Published:Updated:

"`சேது' படத்தப்போ, என் படத்தில் இருக்கீங்கன்னு பாலா சார் சொன்னார்; ஆனா..." - ஷில்பா

ஷில்பா

கொரோனா தீவிரம் அதிகமானதால ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு தோணுச்சு. அதனாலதான் 'சித்தி 2' தொடரிலிருந்து விலகினேன்...

"`சேது' படத்தப்போ, என் படத்தில் இருக்கீங்கன்னு பாலா சார் சொன்னார்; ஆனா..." - ஷில்பா

கொரோனா தீவிரம் அதிகமானதால ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு தோணுச்சு. அதனாலதான் 'சித்தி 2' தொடரிலிருந்து விலகினேன்...

Published:Updated:
ஷில்பா

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியாத்துறையில் பயணித்துக்கொண்டிருக்கிறார் ஷில்பா. ஆரம்பத்தில் தொகுப்பாளராக அறிமுகமாகியிருந்தாலும் சின்னத்திரை நடிகையாக பலருடைய மனதிலும் நிறைந்தவர். தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் 'செம்பருத்தி' தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு விடுமுறை நாளில் அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். அத்தனை இளமையாய் அவருக்கே உரித்தான அதே சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்று பேட்டிக்குத் தயாரானார்.

ஷில்பா
ஷில்பா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"லைஃப் எப்படி போயிட்டு இருக்கு..?"

"கொரோனா தீவிரம் அதிகமானதால ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு தோணுச்சு. அதனாலதான் 'சித்தி 2' தொடரிலிருந்து விலகினேன். ரெண்டு வருஷம் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கிட்டேன். இந்த ரெண்டு வருஷம் பொறாமை, ஈகோல்லாம் நமக்குத் தேவையே இல்லை... லைஃப் இஸ் நத்திங் அப்படிங்கிறதை ரொம்பத் தெளிவா புரிய வச்சது."

"நீங்க மிஸ் பண்ணின திரைப்படம்..?"

"`சேது' படத்துக்காக பாலா சார் தாவணி கட்டிட்டு வந்து சந்திக்கச் சொன்னார். ஆடிஷன் முடிஞ்சு பத்து நாள் கழிச்சு நீங்க என் படத்தில் இருக்கீங்க... படம் முடிய ஒரு வருடம் வரைக்கும்கூட ஆகலாம். ஆனா, அது வரைக்கும் நீங்க சீரியலில் நடிக்கக் கூடாதுன்னு சொன்னார். அப்ப சீரியலில் நல்ல நல்ல வாய்ப்புகள் பல வந்ததால சீரியலை செலக்ட் பண்ணிட்டேன். அந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டேனே தவிர அதுக்காக ஃபீல் பண்ணினதில்லை. ஏன்னா, வெரைட்டியான கதாபாத்திரங்களில் சீரியலில் நடிச்சிட்டேன். நல்லது தொடர்ந்து நடந்ததால மிஸ்ஸிங் ஃபீல் இல்லை!

ஷில்பா
ஷில்பா

"நீங்க ஏன் இன்னும் திருமணம் பண்ணிக்கல?"

"முதன்முறையா என்னுடைய ரிலேஷன்ஷிப் குறித்துப் பேசுறேன்... பலரும் எனக்குத் திருமணம் ஆகலைன்னு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, எனக்குக் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் விவாகரத்தும் ஆகிடுச்சு. இப்ப சிங்கிளா சந்தோஷமா இருக்கேன்!"

"அதிகமா போலீஸ் கெட்டப்பில் நடிச்சிருக்கீங்களே..?"

" `சித்தி' சீரியலில் பிருந்தா என்கிற கேரக்டருக்காக முதன்முறையா போலீஸ் கெட்டப் போட்டேன். அது செம பாசிட்டிவ் கேரக்டர். அந்த கேரக்டருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. தொடர்ந்து பல சீரியல்களில் போலீஸ் கதாபாத்திரமே வந்துட்டிருந்துச்சு. பலரும் என்னை `சின்னத்திரை விஜயசாந்தி'ன்னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு அதிகமா காக்கி யூனிபார்ம்லதான் செட்ல இருந்திருப்பேன்.

ஷில்பா
ஷில்பா

"உங்களுடைய செலிபிரிட்டி க்ரஷ்..?"

"எனக்கு சல்மான் கான் ரொம்பப் பிடிக்கும். ஒரு முறை எங்க செட்டுக்குப் பக்கத்துலதான் அவருடைய படத்துக்கான ஷூட்டிங் நடந்துச்சு. அவர் என்னைப் பார்க்க, நான் அவரைப் பார்க்கன்னு ஒரே ஜாலிதான் போங்க.. எனக்காக ஒரு பேப்பரில் லெட்டர் மாதிரி பெருசா எழுதிக் கொடுத்து அவருடைய கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அதெல்லாம் வேற லெவல் ஃபீலிங்."

இன்னும் பல விஷயங்கள் குறித்து ஷில்பா நம்மிடையே பகிர்ந்துகொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism