Published:Updated:

"மறுபடியும் விஜய், அஜித் கூட பிளாஷ்பேக் ஹீரோயினா நடிக்கணும்!"- கீர்த்தனா

கீர்த்தனா
News
கீர்த்தனா

"தெலுங்கு, மலையாளம் ரெண்டிலும் பிஸியா இருந்த சமயம் அஜித்துடன் சேர்ந்து 'பவித்ரா' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. இதுவரை பல படங்களில் நடிச்சிருந்தாலும் 'பவித்ரா' எனக்கு பர்சனலா பிடிச்ச திரைப்படம்!"

'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர், நடிகை கீர்த்தனா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக வலம் வந்தவர் தற்போது தமிழ் சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அன்பே வா, ரோஜா, வித்யா நம்பர் 1, திருமதி ஹிட்லர், அக்னி நட்சத்திரம், வாடி ராசாத்தி போன்ற தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவரை ஒரு தேநீர் இடைவெளியில் சந்தித்தோம்.
கீர்த்தனா
கீர்த்தனா

"5 வயதில் இருந்தே பரதநாட்டியம் ஆடுவேன். ஒரு டான்ஸ் ஷோவில் என்னை பார்த்துட்டுதான் சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. தெலுங்குதான் என்னுடைய முதல் படம். அதுக்கு பிறகு தமிழில் 'நாளைய தீர்ப்பு' படத்திற்காக வந்திருந்தேன். விஜய்யின் 32வது கதாநாயகி! எனக்கு முன்னாடி 31 பேர் ஆடிஷனுக்கு வந்து வேண்டாம்னு ரிஜெக்ட் ஆகி ஃபைனலா நான் செலக்ட் ஆனேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனக்கு எப்பவும் கேமரா பயமெல்லாம் இல்லை... சினிமாத்துறையில் பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். என் பதினான்காவது வயதிலேயே நடிக்க வந்ததனால ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. படிப்படியா கத்துக்கிட்டேன். தெலுங்கு, மலையாளம் ரெண்டிலும் பிஸியா இருந்த சமயம் அஜித்துடன் சேர்ந்து 'பவித்ரா' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. இதுவரை பல படங்களில் நடிச்சிருந்தாலும் 'பவித்ரா' எனக்கு பர்சனலா பிடிச்ச திரைப்படம்.

கீர்த்தனா
கீர்த்தனா

தொடர்ந்து படங்களில் நடிச்சிட்டு இருக்கும்போது 'அக்‌ஷயா' என்கிற சீரியலில் டைட்டில் ரோலில் நடிக்க ஆஃபர் வந்துச்சு. அந்த சீரியலில் நடிக்கும்போது எனக்கு திருமணம் ஆகிட்டதால் ஃபேமிலிக்காகக் கொஞ்சம் பிரேக் எடுத்திருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா டைமில் சீரியல் ஆஃபர் வந்துச்சு. இப்ப தமிழிலேயே பல சீரியல்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிச்சிட்டு இருக்கேன். என் முகம் பாஸிட்டிவ் ரோலுக்கு மட்டும்தான் செட்டாகும் என்பதை மாற்றி அழகான வில்லியா நடிச்சிட்டு இருக்கேன். என் முகத்துல கோபத்தைக் கொண்டு வர்றதுக்காகத்தான் அதிகமா மெனக்கெட வேண்டியிருக்கு" என்றவரிடம் சினிமா ரீஎன்ட்ரி குறித்து கேட்டோம்.

கீர்த்தனா
கீர்த்தனா

"மறுபடியும் விஜய், அஜித்துக்கு பிளாஷ்பேக் ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன். திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் சினிமாவிலும் ரீ-என்ட்ரி தான்!"

நடிகை கீர்த்தனா குறித்த இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!