Published:Updated:

''வேணு அரவிந்த் ரொம்ப நல்ல மனுஷன்... போராடி மீண்டு வந்துட்டார்!' - 'வாணி ராணி' நிகிலா ராவ்

நிகிலா ராவ்
நிகிலா ராவ்

'' 'வேணுங்கிற சாப்பாடு, அதிக சம்பளம்லாம் கொடுப்பீங்க... ஆனா, இவங்களுக்கு தமிழ் பேசத் தெரியாது'ன்னு ஒரு மாதிரி கிண்டல் பண்ணி பேசினார். அப்போ ரொம்ப காயப்பட்டுட்டேன்...''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'வாணி ராணி' தொடர் மூலமாக தமிழ் சீரியல் உலகுக்குள் நுழைந்தவர் நிகிலா ராவ். அடுத்ததாக, 'சித்தி-2' தொடரில் 'நந்தினி' கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கர்ப்பமானதால் அந்தத் தொடரில் இருந்து வெளியேறினார். தற்போது 'வாணி ராணி' தொடர் மறு ஒளிபரப்பாகும் நிலையில் அவரிடம் பேசினேன்.

நிகிலா
நிகிலா

''தெலுங்கு சீரியல்ல நடிச்சிட்டு இருந்தப்போதான் 'வாணி ராணி' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு அந்த சமயம் சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. தமிழ்ல என்ன பேசுனாலும் எனக்கு அது புரியவும் புரியாது. புரொடக்‌ஷன் டீமில், 'டென்ஷன் ஆகாதம்மா... நாங்க டயலாக் சொல்லிக் கொடுப்போம் நீ நடிச்சா மட்டும் போதும்'னு சொன்னாங்க. சரி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னுதான் 'வாணி ராணி'ல நடிக்க சம்மதிச்சேன்.

முதல் நாள் ஷூட்டிங்ல எல்லோரும் ஃபேமிலியா நின்னு சாமி கும்பிடுற மாதிரி சீன் எடுத்தாங்க. அந்த சமயம் ஒவ்வொருத்தர் முகத்தையும் குளோஸ்ல ஷாட்ஸ் எடுத்தாங்க. எல்லோரும் வரிசையா நின்னுட்டு இருந்தோம். அப்போ திடீர்னு 'கும்பிடுங்க'ன்னு சொன்னாங்க. எல்லோரும் கும்பிட ஆரம்பிச்சாங்க. எனக்கு எதுவும் புரியாததனால நான் அப்படியே நின்னுட்டு இருந்தேன். அப்போவே செட்ல எல்லாருக்கும் இந்த பொண்ணுக்கு பேஸிக் தமிழ் கூடத் தெரியாதுங்கிறது தெரிஞ்சுடுச்சு. முதல் நாளே மறக்கமுடியாத அனுபவமா மாறிடுச்சு.

நிகிலா
நிகிலா

நான் எப்பவுமே சப்பாத்தி, டால் தான் சாப்பிடுவேன். அதனால புரொடக்‌ஷனில் அந்த சாப்பாடு தான் வேணும்னு நான் கேட்டதால எனக்கு தினமும் அதை கொடுப்பாங்க. ஒருநாள் சாப்பிட்டுட்டு இருக்கும்போது என் கூட நடிக்கிற நடிகர் ஒருத்தர் என்கிட்ட 'நீங்க என்ன சாப்டுறீங்க'னு கேட்டார். நான் இதுதான் சாப்பிடுவேன், புரொடக்‌ஷனில் வாங்கிக் கொடுத்தாங்கன்னு சொன்னேன். உடனே அவர், 'உங்களுக்கு எவ்வளவு சம்பளம்'னு கேட்டாரு. அதையெல்லாம் நீங்க புரொடக்‌ஷனில் கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்னால சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டேன். பிறகு அவருக்கும், எனக்கும் ஒரு பெரிய சீன் இருந்துச்சு. பர்ஃபார்ம் பண்றப்போ எனக்கு தமிழ் வராதுங்கிறதனால கொஞ்சம் சிரமப்பட்டேன்.

அப்போ அவர், 'வேணுங்கிற சாப்பாடு, அதிக சம்பளம்லாம் கொடுப்பீங்க... ஆனா, இவங்களுக்கு தமிழ் பேசத் தெரியாது'ன்னு ஒரு மாதிரி கிண்டல் பண்ணி பேசினார். அப்போ ரொம்ப காயப்பட்டுட்டேன்... ஏன் அழக்கூட செஞ்சேன். அப்பதான் தமிழ் கத்துக்கணும்னு முடிவெடுத்தேன். ரொம்ப சீரியஸா தமிழை நேசிச்சு கத்துக்கிட்டேன். இப்போ எனக்கு தமிழ் தெரியாதுன்னு யாராலும் சொல்ல முடியாது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'வாணி ராணி' முடிஞ்சதுக்கு பிறகு 'சித்தி-2' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. நெகட்டிவ் ரோலில் நடிச்சேன். அந்த கேரக்டர் எல்லோருக்கும் நல்லா தெரிய ஆரம்பிச்சது. அந்த சமயம் நான் கர்ப்பமானதால சீரியலில் இருந்து விலக வேண்டியதாகிடுச்சு. இப்போ என் கேரக்டரில் நடிக்கிற காயத்ரி ரொம்பவே நல்லா நடிக்கிறாங்க.

இப்போ என் பொண்ணுக்கு ஒரு வயசாகுது. அவங்க கூட நேரம் செலவழிச்சிட்டு இருக்கேன். அதோடு அமெயா ஸ்டுடியோ(Ameya studio)னு ஒரு டப்பிங் ஸ்டுடியோ ஆரம்பிச்சிருக்கோம். தெலுங்கு டு கன்னட மொழிகளில் பெரும் அளவில் டப்பிங் ஒர்க் பண்ணிட்டு இருக்கோம். என் கணவர் ரைட்டர், டைரக்டர் என்பதால் அவரும் எனக்கு சப்போர்ட் பண்றார். இப்போதைக்கு பிசினஸில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். தமிழில் நல்ல கதாபாத்திரம் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன்'' என்றவரிடம் வேணு அரவிந்த் உடல் நலம் குறித்து பரவி வரும் வதந்தி குறித்துக் கேட்டேன்.

வேணு அரவிந்த்
வேணு அரவிந்த்

''வேணு சார் ரொம்ப நல்ல மனுஷன். நான் பெங்களூர்ல இருந்து ஷூட்டிங்காக வர்றதனால சில நாள் எனக்கும் சேர்த்து அவர் வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பார். எல்லோர்கிட்டேயும் அவ்வளவு அன்பா இருப்பார். நேரடியா அவங்களுடைய ஃபேமிலிகிட்ட பேசி அவங்களை காயப்படுத்திடக் கூடாதுன்னு அவர் பற்றி செய்திகள் வரவும் என்னுடைய ஃப்ரெண்ட் அருணுக்கு ஃபோன் பண்ணி கேட்டேன். அருண்தான் 'அதெல்லாம் வதந்தி.. அவர் போராடி அதிலிருந்து மீண்டு வந்துட்டார்'னு சொன்னார். அதற்குப்பிறகுதான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு!' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு