Published:Updated:

‘‘பிளஸ் டூ, 58 கிலோ சாத்தூர் பொண்ணு!'' 'இரட்டை ரோஜா' ஷிவானி

'இரட்டை ரோஜா' ஷிவானி
'இரட்டை ரோஜா' ஷிவானி

''70 கிலோவிலிருந்து இப்போது 58 கிலோ பியூட்டி. எப்படித் தெரியுமா..?''

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். தற்போது, ஜீ தமிழில் 'இரட்டை ரோஜா' என்கிற சீரியலில் அபி, அனு என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியலில், மும்முரமாக நடித்து வருபவரிடம் ஒரு ஓய்வு நேரத்தில் பேசினேன்.

நீங்க வட இந்திய பெண் மாதிரி இருப்பதாகச் சொல்கிறார்களே..?

''அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லை. எனக்கு சாத்தூர்தான் சொந்த ஊர். எனக்கு ரொம்ப நாளாவே, சென்னை வரணும்னு ஆசை. ஒரு முறை பள்ளி விடுமுறையில் தாத்தா, பாட்டியோடு சென்னைக்கு வந்தோம். இங்க வந்த பிறகு, சென்னை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதனால, நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது, சாத்தூரிலிருந்து ஷிஃப்ட்டாகி சென்னைக்கு வந்துட்டோம்.''

உங்களுக்கு நடிப்பு மீதான ஆர்வம் எப்படி, எப்போது வந்தது?

ஷிவானி
ஷிவானி

''பள்ளியில் படிக்கும்போதே நிறைய கல்ச்சுரல்ஸில் கலந்திருக்கேன். அப்படி சின்ன வயதில் இருந்தே எனக்கு நடிப்பு மீதான ஆர்வம் அதிகமாகத்தான் இருந்தது. அதைத்தான், டிக் டாக், டப்ஸ்மாஷ் என எல்லாத் தளங்களிலும் பதிவிட்டேன். டிக் டாக், டப்ஸ்மாஷ் அறிமுகமான நேரத்தில் என்னுடைய படங்கள் வீடியோக்கள் எல்லாம் வைரல் ஆச்சு. அதைப் பார்த்துட்டுத்தான் என்னை 'பகல் நிலவு' சீரியலின் ஆடிஷனுக்காகக் கூப்பிட்டாங்க. அப்படித்தான் நடிக்க வந்தேன்.''

நீங்க ரொம்ப அமைதியாவே எப்போதும் பேசுறீங்களே ஏன்..?

''நான் சீக்கிரம் யார்கூடயும் மிங்கிள் ஆக மாட்டேன். நான் கலகலனு பேச டைம் எடுக்கும். ஷூட்டிங் ஸ்பாட்லயும் இப்படித்தான் இருப்பேன். ஷூட்டிங் போனா ஜாலியா இருக்க மாட்டேன். வேலை என்னவோ அதை மட்டும் முடிச்சுட்டு வந்துடுவேன். கூடவே, அந்த நேரத்தில் ப்ளஸ் டூ படிச்சிட்டு இருந்தேன். ஷூட்டிங் டைம்ல பிரேக் விடும்போது படிப்பேன். டேக் சொன்னவுடனே நடிப்பேன். அப்படித்தான் படிப்பும், நடிப்புமா அந்த சீரியல் முடிந்தது.''

உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததா..?

ஷிவானி
ஷிவானி

''சினிமா மட்டுமல்ல, சீரியல் வாய்ப்புகளும் நிறைய வந்தன. அந்த வகையில் 'இரட்டை ரோஜா' எனக்குப் பெஸ்ட் ஸ்கிரிப்ட்டா தோணுச்சு. இந்த சீரியல் ரீமேக் என்பதால் நானே பார்த்து, அந்தக் கதையை உள்வாங்கிகிட்டேன். சினிமாவைப் பொறுத்தவரை நயன்தாரா, ஜோதிகா, அமலாபால் மாதிரி பெண்கள் சார்ந்த கதைகளில் நடிப்பது பிடிக்கும். இவ்வளவு சின்ன வயதில் அந்த மாதிரி கதாபாத்திரம் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும், எதிர்காலத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் தீவிரம் காட்டுவேன்.’’

டயட்ல இருக்கீங்களா... ஒல்லி ஆகிட்டீங்களே..?

''ஆமாம். நடிக்க வந்தபோது எனக்கு 16 வயது. ஆரம்பத்தில் 70 கிலோ எடையோடு பப்ளியாக இருந்தேன். அடுத்தடுத்து வேலைகளில் இறங்க ஆரம்பித்த பிறகு தானாக எடைக் குறைந்து, இப்போது 58 கிலோவில் இருக்கிறேன். கடந்த மூன்று மாதமாகச் சாப்பாடு, எண்ணெய் பண்டங்கள் எடுத்துக் கொள்ளாமல் உடற்பயிற்சி செய்து, உடல் எடையை சில கிலோக்கள் குறைத்திருக்கிறேன்.''

எந்த ஹீரோவோடு நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க..?

ஷிவானி
ஷிவானி

`` தல - தளபதி’க்கு அப்புறம் எனக்கு சூர்யா சாரை ரொம்பப் பிடிக்கும். இவங்ககூட நடிக்க முடியாமல் போனாலும் அதர்வாகூட கண்டிப்பா நடிக்கணும். அவர்தான் என்னுடைய சமீபத்திய க்ரஷ்’’ எனக் கண்ணடிக்கிறார் ஷிவானி.

அடுத்த கட்டுரைக்கு