Published:Updated:

``உமாவோட சிரிச்ச முகம் என் கண்ணுலேயே இருக்கு!'' - நடிகை சாந்தி வில்லியம்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`மெட்டி ஒலி' தொடரில்
`மெட்டி ஒலி' தொடரில் ( Photo: Hussain.M / Vikatan )

``அந்த சீரியல்ல அஞ்சரை வருஷம் ஒண்ணா சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கோம். ஒரு குடும்பமாவே வாழ்ந்தோம். அந்த நினைவுகளை மறக்க முடியலை." - சாந்தி வில்லியம்ஸ்

`மெட்டி ஒலி' சீரியலின் நாயகிகளில் ஒருவரான உமா மகேஸ்வரியின் மரணம், சின்னத்திரை உலகினரை மட்டுமல்ல; அந்த சீரியலைப் பார்த்த, மறு ஒளிபரப்பில் பார்த்து வருகிற அனைத்து ரசிகர்களையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. `மெட்டி ஒலி'யில் அவருடன் நடித்த சாந்தி வில்லியம்ஸிடம் பேசினோம்.

``மெட்டி ஒலியில் எனக்கு மருமகளா நடிச்ச காயு (காயத்ரி) நேத்து காலையில் போன் பண்ணி உமா தவறினதை சொன்னப்போ, என்னால நம்பவே முடியலைங்க. உமா இறந்துட்டாங்கிற செய்தியைக் கேட்டவுடனே, `இன்னும் எத்தனை துக்கங்களைத் தாங்குறது'ன்னு மனசு சோர்ந்து போயிடுச்சு. அப்படியே போய் படுத்துட்டேன். நேத்து பூரா அழுதுகிட்டேதான் இருந்தேன். தாங்க முடியாத மன அழுத்தத்துல என்னால எழுந்திருக்கவே முடியலை.

சாந்தி வில்லியம்ஸ்
சாந்தி வில்லியம்ஸ்
``என்னை ராட்சசியா மாத்திட்டாங்க!” மகன் தொடர்பான செய்திகள்... கொதிக்கும் சாந்தி வில்லியம்ஸ்

`மெட்டி ஒலி'யில் நடிக்கிறதுக்கு முன்னாடியிருந்தே உமாவை எனக்குத் தெரியும். ஒரு தடவை எனக்கு மனசு சரியில்லாம ரொம்ப சோர்வா இருந்தேன். உமாவும் அவ அக்கா வனஜாவும் `எங்க வீட்டுக்கு வாங்க'ன்னு கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஒருநாள் முழுக்க அவங்க வீட்லதான் இருந்தேன்.

உமாவைப் பத்தி சொல்லணும்னா, அவ தங்கமான பொண்ணுங்க. எப்பவுமே சிரிச்சுகிட்டே இருப்பா. அந்த மாதிரி முக அமைப்பு எங்கேயோ ஒருத்தருக்குத்தான் அமையும். அவ முகம் வாடியோ, சிடுசிடுப்பா இருந்தோ நாங்க யாருமே பார்த்ததில்லை. ரொம்ப பேச மாட்டா. அவ உண்டு, அவ வேலை உண்டுன்னு இருப்பா.

̀மெட்டி ஒலி' உமா
̀மெட்டி ஒலி' உமா
''சாகுற வயசாங்க இது!'' - 'மெட்டி ஒலி' உமா மரணம்!

மெட்டி ஒலியில் நானும் உமாவும் சேர்ந்து நடிக்கிற மாதிரி சில சீன்கள்தான் வரும். அதுவும் அவ வீட்டுக்குப் போய் திட்டுற மாதிரி சீன்கள்தான். சீன் முடிஞ்சதும் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சுப் பேசி, சாப்பிட்டுக்கிட்டு சந்தோஷமா இருப்போம். அந்த சீரியல்ல அஞ்சரை வருஷம் ஒண்ணா சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கோம். ஒரு குடும்பமாவே வாழ்ந்தோம். அந்த நினைவுகளை மறக்க முடியலை. அதுலேயும் உமாவோட சிரிச்ச முகம் இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு. அவளை மாதிரி இன்னொரு பொண்ணைப் பார்க்கிறது கஷ்டம்'' என்கிறார் சாந்தி வில்லியம்ஸ் கண்ணீருடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு