Published:Updated:

"வில்லியா நடிக்கிறேன்... ஆனா, அது வயித்துக்குள்ள வளர்ற குழந்தையை பாதிச்சிட்டா?!" - வனிதா ஹரிஹரன்

"நெகட்டிவ் ரோலில் நடிக்கும்போது நிறைய பேர் என்னை திட்டுவாங்க. மெசேஜை ஓப்பன் பண்ணி பார்க்கவே முடியாது. இப்போ அப்படியே மாறிடுச்சு. நிறைய லவ் கொடுக்கிறாங்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு!" - வனிதா ஹரிஹரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சன் டிவியின் 'மகராசி' சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்த வனிதா ஹரிஹரன் பர்சனல் காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகியிருக்கிறார். விலகல் குறித்து அவரிடம் பேசினேன்.
வனிதா ஹரிஹரன்
வனிதா ஹரிஹரன்

"எனக்கு திருமணமாகி நாலு வருஷம் ஆகிடுச்சு. என்னோட கரியருக்காக இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு பிளான் பண்ணியிருந்தோம். எங்க ரெண்டு பேர் வீட்லயும் எங்க முடிவுக்கு எந்தத் தடையும் சொல்லலை. இப்ப குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்ததும் சீரியலில் இருந்து விலகிட்டேன். ஏன்னா, நான் வில்லி கேரக்டரில் நடிச்சிட்டு இருந்தேன். அது நடிப்புன்னாலும், என்னுடைய எமோஷன் குழந்தையை பாதிச்சிடக் கூடாதுன்னு தோணுச்சு.

''குண்டா இருந்த நான் ஒல்லியானதும் ஏதோ நோய்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க'' - நடிகை மஞ்சரி

என்னோட கணவர் பெல்ஜியம்ல வேலை பார்க்கிறார். நானும் பெல்ஜியம் போயிட்டேன். கர்ப்பமானதும் அங்கேயே ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். அங்குள்ள டாக்டர்ஸ் இதுதான் சாப்பிடணும், இது சாப்பிடக் கூடாதுன்னு எதுவுமே சொல்லலை. அவங்க சொன்ன ஒரே ஒரு விஷயம் தினமும் நடக்கணுங்கிறது மட்டும்தான். ஆரம்பத்திலேயே என்னை கொரோனா தடுப்பூசி போட்டுக்க சொன்னாங்க. நான்காவது மாதத்தில் தடுப்பூசி போட்டுக்கிட்டேன்.

வனிதா ஹரிஹரன்
வனிதா ஹரிஹரன்

நான் வெஜிட்டேரியன். எனக்கு என் கணவர் சமைக்கிற சாப்பாடு ரொம்ப பிடிக்கும். ஆனா, கர்ப்பமானதும் என்னாலயும் சமைச்சு சாப்பிட முடியலை.. என் கணவர் சமைக்கிறதும் எனக்கு பிடிக்கலை... சாப்பிட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். பெல்ஜியம்ல ஒரே ஒரு சைவ உணவகம்தான் இருக்கு. அங்கேதான் வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தேன். ரொம்ப உடல் எடை குறைஞ்சிடுச்சு. அதனாலேயே இந்தியாவுக்கு வந்துட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போ நான் ஆறு மாச கர்ப்பம். வீட்ல தினமும் இஷ்டப்பட்டதை சாப்பிடுறேன். கொரோனா பயத்தினால வீட்டை விட்டு எங்கயும் வெளியில் போறதில்லை. ரெண்டு பெட் டாக்ஸ் வளர்க்கிறேன். அவங்களை பார்த்துக்கிட்டு அவங்ககூட விளையாடிட்டு இருக்கேன். என்னுடைய 'மகராசி' டீமை ரொம்பவே மிஸ் பண்றேன். இப்போ செட்டுக்கு போய் அவங்களை பார்க்க முடியலை. அந்த வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், அவங்க கூட அடிக்கடி போன்ல பேசிக்கிறதே இப்போதைக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. நெகட்டிவ் ரோலில் நடிக்கும்போது நிறைய பேர் என்னை திட்டுவாங்க. மெசேஜை ஓப்பன் பண்ணி பார்க்கவே முடியாது. இப்போ அப்படியே மாறிடுச்சு. நிறைய லவ் கொடுக்கிறாங்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு" என்றவர் நடிகை நிஷா கணேஷுடனான நட்பைக் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

வனிதா ஹரிஹரன்
வனிதா ஹரிஹரன்

"நானும், நிஷாவும் ரொம்ப குளோஸ். கர்ப்பமான தகவலை நிஷாகிட்ட ஷேர் பண்ணினதும் அவ என்னை ரொம்ப நல்லா கைட் பண்ணினா. வாரத்துக்கு இரண்டு, மூணு தடவை எனக்கு போன் பண்ணி பேசிடுவா. நிறைய விஷயங்களில் எனக்கு அட்வைஸ் கொடுப்பா. இப்போ வரைக்கும் அவ சொல்றதைத்தான் ஃபாலோ பண்றேன். டாக்டர்கிட்ட போயிட்டு வந்ததில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் என்னைவிட அதிக அக்கறை எடுத்துக்கிட்டு பாப்பா பற்றி விசாரிப்பா. எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா நானும் கொஞ்சம் கூட யோசிக்காம அவகிட்ட அட்வைஸ் கேட்டுப்பேன். என்னுடைய கணவர் தினமும் ஐந்து பழங்கள் சாப்பிடணும்னு ரூல் போட்டுருக்கார்" எனச் சிரிக்கிறார் வனிதா.

வாழ்த்துகள் வனிதா ஹரிஹரன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு