் என்றவரிடம் மிஸ் ஆன டப்பிங் பற்றிக் கேட்டோம். 

தேவிபிரியா
தேவிபிரியா

`விக்ரம்' படத்தில் ஏஜென்ட் டீனாவுக்கு வாய்ஸ் டெஸ்ட் கொடுத்தேன். ஆனா, அதுல என் வாய்ஸ் செலக்ட் ஆகல. அப்ப ரொம்ப வருத்தப்பட்டேன். எனக்கு கமல் சார் ரொம்பப் பிடிக்கும். அவருடன் தான் நடிக்க முடியல அவர் படத்துல பேசவாச்சும் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா, அதுவும் நடக்கல. என் வாய்ஸ் சின்ன பொண்ணு வாய்ஸ் இருக்கு... பெரிய பொண்ணு மாதிரி வாய்ஸ் வேணும்னு சொன்னாங்க. அதனால என்னால டீனாவுக்குப் பேச முடியல. அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு!' என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து தேவிப்பிரியா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.