Election bannerElection banner
Published:Updated:

``உன் பேரு பிரியாதானே... ஏன் பேரை மாத்திட்ட’னு விஜய் சார் கேட்டார்..!’’ - நீபா

நீபா
நீபா

`மானாட மயிலாட’ நிகழ்ச்சி என்றாலே நீபா தான் முதலில் நினைவில் வருவார். திருமணம் ஆனதும், சின்னத்திரைக்கும் சினிமாவுக்கும் `பை பை' சொன்னவர், தற்போது ஜீ தமிழ் `சூப்பர் மாம்’ நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரை சந்தித்துப் பேசினோம்.

``சண்முகப்பிரியா எப்படி நீபாவாக மாறினார்..?"

Neepa with family
Neepa with family

``நான் சின்ன வயசுலேயே சினிமாவுக்குள்ள வந்துட்டேன். அப்போ என் பெயர் சண்முகப்பிரியாதான். எனக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ் மேல ஆர்வம். எங்க அம்மா டான்ஸ் மாஸ்டரா இருந்ததால, அவங்ககிட்டதான் டான்ஸ் கத்துக்கிட்டேன். என்னதான் அம்மா மாஸ்டரா இருந்தாலும், நாம அவங்களை அம்மாவாதானே பார்ப்போம். அப்படி நான் கிளாஸ் டைம்ல செல்லம் கொஞ்சிட்டு, அடிக்கடி ரெஸ்ட் எடுத்துட்டிருப்பேன். இதெல்லாம் பார்த்த எங்க அம்மா, `இது சரியா வராது. நீ வேற மாஸ்டர்கிட்ட டான்ஸ் கிளாஸ் போ’னு சொல்லி, வீணா ரமணி மேடம்கிட்ட சேர்த்துவிட்டாங்க. கொஞ்ச நாள்லேயே அப்பா, அம்மாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சது. அம்மாவுக்கும் உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. அப்போ, நானும் சினிமாவுல டான்ஸரா போக ஆரம்பிச்சேன். டான்ஸரா இருந்துட்டே அப்படியே அசிஸ்டென்ட் கோரியோகிஃபராவும் இருந்தேன். ராபர்ட் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர்கிட்ட அசிஸ்ட்டென்டா இருந்தப்போ, விஜய் டி.வி-யில `காவ்யாஞ்சலி’ சீரியலுக்கு ஆடிஷன் போயிட்டிருந்தது. கிட்டத்தட்ட 500 பேர் ஆடிஷனுக்கு வந்திருந்தாங்க. அதுல நான் செலக்ட்டாகி, அந்த சீரியல்ல மெயின் ரோல் நடிச்சேன். நடிக்க ஆரம்பிச்ச அப்புறம்தான் என் பெயரை நீபானு மாத்திக்கிட்டேன். அப்போ இருந்து இப்போ வரைக்கும் நீபாதான்.’’

``சின்னத்திரையில் `மானாட மயிலாட’ மாதிரி சினிமாவில் `காவலன்’ உங்களுக்கு ரொம்ப முக்கியமான படம். அதில் விஜய், வடிவேலுவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?"

`` `காவலன்’ படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே விஜய் சாரோடு நான் வொர்க் பண்ணியிருக்கேன். ஸ்ரீதர் மாஸ்டர்கிட்ட அசிஸ்ட்டென்டா இருந்தப்போ, `புதிய கீதை’ படத்தோட `மெர்க்குரி பூவே’ பாட்டுல வொர்க் பண்ணுனேன். அப்போ, நான் ரொம்ப சின்னப் பொண்ணு. நான்தான் மீரா ஜாஸ்மின் மேடம் ஆடவேண்டிய டான்ஸ் மூவ்மென்ட்டை, அவங்களுக்கு ஆடிக் காட்டுவேன். டூயட்டுங்கிறதால, விஜய் சாரோட சேர்ந்தும் ஆடிக் காட்டினேன். ஷூட் முடிஞ்சதுக்கு அப்பறம் விஜய் சாரோடு ஓடிப் பிடிச்சு விளையாடுவோம். அந்த அளவுக்கு ஜாலியா இருந்தோம். அதுக்கப்பறம் கிட்டத்தட்ட 8 வருஷம் கழிச்சு `காவலன்’ பட ஷூட்டிங்கிலதான் அவரைப் பார்த்தேன். அதுக்கிடையில அவரைப் பார்த்ததேயில்லை. என்னை அவருக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியாமத்தான் அவர்கிட்ட பேசப்போனேன். என்னைப் பார்த்ததும், `உன் பேரு பிரியாதானே... ஏன் நீபானு மாத்திக்கிட்ட’னு கேட்டார். எனக்கு செம ஷாக். `உங்களுக்கு இன்னும் என்னை ஞாபகம் இருக்கா’னு கேட்டேன். அப்போதான் எனக்கு ஒரு விஷயம் நல்லா புரிஞ்சது. பெரிய லெவலுக்குப் போன எந்த ஒரு நடிகரும் பழசை மறக்க மாட்டாங்க. அதுனாலதான் அவங்க அந்த லெவல்ல இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்."

