Published:Updated:

"வடிவேலு சாரோட பெரிய பேண்டேஜ் பார்த்ததும் சிரிப்பு!"- மாலா காமெடி சீக்ரெட் சொல்லும் நடிகை தாரணி!

தாரணி

'வடிவேலு சார் அவ்வளவு பெரிய பேண்டேஜ் போட்டுட்டு வருவாரு. அவரை ஷார்ட்ல பார்த்துட்டு எப்படி நம்மளால் சிரிக்காம நடிக்க முடியும். சிரிப்பை அடக்கவே முடியாது!'

"வடிவேலு சாரோட பெரிய பேண்டேஜ் பார்த்ததும் சிரிப்பு!"- மாலா காமெடி சீக்ரெட் சொல்லும் நடிகை தாரணி!

'வடிவேலு சார் அவ்வளவு பெரிய பேண்டேஜ் போட்டுட்டு வருவாரு. அவரை ஷார்ட்ல பார்த்துட்டு எப்படி நம்மளால் சிரிக்காம நடிக்க முடியும். சிரிப்பை அடக்கவே முடியாது!'

Published:Updated:
தாரணி

வெள்ளித்திரை, சின்னத்திரை என கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருப்பவர், தாரணி. தற்போது, தாலாட்டு, ரஜினி போன்ற தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவரை உணவு இடைவேளையில் சந்தித்துப் பேசினோம். 'மிடில் கிளாஸ் மாதவன்' படத்தில் வருகிற 'மாலா' கதாபாத்திரம் குறித்து கேட்டோம்.

தாரணி
தாரணி

வடிவேலு சார் அவ்வளவு பெரிய பேண்டேஜ் போட்டுட்டு வருவாரு. அவரை ஷார்ட்ல பார்த்துட்டு எப்படி நம்மளால் சிரிக்காம நடிக்க முடியும். ரெடி டேக் போலாம்னு சொன்ன உடன் அவர் பேண்டேஜை தூக்கி வேற காட்டுவாரு பாருங்க எல்லாரும் சிரிச்சிட்டே இருந்தோம். சிரிச்சு, சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு. அந்த சீனை மறக்கவே முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம்ம நடிக்க தான் போறோம்னா கூட நாம பார்க்கும்போது கரெக்டா பின்னாடி தூக்குவாரு பாருங்க ஐயோ.. அவர் சாதாரண ஆள் கிடையாது.. என்னென்ன தில்லாலங்கடி வேலை பண்ணனுமோ எல்லாமே பண்ணுவாரு.. நம்மளை நடிக்கவே விட மாட்டாரு.. சிரிக்க வைச்சிட்டே இருப்பாரு.

திடீர்னு ஃபேனை பன்னிரண்டுல வைக்க சொல்லுன்னு சொல்லுவாரு. அப்படி ஒரு டயலாக் ஸ்கிரிப்ட்ல இல்லை. ஃபேனை பன்னிரெண்டுலேன்னு சொன்னதும் எல்லாரும் சிரிச்சிட்டோம். ஆனாலும், டேக் நிறைய எடுக்கக்கூடாதுரேவதி சங்கரன் நேரிலும் அம்மா மாதிரி தான் பழகுனாங்க. அவங்க குற்றால அருவியில்னு பாடும்போதும் வடிவேலு சாருடைய எக்ஸ்பிரஷன்லாம் வேற லெவலில் இருந்துச்சு. இப்போ அந்த சீனை பார்த்தா கூட சிரிப்பு வந்திடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் படத்தில் நடிச்சு இத்தனை வருஷம் ஆகியும் என்னை பார்க்கிற பலர், 'மாலா அக்கா அந்த சீக்ரெட் என்னன்னு சொல்லுங்க!'ன்னு கேட்பாங்க. உண்மையில் அப்படி ஒரு சீக்ரெட்டும் இல்லைங்கன்னு சொன்னா கூட சிலர் நம்பமாட்டாங்க. காதுல எதுவுமே பேசலைங்கிறது எனக்கும், ரேவதி அம்மாவுக்கும் மட்டும்தான் தெரியும்!' என்றார்.

தாரணி
தாரணி

இதுதவிர, பல விஷயங்கள் நடிகை தாரணி நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியை காண லிங்க்கை கிளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism