Published:Updated:

"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது ஓகேதான்! ஆனா..."- சீரியல் சர்ச்சை குறித்து நடிகை உஷா எலிசபெத்

உஷா எலிசபெத்

"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது ஓகேதான்! ஆனா, இங்கேயே பிறந்து வளர்ந்து சாதிக்கணும் என்கிற ஆசையோடு நடிப்புத்துறைக்குள் வர்றவங்களை ஒதுக்கி வைக்கிறது எந்த வகையில் நியாயம்?" - உஷா எலிசபெத்

"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது ஓகேதான்! ஆனா..."- சீரியல் சர்ச்சை குறித்து நடிகை உஷா எலிசபெத்

"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது ஓகேதான்! ஆனா, இங்கேயே பிறந்து வளர்ந்து சாதிக்கணும் என்கிற ஆசையோடு நடிப்புத்துறைக்குள் வர்றவங்களை ஒதுக்கி வைக்கிறது எந்த வகையில் நியாயம்?" - உஷா எலிசபெத்

Published:Updated:
உஷா எலிசபெத்
`தேன்மொழி BA' தொடரில் தனது எதார்த்தமான நடிப்பினால் அனைவரிடமும் பாராட்டு பெற்றவர் உஷா எலிசபெத். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்துகொண்டிருப்பவரை பேட்டிக்காக அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
உஷா எலிசபெத்
உஷா எலிசபெத்

”எதிர்பாராமல் எனக்கு அமைஞ்ச துறைதான் நடிப்பு. அதுக்கு முன்னாடி ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்திருக்கேன். டீச்சரா இருந்திருக்கேன், பேபி சிட்டரா இருந்திருக்கேன். தவிர, அப்பளம் வடகம் செய்து வித்திருக்கேன், குடும்பத்தலைவியாகவும் இருந்திருக்கேன். சென்னைக்கு நாங்க வந்தப்ப எனக்குன்னு ஒரு வேலை தேவைப்பட்டது. எதிர்பாராமல் அமைஞ்ச நடிப்புத் துறையை நான் தேர்ந்தெடுத்தேன். அதுக்காகக் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா என் அப்பா என்கிட்ட பேசவே இல்ல. என் மாமியார் எனக்கு பயங்கர சப்போர்ட். 'கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிக்கும்போது என் அப்பா டிவி-யில் நான் நடிக்கிறதைப் பார்ப்பார்னு சொல்லுவாங்க.

தொடர்ந்து புதுக்கவிதை சீரியலில் நடிச்சேன். 'பிரியமானவள்' தொடர் எனக்கெனத் தனி இடம் கொடுத்துச்சு. ஆனா, கேரக்டர் போகப் போகக் குறைய ஆரம்பிச்சிடுச்சு. ரொம்ப ஸ்ட்ராங்கா மாசத்தில் 17 நாள்கள் வரைக்கும் நடந்த ஷூட் கொஞ்சம் கொஞ்சமா தேதி குறைய ஆரம்பிச்சதும் பொருளாதார ரீதியாக என்னால சமாளிக்க முடியல. அதனால அந்தத் தொடரில் இருந்து விலகிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2017லிருந்து 2019வரைக்கும் வீட்டில் சும்மாவே இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் பயங்கரமா ஸ்ட்ரெஸ் ஆனேன். அந்த ரெண்டு வருஷத்துல அதிகபட்சம் 40 நாள்கள்தான் வேலை பார்த்திருப்பேன். தேன்மொழி பிஏ ஒரு ரீ-என்ட்ரியாக அமைஞ்சது. அந்தத் தொடர் என்னை அடுத்த லெவலுக்குக் கூட்டிட்டுப் போச்சு” என்றவரிடம், அவர் சின்னத்திரை குறித்துப் பதிவிட்ட பதிவொன்றைப் பற்றிக் கேட்டோம்.