Kaavalan movie still
Kaavalan movie still

வடிவேலு சாரைப் பார்த்தாலே தன்னால சிரிப்பு வந்திடும். அவர் காமெடி பண்றதை பக்கத்துல நின்னு பார்க்கும்போது சிரிப்பை அடக்கவே முடியாது. அவரோட சேர்ந்து நடிக்கும்போது, எப்படியாவது சிரிப்பை அடக்கிடணும்னுதான் ஒவ்வொரு ஷாட்டும் ட்ரை பண்ணுவேன். அப்படி பெரிய பெரிய டாஸ்குகளைக் கடந்துதான் `காவலன்’ படத்துல நடிச்சேன். அந்தப் படம் பண்ணும்போது, இயக்குநர் ஒரு சீனோட லைன்தான் சொல்வார். அந்த லைனை வெச்சுக்கிட்டு, வடிவேலு சார் பயங்கரமா வொர்க் பண்ணி, அதைப் பெருசா ஆக்கிடுவார். அந்தத் திறமை இருக்கிறதுனாலதான் அவர் லெஜென்ட்.’’

``கல்யாணத்துக்கு அப்பறம் ஏன் பெரிய பிரேக் எடுத்துக்கிட்டீங்க..?"

``கல்யாணத்துக்கு அப்பறம் நான் நடிக்கிறதுல என் கணவருக்கு விருப்பம் இல்லை. அதுனால நானும் வீட்டுலதான் இருந்தேன். நிறைய பேர் என் கணவர்கிட்ட, `ஏன்பா ஒரு திறமையான ஆளை வீட்டுக்குள்ளயே வெச்சிருக்க’னு சொல்லிச் சொல்லி, ஒரு கட்டத்துல `உனக்கு நல்ல வாய்ப்பு வந்தா மறுபடியும் நடிக்கப் போ’னு சொன்னார். அதுக்கப்பறம் ஜீ தமிழ் சேனல்லயிருந்து `சூப்பர் மாம்’ நிகழ்ச்சிக்காகக் கூப்பிட்டாங்க. இப்போ அந்த நிகழ்ச்சியிலதான் பிஸியா இருக்கேன்."

சூப்பர் மாம்
சூப்பர் மாம்
ஷிமோகாவில் ஷூட்டிங்; பெரும் தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ்! - `விஜய் 64' அப்டேட்ஸ்

நான் திரும்பவும் நடிக்க வரும்போது எனக்கு ஒரு விஷயம் மட்டும்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. ரொம்பக் காலமாவே கிளாமர் ரோல் பண்றவங்களை நிறைய பேர் தப்பா பேசுறாங்க. முன்னாடியெல்லாம், ஒரு படத்துக்கு ஹீரோயின்னு ஒரு நடிகை தனியா இருப்பாங்க. கிளாமர் பண்றதுக்குனு ஒரு நடிகையை வெச்சிருப்பாங்க. ஆனா இப்போ, ஹீரோயின்களே கிளாமர் பண்ணவேண்டிய நிலைமைக்கு வந்துட்டாங்க. அப்படி கிளாமர் பண்ற டாப் நடிகைகளை யாரும் தப்பா பேசுறது இல்லை. ரொம்பக் காலமா நடிகையா இருந்தும் டாப்ல வர முடியாதவங்களைத்தான் அப்படி தப்பா பேசுறாங்க. யாரா இருந்தாலும் அவங்க நடிக்கிற கதாபாத்திரங்களை வெச்சு கமென்ட் பண்ணாதீங்க. அந்த கமென்ட்டை இன்னைக்கு நான் படிப்பேன், நாளைக்கு என் கணவர், அடுத்து என் பொண்ணுனு எல்லாரும் படிப்பாங்க. அப்படி ஒரு கமென்ட், அந்த நடிகையோட குடும்பத்தையே பாதிக்கும்."

``கிளாமர் ரோல் பண்றாங்கன்னா, அவங்க ரியல் லைஃப்லையும் தப்பாதான் இருப்பாங்கன்னு நினைக்கிறாங்க. மும்தாஜ் மேம் எவ்வளவு கிளாமர் ரோல் பண்ணியிருக்காங்க. ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள்ள அவங்க கிளாமராவா டிரெஸ் போட்டாங்க. பிக் பாஸ் வீட்டுக்குள்ள தினமும் சாமி கும்பிட்டாங்க. கிளாமர் ரோல் பண்றவங்க லைஃப் எப்படி இருக்கும்னு அவங்க அந்த வீட்டுக்குள்ள இருந்து காட்டினாங்க. அதே சமயம், ஒரு நடிகை எந்த சூழ்நிலையில கிளாமர் பண்ண வந்திருப்பாங்கன்னு தெரியாது. நான் கிளாமர் ரோல் நடிக்க வந்ததுக்குக் காரணமே, எங்க குடும்பத்தோட கஷ்டம்தான். எங்க அப்பாவுக்கு உடம்பு முடியாம இருந்தப்போ, எங்க கையில காசு இல்லை. அந்த சமயம் எனக்கு ஒரு கிளாமர் ரோல் வந்துச்சு. அதுல நடிச்சா காசு வரும், எங்க அப்பாவோட மருத்துவ செலவுக்கு யூஸ் ஆகும்னு அதுல நடிக்க ஓகே சொன்னேன். இப்படி எல்லா கிளாமர் நடிகைக்கும் ஒரு கதை இருக்கும். அது எதுவுமே தெரியாம கமென்ட் பண்றவங்களை நினைச்சால்தான் கஷ்டமா இருக்கு’’ என்கிறார் நீபா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு