Published:Updated:

`அதைச் சொன்னா மிரட்டல் வரலாம்னு சொன்னாங்க!'- செல்லம்மா தொடரிலிருந்து விலகியது குறித்து திவ்யா

திவ்யா

`பாக்கியலட்சுமி' சீரியலை விட்டுட்டு போகிற ஐடியா எனக்கு இல்ல. அதனாலேயே எல்லா வாய்ப்புகளையும் தவிர்த்தேன். செல்லம்மா தொடர் வாய்ப்பு வந்தப்ப ஜெனிக்கும், மேகாவுக்கும் என்ன வித்தியாசம் காட்ட முடியும் அது நம்ம கண்டிப்பா பண்ணனும்னு நினைச்சேன். அதை நிச்சயம் பண்ணேன்னு நினைக்கிறேன்.

`அதைச் சொன்னா மிரட்டல் வரலாம்னு சொன்னாங்க!'- செல்லம்மா தொடரிலிருந்து விலகியது குறித்து திவ்யா

`பாக்கியலட்சுமி' சீரியலை விட்டுட்டு போகிற ஐடியா எனக்கு இல்ல. அதனாலேயே எல்லா வாய்ப்புகளையும் தவிர்த்தேன். செல்லம்மா தொடர் வாய்ப்பு வந்தப்ப ஜெனிக்கும், மேகாவுக்கும் என்ன வித்தியாசம் காட்ட முடியும் அது நம்ம கண்டிப்பா பண்ணனும்னு நினைச்சேன். அதை நிச்சயம் பண்ணேன்னு நினைக்கிறேன்.

Published:Updated:
திவ்யா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பாக்கியலட்சுமி' தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் திவ்யா கணேஷ். இவர்  `செல்லம்மா' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், திடீரென அந்தத் தொடரில் இருந்து திவ்யா வெளியேறினார். அதற்கான காரணம் குறித்தும், சீரியல் பயணம் குறித்தும் திவ்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியதிலிருந்து...

திவ்யா
திவ்யா

பாக்கியலட்சுமி சீரியல் எனக்கு நல்ல ரீச் கொடுத்திருக்கு. சமீபத்தில் ஏர்போர்ட்ல ஒருத்தங்க உன்னை மாதிரி ஒரு மருமகள் என் மகனுக்கு இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எதுவுமே பேசவே மாட்டேன்றீங்க, இன்னும் நிறைய சீன் கேட்கலாமே? நீங்க ஏன் கேட்க மாட்டேன்றீங்கன்னுலாம் கேட்டிருக்காங்க. அந்தக் கேரக்டர் இவ்ளோ தான் பேசுவாங்க போல அதனால தான் அப்படி எழுதியிருக்காங்க.

`பாக்கியலட்சுமி' சீரியலை விட்டுட்டு போகிற ஐடியா எனக்கு இல்ல. அதனாலேயே எல்லா வாய்ப்புகளையும் தவிர்த்தேன். `செல்லம்மா' தொடர் வாய்ப்பு வந்தப்ப ஜெனிக்கும், மேகாவுக்கும் என்ன வித்தியாசம் காட்ட முடியும் அது நம்ம கண்டிப்பா பண்ணனும்னு நினைச்சேன். அதை நிச்சயம் பண்ணேன்னு நினைக்கிறேன்.

திவ்யா
திவ்யா

சோசியல் மீடியா பேஜ்ல நான் பண்ணின லைவ் -லயே அந்தக் காரணத்தை வெளிப்படையா சொல்லியிருப்பேன். அடுத்த புராஜக்ட்டில் பிரச்னை ஆகலாம், யாராவது உன்னை மிரட்டலாம் எதுக்கும் நீ பர்சனல் காரணம்னு சொல்லுன்னு சொன்னாங்க.  என்னோட ஒர்க்ல இடையூறு இருந்த மாதிரி இருந்தது.  என்னை நடிக்க விடாத மாதிரி இருந்தது. ஒர்க் பண்ண நிம்மதியான சூழலாகவே இல்ல. காலையில் இருந்து நைட் வரை செட்ல தான் இருப்போம். ஒர்க் பண்ற எல்லா சீனும் அவங்க கூட தான் போயிட்டு இருந்தது. வெளியில போகிறதுக்கு முன்னாடி என்னால எவ்வளவு சரி பண்ண முடியுமோ சரி பண்ண டிரை பண்ணினேன். ஆனா, என்னால முடியல.  இது ஒர்க்அவுட் ஆகாது. நாமளாகத்தான் வெளியில வரணுமோன்னு வெளில வந்தேன். என் ஒர்க்ல இடையூறு இருந்ததால மட்டும்தான் வெளியில் வந்தேன். எனக்கு அது ரொம்ப மென்டல் பிரஷர் ஆக இருந்தது.

நான் எந்தத் தப்பும் பண்ணல. என் வேலையை மட்டும் தான் பார்ப்பேன். மேகா கேரக்டர் ரொம்பவே ரசிச்சு பண்ணிட்டு இருந்தேன். அந்தத் தொடரில் இருந்து விலகியது பர்சனலா எனக்குமே கஷ்டமாகத்தான் இருந்துச்சு. பட் இட்ஸ் ஓகே!' என்றார்.

திவ்யா
திவ்யா

இன்னும் பல விஷயங்கள் குறித்து திவ்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!