உஷா எலிசபெத்
உஷா எலிசபெத்

”பலர் கேரக்டர் கிடைக்காம ரொம்பவே கஷ்டப்படுறாங்க. நான் யாரையும் குறை சொல்லல. சின்னத்திரை, வெள்ளித்திரைன்னு ரெண்டிலும் மெம்பராக இருக்கிற ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கே இங்க நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வர்றதில்லை. நானே 'சித்தி 2' சீரியலில் நடிச்சேன்... இப்ப அந்தத் தொடரையும் எதுவுமே சொல்லாம முடிச்சிட்டாங்க. அதே மாதிரி, 'வைதேகி காத்திருந்தாள்'ன்னு ஒரு தொடரில் நடிச்சேன். அந்தத் தொடரையும் திடீர்னு நிறுத்திட்டாங்க. ஒவ்வொரு புராஜெக்ட் கமிட் ஆகும்போதும் என் லுக் மாத்தணும்னு காஸ்டியூம் எல்லாம் ரெடி பண்ணி வச்சுருவேன். சட்டென நிறுத்தவும் அதற்கான செலவு மொத்தமும் போச்சு. என்கிட்ட பலர் போன் பண்ணி அவங்க கஷ்டத்தைச் சொல்லி வருத்தப்படுவாங்க. நானும் யோசிச்சுப் பார்த்தப்ப அதே நிலைமையில்தான் இருக்கிறேன். என் மன அழுத்தத்தைக் குறைக்கிறதுக்காக மட்டும்தான் என் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன்.

'வைதேகி காத்திருந்தாள்' சீரியல் தரப்பில் எனக்கு சம்பள பாக்கி கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் தர வேண்டியிருக்கு. எனக்கே அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல. அதிகபட்ச மன அழுத்தத்துக்குள் உள்ளாகும்போது ரெண்டு விஷயம் பண்ணுவேன்... ஒன்று, நல்லா சாப்பிடுவேன். இரண்டாவது, என் மனசுல தோணுற விஷயங்களைப் பதிவு பண்ணுவேன். அந்தப் பதிவுக்கு என் ரசிகர்கள் சொல்ற பதிலை ஆறுதலா எடுத்துப்பேன். வெள்ளித்திரை, சின்னத்திரை எங்களுக்குக் கை கொடுத்தா நல்லா இருக்கும்.

உஷா எலிசபெத்
உஷா எலிசபெத்

எனக்கு நடிகை சபர்ணா நல்ல பழக்கம். அவங்க கூட 'சொந்தபந்தம்' , 'புதுக்கவிதை' என்கிற இந்த ரெண்டு சீரியலில் நடிச்சிருக்கேன். அவளுடைய பர்சனல் விஷயங்களை விட்டுடுங்க. ஆனா, அவங்க கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலை இல்லாம இருந்தாங்க. 'புதுக்கவிதை' முடிஞ்சதும் மலையாள சீரியலில் நடிக்கப் போறேன்... விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போறேன்னெலாம் சொல்லியிருந்தாங்க. அந்தத் தொடர் 8 மாசத்துலேயே முடிஞ்சிருச்சு. சாப்பிடக்கூட வசதி இல்லாத நிலையில்தான் இருந்திருக்காங்க. அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

முன்னாடியெல்லாம் ஆர்ட்டிஸ்ட் யாருன்னு மேனேஜரும், டைரக்டரும் தீர்மானிப்பாங்க. இப்ப அப்படியெல்லாம் கிடையாது. ஒரு காலகட்டத்தில் டப்பிங் சீரியல் அதிகமாச்சு. அந்த சமயம் டப்பிங் சீரியல் வேண்டாம்னு நாங்க எல்லாரும் போராட்டம் பண்ணினோம். இப்ப டப்பிங் சீரியல் குறைஞ்சிருக்கு. வெளியில உள்ள ஆர்ட்டிஸ்ட்களை நாங்க கூட்டிட்டு வர வேண்டாம்னு சொல்லல. ஆனா, இங்கேயே இருக்கிற தமிழ் பேசும் நடிகர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டேன்றாங்க என்பதுதான் இங்க மிகப்பெரிய பிரச்னை.

உஷா எலிசபெத்
உஷா எலிசபெத்

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது ஓகேதான்! ஆனா, இங்கேயே பிறந்து வளர்ந்து சாதிக்கணும் என்கிற ஆசையோடு நடிப்புத்துறைக்குள் வர்றவங்களை ஒதுக்கி வைக்கிறது எந்த வகையில் நியாயம்? இத்தனை சீரியல்கள் பண்ணியிருக்கேன், பெரிய பெரிய நடிகர்களுக்கு அம்மாவாக நடிச்சிருக்கேன் எனக்கே இன்னும் எந்த வாய்ப்பும் வரல!” என்றவர் சினிமா, சீரியல் தொடர்பான பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism