Published:Updated:

"நடிக்க வந்ததும் பலரும் பலவிதமா பேசினாங்க; உண்மையைச் சொல்லணும்னா..."- `HR டு சீரியல் நடிகை' கிருபா

கிருபா

ஆச்சி மசாலா கம்பெனியில் HR ஆக வேலை பார்த்தேன். அங்கே இருக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

"நடிக்க வந்ததும் பலரும் பலவிதமா பேசினாங்க; உண்மையைச் சொல்லணும்னா..."- `HR டு சீரியல் நடிகை' கிருபா

ஆச்சி மசாலா கம்பெனியில் HR ஆக வேலை பார்த்தேன். அங்கே இருக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

Published:Updated:
கிருபா
`என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை சந்திச்சிருக்கேன். இனி நீ உனக்காக வாழுமான்னு என் பிள்ளைங்க கொடுத்த அன்பினால் இப்ப எனக்கு பிடிச்சதை பண்ணிட்டு என் பசங்களோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்!' என்றவாறு பேசத் தொடங்கினார், கிருபா.
கிருபா
கிருபா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'பூவே உனக்காக' தொடரிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ஈரமான ரோஜாவே' தொடரிலும் நடித்துக் கொண்டிருப்பவரை சந்தித்துப் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்கு மூணு பசங்க இருக்காங்க. பத்து வருஷம் நானும், என் கணவரும் சேர்ந்து வாழ்ந்தோம். பிறகு, என் பசங்களை கூட்டிட்டு தனியா வந்துட்டேன். பசங்களுக்காகவே வாழ ஆரம்பிச்சேன். ஆச்சி மசாலா கம்பெனியில் HR ஆக வேலை பார்த்தேன். அங்கே இருக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

கிருபா
கிருபா

திடீர்னு ஒரு நாள் விஜய் டிவியில் இருந்து போன் பண்ணி ஒரு சீரியலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கான்னு கேட்டாங்க. என் பசங்ககிட்ட அதுபற்றி கேட்டதுக்கு உனக்கு ஓகேன்னா பண்ணும்மான்னு சொன்னாங்க. சரின்னு ஆச்சி மசாலாவில் பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு முன் பின் அறிமுகம் இல்லாத ஆக்டிங் துறைக்குள் வந்தேன்.

ஆரம்பத்தில் நான் நடிக்கிறதுக்கு வந்தப்போ பலரும் பலவிதமா பேசினாங்க. உண்மையா சொல்றேன்.. இதுவரைக்கும் மீடியாவில் அப்படியொரு விஷயத்தை நான் சந்திக்கல என்றவர் தொடர்ந்து பேசினார்.

கிருபா
கிருபா

'சரண்யா பொன்வண்ணன்' மாதிரி நீயும் அம்மா கேரக்டருக்கு கரெக்டா இருப்பன்னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொல்லுவாங்க. அவங்களை மாதிரி பெரிய ஹீரோவுக்கு அம்மாவாக இல்லைன்னாலும் வளர்ந்து வரும் ஹீரோக்களுக்காவது அம்மாவாக நடிக்கணும்னு விரும்புறேன். இப்ப அப்படியான ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். எல்லாருக்கும் நான் அம்மா கேரக்டருக்கு செட் ஆவேனான்னு ஒரு தயக்கம் இருக்கும். இந்தப் படம் வெளிவந்ததும் நிச்சயம் எல்லாருக்கும் என் மேல நம்பிக்கை வரும்னு நம்புறேன்.

'மாநாடு' படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும்போது அவர்கிட்ட சகஜமா பேசினேன். அவரும் நல்ல மனிதர். ஜாலியா பேசினார். படம் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு தானே அடுத்த ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க.. ஒரு வருஷம் கழிச்சு அவரை பார்த்தப்ப அவ்வளவு எடை குறைச்சிருந்தார். எப்படி சார் இப்படின்னு கேட்டதுக்கு, 'ஹார்ட் ஒர்க் மேடம்'னு சிரிச்சிட்டே பதில் சொன்னார்.

கிருபா
கிருபா

இன்னும் 'மெர்சல்' படம் தொடர்பாகவும், அவருடைய பர்சனல் லைப் தொடர்பாகவும் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவை காண லிங்கை கிளிக் செய்யவும்!