Published:Updated:

"உண்மையா பேசினா திமிருன்னு சொல்றாங்க... என்னை பெண் சிம்புன்னே சொல்லலாம்!"- ஜீவிதா

ஜீவிதா

"இப்ப நான் மீடியாவில் அதிகமா இல்லாததற்கான காரணமும் இதுதான். பேசுறதுக்கு மட்டும்தான் ரெடியா இருக்காங்களே தவிர பிரச்னையை கேட்கிறதுக்கு யாரும் ரெடியா இல்ல!" - ஜீவிதா

"உண்மையா பேசினா திமிருன்னு சொல்றாங்க... என்னை பெண் சிம்புன்னே சொல்லலாம்!"- ஜீவிதா

"இப்ப நான் மீடியாவில் அதிகமா இல்லாததற்கான காரணமும் இதுதான். பேசுறதுக்கு மட்டும்தான் ரெடியா இருக்காங்களே தவிர பிரச்னையை கேட்கிறதுக்கு யாரும் ரெடியா இல்ல!" - ஜீவிதா

Published:Updated:
ஜீவிதா
சின்னத்திரையில் நமக்கு பரிச்சயமான முகம் ஜீவிதாவுடையது. சமீபத்தில் அவரை வீடியோ பேட்டிக்காக சந்தித்தோம். அப்போது பல விஷயங்கள் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஜீவிதா
ஜீவிதா

"நான் சிரிச்ச நாள்களைவிட அழுத நாள்கள்தான் அதிகம். ஆனா, என் அழுகையை யாரிடமும் வெளிக்காட்ட மாட்டேன். எனக்கான அங்கீகாரம் கிடைக்காத சமயத்தில் அழுதிருக்கிறேன். நான் நினைச்சது நடக்காதப்ப அழுவேன். என் வாழ்க்கையில் தோல்வியை தான் சந்திச்சிருக்கேன். அட்ஜெஸ்மென்ட் என்கிற இடத்தில் நான் தோற்று போகிறேன். என்னதான் திறமை இருந்தாலும் நீ என்னை அட்ஜெஸ்ட் பண்ணாதான் அடுத்தக்கட்டத்துக்கு போக முடியும் என்கிற போது நான் தோத்து போகிறேன். எல்லாரையும் நான் சத்தியமா சொல்லல. 8 வருஷத்துல கிட்டத்தட்ட 11 படம் பண்ணியிருப்பேன். விட்ட படங்கள்தான் அதிகம். அதுவும் 300 படங்கள் விட்டிருக்கேன். அதிகமா அட்ஜெஸ்மென்ட் பண்ணாம இருந்ததாலயும், சம்பளத்தாலும்தான் தவறவிட்டிருக்கேன்.

இப்ப நான் மீடியாவில் அதிகமா இல்லாததற்கான காரணமும் இதுதான். பேசுறதுக்கு மட்டும்தான் ரெடியா இருக்காங்களே தவிர பிரச்னையை கேட்கிறதுக்கு யாரும் ரெடியா இல்ல. பிரச்னையை சொன்னா நமக்காக உதவி பண்றதுக்கும் யாரும் இல்ல. எல்லாரும் முகமூடி போட்டுட்டுதான் இருக்காங்க. ஆனா, அந்த முகமூடியில் நான் இல்லைங்கிறதை தைரியமா சொல்லுவேன். இது இல்லாம அவங்க குடும்பத்துல ஒருத்தியா என்னை நினைச்சு நான் நடிச்சா நல்லா இருக்கும்னு கூப்பிடுறவங்களும் இருக்காங்க. நல்ல டீம், நல்ல இயக்குநர்களையும் நான் சந்திச்சிருக்கேன்.

ஜீவிதா
ஜீவிதா

பொண்ணுன்னாலே இதுக்குதான்னு நினைப்பாங்களான்னும் தெரியல. அவங்களுக்கெல்லாம் பொண்டாட்டி, புள்ளைங்க இருக்காங்கலான்னும் தெரியல. அவங்க எல்லாரும் அவங்க அம்மா வயித்துலதான் பிறந்தாங்களான்னும் தெரியல. என் முன்னாடி வந்து கேள்வி கேட்கட்டும் அவங்களுக்கு நான் பதில் சொல்ல ரெடியா இருக்கேன். நான் நினைச்சாதான் இந்தப் படத்தில் உனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நேரடியா சொல்லுவாங்க. இப்ப இன்டஸ்ட்ரி ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு. உண்மையா பேசினா திமிருன்னு சொல்றாங்க. எனக்கு நடக்கிறதை தைரியமா சொல்ல ஆரம்பிச்சிட்டேன். சின்ன வயசில இருந்தே ஆட ஆரம்பிச்சிட்டேன். என்னை ஒரு பெண் சிம்புன்னே சொல்லலாம். பேசுறதுக்கு, ஆறுதல் சொல்றதுக்கு கூட எனக்கு யாரும் இல்ல. ஆனா, நான் எல்லாருக்கும் ஆறுதலா இருக்கேன் என்பது எனக்கு மன நிறைவா இருக்கு."

இன்னும் பல விஷயங்கள் இது தொடர்பாக ஜீவிதா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றை காண லிங்கை கிளிக் செய்யவும்!