Published:Updated:

`நான் லவ் பண்றது அவங்க புருஷனுக்கே தெரியும்!' - `மின்னல்' தீபாவுடன் ரகளை செய்த இளைஞர்

மின்னல் தீபா
மின்னல் தீபா

`மின்னல்' தீபா தற்போது `யாரடி நீ மோகினி' தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவரை யாரோ அடித்துவிட்டார்கள் எனத் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து அவரிடமே பேசினோம்.

`மாயண்ணன் வந்திருக்காக... மாப்பிள மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்கள்லாம் வந்திருக்காக...' -`மாயி' படத்தில் வடிவேலு பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் வரும் டயலாக் இது.

அப்போது மின்னலாக வருபவர்தான் தீபா. விருட்டு விருட்டென வரும் இந்த காமெடிக்கு, ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரித்தனர். இந்தப் படத்திற்குப் பிறகுதான் தீபா என்ற இவரதுப் பெயருக்கு முன்னால் `மின்னல்' என்ற அடைமொழியும் சேர்ந்துகொண்டது.

மின்னல் தீபா
மின்னல் தீபா

சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் டிவி பக்கம் வந்த தீபா, தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் `யாரடி நீ மோகினி' தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவரை யாரோ அடித்துவிட்டார்கள் என தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து அவரிடமே பேசினோம்.

"சினிமாவுலேயும், டிவிலேயும் இவ்வளவு நாளா நடிச்சிட்டிருக்கேன். என்னைக்காவது ஒரு சர்ச்சையான செய்தி என்னைப் பத்தி வெளிவந்திருக்கா? ஃப்ரெண்ட்னு சொல்லிப் பழகுன ஒருத்தரால வந்த வினை இது..." என்றவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது குறித்துத் தொடர்ந்தார்.

"என்னோட திருமண வாழ்க்கையில சின்னதா ஒரு பிரச்னை. எனக்கும் என் கணவருக்கும் இடையில ஏற்பட்டிருக்க இந்தப் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வந்துடும்னு நாங்க ரெண்டு பேருமே நம்புறோம். எங்களோட இந்தக் குடும்பப் பிரச்னையில மூணாவது நபர் ஒருத்தர் புகுந்துட்டார். எங்க ரெண்டு குடும்பத்துக்கும் தெரிஞ்ச ஒரு ஆள்தான். நண்பர்னு சொல்லித்தான் பழகினார். இதனால எங்களுக்குப் பெருசா வித்தியாசம் தெரியலை. ஆனா, போகப் போக அந்த நபரோட நடவடிக்கைகள் மாறத் தொடங்குச்சு. ஒரு கட்டத்துல, தற்காலிகமா நான் கணவரோட பிரிஞ்சிருக்கிறதை நிரந்தரமாக்க முயற்சி செய்றார்னு என்னால உணர முடிஞ்சது. இதனால அவரோட பேசுறதை நிறுத்தினேன். அதுல இருந்து முன்னைவிட மூர்க்கமா நடந்துக்கத் தொடங்கிட்டார். என்னைக் கல்யாணம் பண்ணப்போறதா எங்களுக்குத் தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டிருந்தார்.

மின்னல் தீபா
மின்னல் தீபா

தொடர்ந்து போன்ல தொந்தரவு கொடுத்திட்டிருந்தவர், அன்னைக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துட்டார். அங்க வந்து, `ஏன் என்னோட பேச மாட்டேங்கிற'னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டார். என் போனை வாங்கி நான் யார் யார்கிட்ட பேசியிருக்கேன்னு பார்த்து, கோபம் வந்து மொபைலையும் உடைச்சிப்போட்டார். அப்புறம் என்னையும் அடிச்சு ரொம்பப் பிரச்னை ஆகிடுச்சு. கிட்டத்தட்ட சைக்கோ மாதிரி நடந்துகிட்டார். ஸ்பாட்ல இருந்தவங்ககிட்ட, `நான் இவங்களை லவ் பண்றேன். அது இவங்க புருஷனுக்கே தெரியும்'னு கத்திக் கூச்சல் போட்டார். அப்புறம் என்னோட கணவர் அங்க வந்த பிறகுதான் அங்க இருந்து அவர் போனார்."

"முன்னாடி ஃபேமிலி ஃப்ரெண்ட்ங்கிறதால போலீஸ் புகார் கொடுக்கவும் யோசனையா இருக்கு. இப்போ அவரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்ககிட்ட பேசியிருக்கோம். இன்னொரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார்ன்னா போலீஸ் புகார் கொடுக்கிறதைத் தவிர வேற வழி இல்லை'' என்றார் தீபா.

மின்னல் தீபா
மின்னல் தீபா
``சந்திரமுகி, புலிகேசி மட்டுமில்ல... இதையெல்லாம்கூட நான்தான் வரைஞ்சேன்!'' - கலை இயக்குநர் தேவா

தீபாவின் கணவர் ரமேஷிடம் பேசிய போது, "அந்தாள் ஒன் சைடா தீபாவை லவ் பண்ணியிருக்கார். அன்னைக்குப் பிரச்னையானதும், உடனே நானும் ஸ்பாட்டுக்குப் போனேன். அதை அன்னைக்கே சரி பண்ணிட்டோம். இது தொடர்பா மேற்கொண்டு எதையும் பேச விரும்பலை'' என முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு