Published:Updated:

``பாபி சிம்ஹா என் தம்பி...!’’ - ரேஷ்மா

ரேஷ்மா
ரேஷ்மா

எல்லாக் குழந்தைகளும் அப்பாவை கூட்டிட்டு வந்திருந்தாங்க. என் மகன் என்னை அழைச்சுட்டுப் போயிருந்தான். அப்போ, `உன் அப்பா எங்க'னு டீச்சர் கேட்டபோது, `இவங்கதான் என் அப்பா, அம்மா'னு சொன்னான். இந்த அளவுக்கு யோசிச்சு வச்சிருக்கானு எனக்கே ஷாக்கிங்கா இருந்தது. '' என்கிறார் ரேஷ்மா.

`வம்சம்', `வாணி ராணி', `ஆண்டாள் அழகர்', `மரகத வீணை' போன்ற சீரியல்களில் ஆரம்பித்து, `கோ 2', `மசாலா படம்', `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' போன்ற படங்களிலும் நடித்த ரேஷ்மாதான் தமிழகத்தின் தற்போதைய சென்சேஷனல். அவருடைய கடந்த கால நிகழ்வுகளைப் பேச ஆரம்பிக்கும்போதே, அவரது குரலில் தடுமாற்றம் தெரிகிறது. அவரது வீட்டில் ஒரு காலை நேரத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

``என்னைப் பொறுத்தவரை என்ன விஷயம் நடந்தாலும், நடந்ததைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காமல், அதற்கான தீர்வு என்ன என்பதைத்தான் யோசிப்பேன். வாழ்க்கையை எப்போதும், முன்னோக்கியே யோசிக்கும்போது பழைய விஷயங்களை மறந்திடுவோம்'' என்றவர்...

ரேஷ்மா
ரேஷ்மா

``பொதுவாக கர்ப்பமாக இருப்பதே வலி நிறைந்த விஷயம். பெண்களுக்கு அது ரொம்ப ஈஸி கிடையாது. என் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தத் தருணம் நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். அப்போ ஐந்தாம் மாத கர்ப்பம். எனக்கும், என் கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டுச்சு. அந்த நேரத்தில் என் மீதான கோபத்தை எப்படி காண்பிக்கிறதுனு தெரியாம, என்னை தள்ளிவிட்டுட்டார். அந்தச் சம்பவத்துக்கு முன்பும் அடிப்பது மாதிரியான வன்முறைகளைக் கையாண்டிருக்கார். என்னுடைய வாயை மூட வைப்பதற்காக அப்படி தள்ளிவிட்டுட்டார். நான் நிலைத்தடுமாறி கீழே விழுந்தேன்.

அமெரிக்கரை திருமணம் செய்திருந்ததால், அமெரிக்காவில்தான் இருந்தேன். பெரும்பாலும், மேலை நாட்டவர்கள் இந்தியர்கள் மாதிரி இல்லாம, கொஞ்சம் விலகியே இருப்பாங்க. என்னை தள்ளிவிட்டப் பிறகு கோபத்தில் வெளியில் போயிட்டார். நான் கீழே விழுந்தப் பிறகுதான் தெரியுது, பனிக்குடம் உடைந்து, ரத்தம் போயிட்டே இருக்குனு. உதவிக்குக் கூட யாருமே இல்லை. நம்ம நாட்ல அக்கம், பக்கம்னு யாராவது வந்து எட்டிப் பார்ப்பாங்க. சொந்த பந்தங்கள் பக்கத்தில் இருப்பாங்க. ஆனா, அங்க யாருமே இல்லை. உதவிக்குக்கூட யாருமே வரல. அப்பா, அம்மா முதல் உறவுக்காரங்க வரை இந்தியாவில்தான் இருந்தாங்க. நான் அவ்வளவு வலியிலும் போன் பண்ணி சொன்னேன். ஆனால், உடனே வர முடியாதுல்ல. இந்தியாவுல அப்பா, அம்மா ஒரு பக்கம் கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. என்னால் முடிந்த அளவுக்கு கஷ்டப்பட்டு காரை ஓட்டிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டேன். காரை ஆஃப் பண்ணக் கூட முடியல. நான் அந்த நிலைமையில ஹாஸ்பிட்டலுக்குப் போனதும், நர்ஸ் எல்லாம் ஓடிவந்து உடனடியா அவசர சிகிச்சைக்கு அழைத்துப் போனாங்க. எனக்கு கார்டியாக்ட் அரஸ்ட் வந்துடுச்சு. எனக்கு குறைப்பிரசவக் குழந்தைதான் பிறக்கும்னு சொல்லிட்டாங்க. அந்த நேரத்தில் எனக்கு நினைவு தப்பியிருந்தது.

உடனடியாக, ஸ்டீராய்ட் கொடுத்து, குழந்தைக்கான இதயம் மற்றும் லங்கஸ் இரண்டையும் சரி பண்ணணும்னு சொன்னாங்க. என்னுடைய இரண்டாவது குழந்தையை நான் இழந்துட்டேன். அந்த வலி ஒருபக்கம் வாட்டியது. இரண்டாவது குழந்தையை இழந்த பிறகு இருந்த வெறுமை என்னை ரொம்பவே கஷ்டப்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய மூன்றாவது குழந்தை உருவானபோது சந்தோஷமா இருந்துச்சு. இந்த குழந்தைக்கும் இப்போ சிக்கல் வந்துடுச்சேனு நினைத்தபோது, ஏன் இந்த வாழ்க்கைனு யோசிச்சேன். இப்போதும் யோசிச்சுப் பார்க்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நம்பவே முடியல'' என்றவர், தற்போது அவருடைய குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பகிர்ந்தார்.

``எனக்கு இரண்டு பசங்க. இரண்டு பேருமே ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்காங்க. நான் எப்பவுமே அவங்கக்கிட்ட பாசிட்டிவ்வாகத்தான் பேசுவேன். `வாங்க, போங்க’னுதான் பேசுவேன். நம்ம பசங்களுக்கு நாம் மரியாதைக் கொடுத்தால்தான், அவங்க மத்தவங்களுக்கு மரியாதை கொடுப்பாங்க. அதை ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றேன்.

ரேஷ்மா
ரேஷ்மா

நான் செம்ம ஜாலியான ஆள். கூட இருக்கவங்களை ஜாலியா பேசி சிரிக்க வச்சுட்டே இருப்பேன். குழந்தைகள்கிட்டயும் அப்படித்தான். நம்ம சமுதாயத்தில் குழந்தைகளை சரியான விதத்தில் வளர்க்க வேண்டியது மிக முக்கியம். குழந்தைகள் மனதில் கோபம், மன அழுத்தம் போன்ற விஷயங்களை இப்போ பல பெற்றோர்கள் ஏற்படுத்தியிருக்காங்க. அது இருக்கக்கூடாதுனு நினைப்பேன். அதனால்தான், அவங்களை சுதந்தரமாக, சந்தோஷமாக வளர்க்கணும்னு நினைப்பேன்'' என்றவரிடம், `ஓர் ஆண், பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீங்க...?' எனக் கேட்டதற்கு...

``பொதுவாகவே, இந்திய ஆண்களின் மனநிலையைப் பொறுத்தவரை பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். அதேநேரம் தன் மனைவியாக வரக்கூடிய பெண்ணும், அவளுடைய பெற்றோருக்கு செல்லக் குழந்தையாகத்தானே இருந்திருப்பாள். அப்படியிருக்கும்போது, அவளை மட்டும் காயப்படுத்துவது சரியா என்பதுதான் என் கேள்வி. இந்த மனநிலை மாறணும். மனைவியாக வருபவளும் உங்கள் வீட்டில் ஒருத்திதான் என்பதை நினைவில் வச்சுக்கணும்'' என்றவர் தன்னுடைய கெரியர் விஷயங்களைப் பகிர்ந்தார்.

ரேஷ்மா
ரேஷ்மா

``தொகுப்பாளினி, சீரியல், சினிமா நடிகை என படிப்படியாகத்தான் முன்னுக்கு வந்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் என்னுடைய லுக் வேற மாதிரிதான் இருக்கும். எனக்கு, சரியான வாய்ப்புகள் வந்தபோது அதை தக்கவச்சிருக்கேன். ஹீரோயின், வில்லி, காமெடி என எல்லா ரோலும் பண்ணியிருக்கேன். காமெடிதான் எனக்கு நல்லா வரும் என்பதால், காமெடியைத் தேர்ந்தெடுக்க எப்போதுமே தயங்கியதில்லை. நாம் செய்யும் நல்ல விஷயங்களும் திரும்ப நம்மிடமே வந்துவிடும். அந்த கர்மா எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கும். தைரியமாக கடவுளை நம்பலாம். நல்லா சிரிப்பேன். சிரிக்க வைப்பேன்.

இன்னொன்னு சொல்லவா, `என்னை எதாவது பேசுவாங்களே’ என்பதற்காகவே இங்கிருக்கும் சொந்த பந்தங்களுடைய விசேஷங்களுக்கு பெருசா போனது இல்ல. பாபி சிம்ஹா எனக்கு தம்பி முறைதான். சின்ன வயசுல நாங்க 25, 30 பேர்னு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். இப்போதும், அப்படியே இருந்திருக்கலாமேனு யோசிப்பேன். அதெல்லாம் அழகான நினைவுகள்'' என்றவருக்கு அஜித் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறதாம்.

ரேஷ்மா
ரேஷ்மா

``ரொம்ப நாளுக்கு முன்னாடியே அஜித் - 60 படத்தில் நடிக்கிறதுக்கான பேச்சுவார்த்தைகள் போச்சு. அது இப்போதான் உறுதியாகிருக்கு. அஜித் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோ. அவரோட படத்தில் நடிக்கிறது செம ஹாப்பி. பொதுவாகவே நிறைய பட வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. என் மனதுக்கு நெருக்கமானதை மட்டும் செலெக்ட் பண்றேன்'' என்று முடித்தார் ரேஷ்மா.

அடுத்த கட்டுரைக்கு