Published:Updated:

விகடன் TV: “குத்துப்பாட்டு ஆடவும் தயார்!”

மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மகேஸ்வரி

‘அந்தப் பொண்ணு ஹோம்லியான கேரக்டர்தானே பண்ணும்’னு அவங்களாவே முடிவு செய்துக்கிடறாங்கன்னு தெரியவந்தது.

விகடன் TV: “குத்துப்பாட்டு ஆடவும் தயார்!”

‘அந்தப் பொண்ணு ஹோம்லியான கேரக்டர்தானே பண்ணும்’னு அவங்களாவே முடிவு செய்துக்கிடறாங்கன்னு தெரியவந்தது.

Published:Updated:
மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மகேஸ்வரி

தமிழில் சேட்டிலைட் சேனல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது தொலைக்காட்சிக்கு அறிமுகமாகி, இன்றுவரை தாக்குப்பிடித்து நிற்கிறவர்களைக் கணக்கெடுத்தால் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அந்தப் பட்டியலில் நிச்சயம் தவறவிட முடியாத ஒருவர் மகேஸ்வரி. காம்பியரிங், `சீரியல், சினிமா மற்றும் விளம்பரப் படங்களில் நடிப்பு’ என ஒரு ரவுண்ட் வந்தவர் இப்போது காஸ்ட்யூம் டிசைனரும்கூட.

‘`ஆனந்தக்கண்ணன், பிரஜின், நான்னு ஒரு கூட்டமே ஜாலியா ஒர்க் பண்ணின அது ஒரு பொற்காலம். சன் மியூசிக்ல லைவ்ல தொகுத்து வழங்கத்தான் முதன்முதலா டிவிக்குள் வந்தேன். லைவ் நிகழ்ச்சிங்கிறதால தவறுகளைக்கூட எச்சரிக்கையாச் (?) செய்வோம். அந்த நாள்கள் என்னுடைய கரியர்ல மறக்க முடியாத நாள்கள். அன்னைக்கு ப்ரெண்ட்ஸா இருந்த பலரோட தொடர்பு எண் கூட இப்ப எங்கிட்ட இல்லைங்கிறதை நினைக்கிறப்ப வருத்தமா இருக்கு. அதேநேரம், அப்ப இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் டிவியில இருக்கேன்னு நினைக்கிறப்ப சின்ன சந்தோஷமும் இருக்கு.”

மகேஸ்வரி
மகேஸ்வரி

``காம்பியரிங் முடிச்சுட்டு சீரியல் பக்கம் வந்தீங்க. ஆனா ரெண்டு சீரியலுக்குப் பிறகு உங்களை அந்த ஏரியாவுல பார்க்க முடியலையே ஏன்?’’

“ ‘புதுக்கவிதை’, ‘தாயுமானவன்’னு ரெண்டு சீரியல் விஜய் டிவியில பண்ணினேன். நல்ல வரவேற்பு கிடைச்ச சீரியல்கள்தான். ஆனா அந்தச் சமயத்துலதான் தனிப்பட்ட வாழ்க்கையில சில கமிட்மென்டுகள். அதனால பிரேக் தேவைப்பட்டுச்சு. பொதுவாகவே நான் எதன் பின்னாடியும் ஓடற ஆள் இல்லை. பணம், பேர், புகழ் எல்லாம் தாண்டி என் மனசுக்குப் பிடிச்ச விஷயத்துக்கு முக்கியத்துவம் தர விரும்புவேன். அதனால அந்த பிரேக் நானா விரும்பி எடுத்தது. அந்த இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் இண்டஸ்ட்ரியை எட்டிப் பார்த்தா, மறுபடியும் ஆங்கரா வாங்கன்னு கூப்பிட்டாங்க. பிடிச்ச வேலைதானே, அதனால ஜீ தமிழில் திரும்பவும் ஆங்கரானேன். நல்லபடியா போயிட்டிருந்தது. அந்த நேரத்துலதான் கொரோனா வந்து இப்ப சில மாசமா வீட்டுல இருக்கேன். ஆனா இந்த பிரேக் நான் மட்டுமில்லீங்க, யாருமே விரும்பாத பிரேக்.’’. (பஞ்ச் நல்லாருக்கா எனச் சிரிக்கிறார்)

``பஞ்ச் நல்லாதான் இருக்கு. ஆனா சமீபத்துல நீங்க பண்ணிய போட்டோஷூட்ல கிளாமர் தூக்கலா இருக்கற மாதிரி தெரியுதே. இமேஜ் பஞ்சர் ஆகாதா?’’

’’அதான் மனசுக்குப் பிடிச்சதைச் செய்வேன்னு சொன்னேனே! போட்டோஷூட் அந்த மாதிரிதான். ஏன்னு தெரியலை, படங்கள் பெரிசா எனக்கு அமையலை. அதுபத்தி நான் விசாரிச்சப்ப, ‘அந்தப் பொண்ணு ஹோம்லியான கேரக்டர்தானே பண்ணும்’னு அவங்களாவே முடிவு செய்துக்கிடறாங்கன்னு தெரியவந்தது. `ரியல் லைப்லயே ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னுதான் நான் சேலையே கட்டுவேன்யா’ன்னு ஒவ்வொருத்தராப் போய் சொல்லிட்டிருக்க முடியுமா? சோஷியல் மீடியாங்கிறது நமக்கான சுதந்திரமான பிளாட்பாரம். `நல்ல குத்துப்பாட்டுன்னா நான் ஆடவும் ரெடி’ங்கிற உணர்த்த சில போட்டோக்களை அதுல போட்டேன். அந்த போட்டோஷூட்டால ப்ளஸ் மைனஸ் ரெண்டுமே வந்துச்சு. மத்தபடி இமேஜ் டேமேஜ் ஆகும்னு நினைக்கலை. ஏன்னா, நான் ஹோம்லியா எத்தனை படத்துலங்க நடிச்சிருக்கேன்?” (மறுபடியும் சிரிப்பு)

விகடன் TV: “குத்துப்பாட்டு ஆடவும் தயார்!”

``காஸ்ட்யூம் டிசைனிங் எப்படி? இப்ப சிம்புவுக்கு ஆஸ்தான காஸ்ட்யூம் டிசைனர் நீங்கதானாமே?’’

‘`ஆங்கரா இருந்தப்ப என்னோட டிரஸ்ஸிங் பத்தி பலரும் பாசிட்டிவான கமென்டுகளைத் தந்தாங்க. என்னுடன் கோ ஆங்கரா இருந்த கமல், ‘நான் சராசரியான வடசென்னைப் பையன். என்னைக் கொஞ்சம் அழகாக் காட்ட முடியுமா’ன்னு சாதாரணமாக் கேட்டார். ட்ரையல் பார்க்க ஆள் கிடைச்சா போதாதா, அவரை வச்சுத்தான் தொடங்கினேன். அது அப்படியே வளர்ந்து அடுத்தடுத்து வாய்ப்பு வந்தது. ‘பியார் பிரேமா காதல்’ல ஹரிஷ் கல்யாணுக்குப் பண்ணினேன். பிறகு ஜி.வி.பி., அஞ்சலின்னு சிலர் கூப்பிட்டாங்க.

`பெரியார் குத்து’ங்கிற ஆல்பம் மூலமா சிம்பு சார்கிட்ட அறிமுகமானேன். பிறகு `ஆனந்த விகடன் பிரஸ் மீட்’ பண்ணினப்பவும் இருந்தேன். பிறகு சில ஷோக்களில் அவருக்குப் பண்ணியிருக்கேன். அதுக்காக ‘அவரோட ஆஸ்தான காஸ்ட்யூம் டிசைனர்’ங்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவரான கமென்ட்.

டிவி விகடன் தொகுப்பு: அய்யனார் ராஜன்