Published:Updated:

சின்ன வயசு த்ரிஷா; ரஜினியுடன் நடிப்பு; அனிருத் இசையில் பாடும் ஆசை! - சுசித்ரா ஷேரிங்ஸ்

சுசித்ரா

கிட்டத்தட்ட 35 நாட்கள் ரஜினி சாருடன் சேர்ந்து நடிச்சேன். அவரை மீட் பண்ண வாய்ப்பு கேட்ட என்னை அவருடன் படத்துலேயே நடிக்க வச்சிட்டார், ரவிக்குமார் சார்.

சின்ன வயசு த்ரிஷா; ரஜினியுடன் நடிப்பு; அனிருத் இசையில் பாடும் ஆசை! - சுசித்ரா ஷேரிங்ஸ்

கிட்டத்தட்ட 35 நாட்கள் ரஜினி சாருடன் சேர்ந்து நடிச்சேன். அவரை மீட் பண்ண வாய்ப்பு கேட்ட என்னை அவருடன் படத்துலேயே நடிக்க வச்சிட்டார், ரவிக்குமார் சார்.

Published:Updated:
சுசித்ரா

'ஆதி' படத்தில் சின்ன வயது திரிஷாவாக நடித்திருந்தவர் சுசித்ரா. சினிமா, சீரியல் என நடித்துக் கொண்டிருந்தவர் படிப்பதற்காக பிரேக் எடுத்திருந்தார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்தது. கணவருடன் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்..

சுசித்ரா
சுசித்ரா

சின்ன வயசுல இருந்தே டான்ஸ் கத்துட்டு இருந்தேன். துறுதுறுன்னு இருப்பேன். ஆதி படத்துக்கு ஆடிஷன் நடக்குதுன்னு தெரிஞ்சு என் அப்பா என்னை அங்கே கூட்டிட்டுப்போனார். ஆனா, நாங்க போகிறதுக்கு முன்னாடியே அங்க திரிஷாவுடைய சின்ன வயசு ரோல் செலக்ட் பண்ணிட்டாங்க. அங்க நான் டான்ஸ் ஆடிட்டும், சேட்டை பண்ணிட்டும் இருக்கிறதைப் பார்த்துட்டு அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருத்தர் எங்களை எஸ் ஏ சந்திரசேகர் சாரை மீட் பண்ணச் சொன்னாங்க. அவர்கிட்ட டான்ஸ் ஆடிக் காட்டினேன். கலகலன்னு பேச ஆரம்பிச்சிட்டேன். அவர் என்னையே சின்ன வயசு திரிஷாவாக நடிக்கச் சொல்லிட்டார். அப்படித்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தப் படம் நடிச்சு முடிஞ்சதும் `சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடிச்சேன். சின்ன கேரக்டர்னாலும் நல்ல அனுபவம் கிடைச்சது. அந்தப் படத்துக்குப் பிறகு 'மை டியர் பூதம்' தொடரில் நல்ல கதாபாத்திரம் அமைஞ்சது. தொடர்ந்து `கனா காணும் காலங்கள்', `மகான்', `அத்திப்பூக்கள்' போன்ற சீரியல்களில் நடிச்சேன்.

சுசித்ரா
சுசித்ரா

அப்புறம் கே எஸ் ரவிக்குமார் சாருடைய `ஆதவன்' படத்துக்கான ஆடிஷன் நடந்துச்சு. அந்த ஆடிஷனில் கே எஸ் ரவிக்குமார் சார்கிட்ட பரதநாட்டியம் ஆடிக் காட்டினேன். சார்னு கூப்பிட ஆரம்பிச்சு பிறகு அங்கிள்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டேன். அந்த அளவுக்கு பயங்கர க்ளோஸ் ஆகிட்டோம். அவர் என்னுடைய ஸ்மைல் நல்லா இருக்குன்னு சொன்னார். எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் மாதிரி ஆகிட்டார். 'ஆதவன்' படத்திலும் சின்ன கதாபாத்திரம் என்றாலும் அத்தனை பெரிய, பெரிய ஆர்ட்டிஸ்ட்களுடன் நடிச்சது நல்ல அனுபவமா இருந்துச்சு. அந்த சமயம் என் ஸ்கூலிலும் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுங்கிறதனால படிப்பில் கவனம் செலுத்தணும்னு ஒரு வருஷம் பிரேக் எடுத்துக்கிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பத்தாம் வகுப்பில் 87% மார்க் ஸ்கோர் பண்ணினேன். அப்ப மீடியா நம்மளுடைய கெரியர் அப்படிங்கிற முடிவை என்னால எடுக்க முடியல. பிறகு பிளஸ் ஒன் படிக்கும் போது சரவணன் மீனாட்சி முதல் சீசன் வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல் எனக்குன்னு ஒரு அடையாளத்தை கொடுத்துச்சு. பிளஸ் டூ எக்ஸாம் வந்ததால மறுபடி பிரேக் தேவைப்பட்டுச்சு. அதனால, வேற வழியில்லாம சீரியலில் இருந்து விலக வேண்டியதாகிடுச்சு.

சுசித்ரா
சுசித்ரா

விஜய் டிவியில் 'தாயுமானவன்' அப்படிங்கிற தொடரின் மூலமா மறுபடியும் நடிக்க வந்தேன். ஆனா, நான் படிச்ச காலேஜ்ல லீவ் எடுக்கிறதுல பிரச்னை இருந்ததால அந்த சீரியலையும் என்னால தொடர்ந்து பண்ண முடியல. ரவிக்குமார் சார் 'லிங்கா' படம் ஆரம்பிக்கப் போகிறார் என்கிற செய்தியை பேப்பரில் பார்த்துட்டு அவருக்கு விஷ் பண்ணிட்டு எனக்கு ரஜினி சாரை மீட் பண்ணனும்னு ஆசையா இருக்குன்னும் சொல்லி மெசேஜ் அனுப்பியிருந்தேன்.

மறுநாள் சாருடைய ஆபிஸ்ல இருந்து போன் பண்ணி வரச் சொல்லியிருந்தாங்க. சோனாக்‌ஷியுடைய ஃப்ரெண்ட் ரோல் ஒன்னு இருக்கும்மா பண்றீயான்னு சார் கேட்டாங்க. எனக்கு பயங்கர ஹாப்பியாகிடுச்சு. நல்ல வாய்ப்பு அமைஞ்சா உன்னை கதாநாயகியா நடிக்க வைப்பேன்னுலாம் சார் சொல்லியிருந்தார். கிட்டத்தட்ட 35 நாட்கள் ரஜினி சாருடன் சேர்ந்து நடிச்சேன். அவரை மீட் பண்ண வாய்ப்பு கேட்ட என்னை அவருடன் படத்துலேயே நடிக்க வச்சிட்டார், ரவிக்குமார் சார். அவருக்கு எப்பவும் நன்றியை சொல்லியே ஆகணும்.

சுசித்ரா
சுசித்ரா

பிறகு 'காக்கிச்சட்டை' படத்தில் சிவகார்த்திகேயன் சாருடன் சேர்ந்து நடிச்சேன். அவர் `லிங்கா' படத்தில் நான் நடிச்சேன்னு கேள்விபட்டு, `உங்க கூட நான் சேர்ந்து நடிக்கிறது எனக்கு பெருமையா இருக்கு'ன்னு சொன்னார். அவ்வளவு பெரிய நடிகர் என்னை பார்த்து அப்படி சொல்றதெல்லாம் பெரிய விஷயம்.

எம்எஸ்சி சைக்காலஜி படிச்சிட்டு இருந்தப்ப வள்ளி சீரியலிலும், சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனிலும் நடிச்சேன். திரும்பவும் நடிப்பைத் தொடர முடியல. எனக்கு ஸ்கூல் பசங்களுக்கு கவுன்சிலிங் பண்றதுக்கான வேலை கிடைச்சது. அப்பவும் மீடியாவை என்னால முழுசா நம்ப முடியல. அதுதான் என் கெரியர் என்கிற முடிவையும் எடுக்க முடியல. அதுதவிர, கவுன்சிலிங் கொடுக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

சுசித்ரா
சுசித்ரா

பலருக்கும் நாம தீர்வு, அட்வைஸ்லாம் சொல்லணும்னு அவசியமில்ல. அவங்க சொல்றதைக் காதுகொடுத்து கேட்டாலே போதும். மனசளவில் மத்தவங்களுக்கு உதவியா இருக்கிற இந்தத் துறை எனக்கு பிடிச்சிருந்தது. எனக்கு திருமணமாகி எட்டு மாசம் ஆகுது. அரேஞ்சிடு மேரேஜ் என்பதால் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள டைம் கொடுக்க வேண்டியிருந்தது.

இப்பவும் சீரியல் வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. இப்போதைக்கு ஃபேமிலி, கவுன்சிலிங்கில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். நல்ல கதைக்களம். அதற்கேற்ற சூழல் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன். எனக்கு நடிக்க முடியலைன்னாலும் மீடியாவில் சிங்கராகவாச்சும் பயணிக்கணும்னு ஆசை. கர்னாடிக் சங்கீதம் கத்துருக்கேன். ஏஆர் ரஹ்மான் சார் முன்னாடி ஒரே ஒரு பாட்டு பாடணும். அதுதான் என் கனவு. இப்ப அதை நோக்கி தான் ஓடிட்டிருக்கேன். எனக்கு அனிருத் ரொம்ப பிடிக்கும். அவருடைய இசையில் ஒரு படத்தில் இல்லைன்னா ஆல்பம் சாங்கிலாச்சும் பாடணும்.. மியூசிக்ல ஏதாவது சாதிக்கணும்!' என்கிறார் சுசித்ரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism