Published:Updated:

"நீ நல்லாவே இருக்கமாட்டனு திட்டிட்டு, அப்புறமா ஆசீர்வாதம் பண்ணாங்க!" - 'குங்குமம்' பூஜா ஷேரிங்ஸ்

பூஜா
பூஜா

`குங்குமம்', `செல்வி', `கல்கி' போன்ற பல சீரியல்களில் நடித்தவர், பூஜா. சின்னத்திரை அனுபவங்கள், விரைவில் இயக்குநர் ஆகவிருக்கும் செய்தி, தயாரிப்பு நிறுவனம், நடிகை குஷ்புவுடனான நட்பு... எனப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``சீரியல் வாய்ப்புகளிலிருந்து விலகியிருப்பது எப்படியிருக்கு?"

``கொஞ்சம் வருத்தம்தான். மக்களை தினமும் அவர்களுடைய வீட்டில் சீரியல்கள் மூலமாகப் போய்ப் பார்த்த எனக்கு, பிரேக் எடுத்திருப்பது கஷ்டமாதான் இருக்கு. அதுக்குப் பதிலாதான் இப்போ டைரக்‌ஷன்ல இறங்கிட்டேன்."

பூஜா
பூஜா

திடீரென இயக்குநர் அவதாரம்?

இது திடீர் முடிவு அல்ல. நீண்ட நாள்கள் யோசனைக்குப் பிறகு எடுத்த தீர்க்கமான முடிவு. இப்போ பெங்களூரில் இருக்கிறேன். தாத்தா சுப்பையா நாயுடு சினிமாவில் இருந்தவர். என் அப்பா லோகேஷ், பிரபல கன்னட நடிகர். இப்போது அவர் உயிரோடு இல்லை. என் அம்மா கிரிஜா லோகேஷ் இப்போவரைக்கும் நடிச்சுக்கிட்டு இருக்காங்க. என் சகோதரர் சுதரும் நடிக்கிறார். நானும் இதுவரை 15 கன்னடப் படங்களில் நடிச்சிருக்கேன். எங்கள் குடும்பம் மொத்தமும் சினிமாவில் இருக்கிறோம். அதனால, எனக்கு சினிமா பற்றிய புரிந்துணர்வு அதிகம். அதனாலதான், இயக்குநர் அவதாரம்.

எனக்கு சினிமா பற்றிய புரிந்துணர்வு அதிகம். அதனாலதான், இயக்குநர் அவதாரம்
பூஜா
பூஜா
பூஜா

இயக்குநர் ஆவதற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன செய்திருக்கீங்க

`லோகேஷ்'ங்கிற ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் எங்களுக்கு இருக்கு. ஒரு படத்திற்கான வேலைகள் போயிட்டிருக்கு. கதையைத் தயார் பண்ணி வெச்சுட்டேன். இது முழுக்க முழுக்க காமெடி கதை. இந்தப் படத்திற்கான முழு வேலைகளும் முடிந்த பிறகு கண்டிப்பா சொல்றேன். அதேபோல எங்க ப்ரொடக்‌ஷன் முலமாக மற்றொரு படமும் தயாராகிக்கொண்டிருக்கிறது. அடுத்து `ஜி' கன்னட சேனலின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கான காஸ்ட்யூம்ஸ் தயார் செய்துகொண்டிருக்கிறேன்

''தமிழ் சீரியலில் அறிமுகமானது எப்படி?''

தெலுங்குப் படம் ஒன்றில் குஷ்புவுடன் நடித்தேன். அவர்தான் என்னை `குங்குமம்' சீரியலில் நடிக்க வைத்தார். `என் பெயரை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் பெயரை உருவாக்க வேண்டும்'' என அப்பா சொன்னதை ஃபாலோ பண்றேன். தமிழில் `மகாபாரதம்' தொடருக்காகத்தான் ஆடிஷன் போனேன். மற்றபடி, வேறு எதற்காகவும் இதுவரை ஆடிஷன் போனதில்லை. அந்தளவுக்கு `குங்குமம்' சீரியல் எனக்கான அடையாளத்தைக் கொடுத்திருக்கு. என்னை இப்போதுவரை ஆதரிக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி.

பூஜா
பூஜா

இத்தனை வருடங்களில், என்ன விஷயத்தை மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்?

எனக்கு எப்போதுமே கூட்டம் பிடிக்காது. சிரித்துப் பேசுவதே நெருங்கிய நண்பர்களிடம் மட்டும்தான். அதையெல்லாம் மாற்றியது சென்னைதான். இப்போது பலருடன் பேசுகிறேன். கூச்சம் குறைஞ்சிருக்கு. நடிப்புக்காக 11 வருடம் சென்னையில் இருந்தேன். கடந்த 4 வருடமா சென்னையில் இல்லை. விரைவில் சென்னையிலும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் ஐடியா இருக்கு

சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறதா?

இருக்கு. சினிமா, சீரியல் எதுவாக இருந்தாலும் சரி, சவாலான கேரக்டர்கள் அமையணும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன். என்னுடைய ரீ-என்ட்ரி மாஸா இருக்கணும்.

பூஜா
பூஜா

உங்களை நெகட்டிவ் ரோலில்தானே அதிகம் நடிக்க வைக்கிறார்கள்... ஏன்?

நெகட்டிவ் ரோல் பண்ணும்போது, எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. பாசிட்டிவான கேரக்டர் எனில், அதில் நிறைய விதிமுறைகள் இருக்கும். `குங்குமம்' சுகந்தி எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். நெகட்டிவ் ரோல் பண்ணும்போது மக்களிடம் நிறைய திட்டு வாங்குவேன். `குங்குமம்' சீரியலில் நடிக்கும்போது அப்படி ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. ஒரு கோயிலில் தரிசனம் பண்ணிக்கிட்டு இருந்தேன். பின்னாடி இருந்து `சடார்'னு ஒரு அடி. திரும்பிப் பார்த்தா ஒரு வயசான அம்மா கோபத்தோடு நின்னுக்கிட்டு இருந்தாங்க. `நீ நல்லாவே இருக்கமாட்டே'னு திட்டித் தீர்த்தார்கள். பிறகு, என்னை ஆசீர்வதிச்சுட்டு போனாங்க.

மறக்க முடியாத சின்னத்திரை நண்பர்கள்?

''எனக்கு 'குஷ்' (குஷ்பூ) ரொம்பப் பிடிக்கும். இப்போதுவரை நானும், அவரும் நல்ல நண்பர்களா இருக்கோம். குஷ் நான் சென்னையில் இருக்கும்போது நிறைய உதவிகள் பண்ணியிருக்காங்க. அதேபோல, ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்த தீபா வெங்கட், தேவதர்ஷினி, உமா ரியாஸ், ப்ரீத்தா, நீபா, கீதா, விவேக் கோகுல், அபிஷேக், பிரேம் சாய், சேத்தன், வேணு அரவிந்த்... எல்லோரும் இப்போதுவரை நல்ல நண்பர்களாக இருக்கோம்." என்கிறார், பூஜா.

அடுத்த கட்டுரைக்கு