Election bannerElection banner
Published:Updated:

`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையாக `பாரதி கண்ணம்மா’ காவ்யா!

காவ்யா
காவ்யா

"இருந்தாலும் சீரியல் ஒளிபரப்பாக எபிசோடு வேணுமேனுதான் முல்லையா நடிக்க காவ்யாவை கமிட் செஞ்சிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு சும்மா குடும்பத்தோடு உட்கார்ந்திருக்கிற மாதிரியான காட்சிகள்தான் இருக்கும்."

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ’முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா இரண்டு வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். சித்ராவுக்கு பதில் முல்லையாக நடிக்கப்போவது யார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில் இப்போது 'பாரதி கண்ணம்மா' காவ்யா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வாகியிருக்கிறார்.

சீரியலில் காவ்யா இடம் பெறும் காட்சிகளின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக இந்தக் கேரக்டருக்கு சரண்யா, ’ஜோடி’ ஆனந்தி, ஓரளவுக்குச் சித்ராவின் சாயலில் இருக்கும் கீர்த்தனா உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன.

சித்ரா
சித்ரா

இன்னொரு புறம், சித்ராவின் மரணம் தந்த பாதிப்பால் யாரைக் கொண்டு வந்தாலும் சீரியல் பழையபடி போகுமா எனச் சந்தேகிப்பதால் தொடரையே முடித்து விட சேனல் யோசித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், காவ்யா ‘முல்லை’யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சீரியல் யூனிட்டில் சிலரிடம் பேசினோம்.

‘’சித்ரா திடீர் மரணம் தந்த அதிர்ச்சியில இருந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் இன்னும் மீளவே இல்லை. வேற வழியில்லை, சீரியல் வந்தாகணுமேனுதான் கடந்த பத்து நாளா எல்லாருமே ஷூட்டிங் வந்து போயிட்டிருக்கோம். ஷூட்டிங் ஸ்பாட் நார்மலுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம். எந்தப் பக்கம் திரும்பினாலும் சித்ரா நினைவாகத்தான் இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லி துயரத்தைப் பகிர்ந்திட்டிருக்கோம்.

காவ்யா
காவ்யா

இயற்கையான மரணமா இருந்தாக்கூட ஓரளவுக்கு சமாதானமாகிடலாம். எப்படி இறந்தாங்கன்னே தெரியாத ஒரு சூழல்ல அவங்க மரணத்துக்குப் பிறகும் அது தொடர்பா நிறையக் கேள்விகள், சந்தேகங்கள்னு வந்திட்டிருக்கிறதால யூனிட்ல யாருக்குமே மனசு சரியில்லை.

இருந்தாலும் சீரியல் ஒளிபரப்பாக எபிசோடு வேணுமேனுதான் முல்லையா நடிக்க காவ்யாவை கமிட் செஞ்சிருக்காங்க.

இன்னும் கொஞ்ச நாளைக்கு சும்மா குடும்பத்தோடு உட்கார்ந்திருக்கிற மாதிரியான காட்சிகள்தான் இருக்கும். ஹீரோவுடனான நெருக்கமான காட்சிகள் இப்போதைக்கு இடம்பெற வாய்ப்பில்லை" என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு