Published:Updated:

`கையில பட்ட கத்தி கழுத்துக்குப் போயிருந்தா என்ன ஆகுறது?' - மதுமிதாவின் கணவர் ஜோயல்

மதுமிதா படபடன்னு பேசுவாங்கதான். ஆனா, அவங்க வெள்ளந்தியான ஆள். அதனாலதான் இன்னமும்கூட இந்த ஷோ ஸ்க்ரிப்ட் இல்லன்னு நம்பிட்டிருக்காங்க.

மதுமிதாவுடன் ஜோயல்
மதுமிதாவுடன் ஜோயல்

``நடுராத்திரியில போன் பண்ணி என்ன ஏதுன்னுகூட முழுசா சொல்லாம, `உடனே வந்து உங்க மனைவியைக் கூட்டிட்டுப் போங்க’னு சொன்னாங்க. அந்த செகண்ட் நான் அனுபவிச்ச பதற்றம் எனக்கு மட்டும்தான் தெரியும். அடிச்சுப் புடிச்சு ஸ்பாட்டுக்குப் போனா, கையில 12 முறை கத்தியால கீறி கட்டுப் போட்டிருக்கிற சூழல்ல பார்த்தேன்.

கையில் ஏற்பட்ட காயத்துடன் மதுமிதா
கையில் ஏற்பட்ட காயத்துடன் மதுமிதா

`ஒரு கேம் ஷோதானே’னு நம்பி அனுப்பினதுக்குத்தான் இந்தத் தண்டனையா... கையில பட்ட கத்தி கழுத்துக்குப் போயிருந்தா... நினைக்கிறப்பவே பதறுது. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகியிருந்தா என்ன ஆகியிருக்கும் எங்க வாழ்க்கை?'' - பிக் பாஸ் ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதாவின் கணவர் ஜோயலின் கேள்வியில்தான் இந்தக் கோபம். கடந்த சில தினங்களில் மதுமிதாவைச் சுற்றிய பிரச்னைகளின்போது, அவருக்கு ஆறுதலாக உடனிருந்த ஜோயலிடம் பேசினோம்.

மதுமிதா, ஜோயல்
மதுமிதா, ஜோயல்

``ஒண்ணு அந்த வீட்டுக்குள்ள மக்களை ஏமாத்தற மாதிரியான `பாவ்லா’ சண்டை போடணும்... இல்லையா, லவ் பண்ணணும். இதைச் செஞ்சிட்டே இருந்தாதான் அது நல்ல பெர்ஃபாமன்ஸ். மதுமிதாவுக்கும் கோபம் வரும். நியாயமான காரணத்துக்காக சீரியஸான சண்டை போட பயப்படாதவங்கதான் அவங்க.

ஷோவுலேயும் அப்படியான சண்டை போட்டிருக்காங்க, அரைகுறையா டிரெஸ் போட்டுத் திரிஞ்சவங்ககிட்ட சக ரூம் மேட்ங்கிற உரிமையில, `நம்மள உலகமே பார்த்திட்டிருக்கு. இப்படி நடந்துக்கிட்டா அசிங்கமா இருக்காதா’னு கேட்டிருக்காங்க. ஆனா, `நீங்க இதெல்லாம் கேட்கக் கூடாது; அவங்க அப்படித்தான் இருப்பாங்க’னு சொல்லப்படுதுன்னா என்னங்க அர்த்தம்? அதாவது கோபப்படக் கூடாது, கோபப்படுற மாதிரி நடிக்கணும். இது என்ன சினிமா, சீரியல் ஷூட்டிங்கா? அதுவும் போக நீங்க நடிக்கணும்னு சொல்லி கூப்பிடலையே?

மதுமிதா
மதுமிதா

மது படபடன்னு பேசுவாங்கதான். ஆனா, அவங்க வெள்ளந்தியான ஆள். அதனாலதான் இன்னமும்கூட இந்த ஷோ ஸ்க்ரிப்ட் இல்லன்னு நம்பிட்டிருக்காங்க. ஆனா, அவங்களோட பெர்ஃபாமன்ஸ் சரியில்லைன்னு என் காதுல ஒரு வார்த்தை விட்டாங்க பாருங்க... அங்கதான் ஷோவோட ஒரிஜினல் தெரியவந்தது.

ஷோவுல கலந்துக்கலாம்கிறது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். ஆனா, அந்த முடிவு ரொம்பத் தப்பான முடிவுங்கிறதை உணர்ந்துகிட்டோம்’' எனக் கோபமாகப் பேசி முடித்தார் ஜோயல்.