Published:Updated:

ரச்சிதாவின் தெளிவான குழப்பமான விளக்கம் : நமக்கு அடி ஒண்ணும் புதுசில்லையே...போற வரைக்கும் போவோம்!

ரச்சிதா
ரச்சிதா

''போற வரைக்கும் போவோம்... தானா ஸ்டாப் ஆச்சுன்னா பார்த்துக்கலாம். அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க! இதை ஒரு பெரிய செய்தியாக்குறதனால எந்த பயனும் இல்ல.''

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் ரச்சிதா நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியதாக சில நாட்களுக்கு முன்னர் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ரச்சிதா
ரச்சிதா

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரச்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

''அதே தூண்... அதே மாடி... அதே கதவு... அதே வீடு! ஆஹா மறுபடியுமா?

எங்கேயும் போகலை... இன்னும் இங்கேயே தான் இருக்கேன். ஆனா, இல்லை!'' என கமல்ஹாசன் ஸ்டைலில் குழப்பி அடித்துவிட்டு அதற்கு கீழே விளக்க உரை எழுதியிருக்கிறார் ரச்சிதா.

ரச்சிதா
ரச்சிதா

''சில வதந்திகளுக்காக நான் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இருந்து விலகியதாக சொல்ல முடியாது. போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆச்சுன்னா பார்த்துக்கலாம். அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க! இதை ஒரு பெரிய செய்தியாக்குறதுனால எந்த பயனும் இல்ல. 'நாம் இருவர் நமக்கு இருவர்' விட்டு போறேன்... போறேன்னு சொல்லி சொல்லி என்னை நீங்களே போக வைச்சிடுவீங்க போலயே!

நமக்கு அடி ஒன்னும் புதுசில்லையே... பார்க்கலாம் என்ன தான் நடக்குதுன்னு! சப்போர்ட் பண்ண நீங்க எல்லாம் இருக்கீங்களே எது நடந்தாலும் பார்த்துக்கலாம்!'' என பதிவிட்டிருக்கிறார் ரச்சிதா.

இந்தப் பதிவின் மூலம் தான் காயப்பட்டிருப்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ரச்சிதா!

அடுத்த கட்டுரைக்கு