`` `பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கை நிறைய மாறியிருக்கு. என்கூட யாரும் இப்ப சண்டைக்கு வர மாட்றாங்க. இதுக்கு முன்னாடி ரோட்ல இறங்கிக்கூட சண்டை போட்டிருக்கேன். ஆனா, இனிமேல் அப்படி நடக்காது. `பிக் பாஸ்'ல இருந்து வெளில வந்தப்பகூட சிரிச்சிட்டேதான் பேட்டி கொடுத்தேன். என்னைக்கும் நான் நெகடிவ் கமென்ட் பத்தி கவலைப்பட மாட்டேன்.
இப்போ, `குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பாசிட்டிவிட்டியைக் கொடுத்திருக்கு. மெனக்கெட்டு சமைச்சிருக்கேன். இதை இமாலய வெற்றினுகூட சொல்வேன். நடுவர்களுக்கும் நான் ஜெயிச்சதுல சந்தோஷம். `இது காமெடி ஷோவா இல்ல போட்டியா எடுத்துக்கலாமா'ங்கிற குழப்பத்துலே இந்த ஷோல கலந்துக்கிறதுக்கு யோசிச்சேன். காமெடி பீஸா ஆகிருவோம்னு பயம் வேற இருந்தது. ஆறு மணி நேரம் வரைக்கும் ஷோவோட ஷூட்டிங் போகும். அதை 45 நிமிஷத்துக்கு ரொம்ப அழகா எடிட் பண்ணிக் கொடுத்திருவாங்க. பெஸ்ட் எடிட்டிங் ஷோ இதுதான். வீட்டுல இந்த ஷோவைப் பார்க்கிறப்ப எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது."
``வனிதா ஜாலியான நபரா?"
``நான் ரொம்பவே ஜாலி டைப்தான். என்னோட நண்பர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்னைப் பத்தி நல்லாவே தெரியும். வீட்லகூட பசங்ககிட்ட ஸ்ட்ரிக்ட்டா எல்லாம் இருந்தது இல்ல. ஃப்ரெண்ட்ஷிப்பாதான் பழகுவேன். சொல்லப்போனா அவங்கதான் எனக்கு அட்வைஸ் கொடுப்பாங்க, சமயத்துல திட்டக்கூட செய்வாங்க. `நீ என்ன சொல்றது'ங்கிற ஈகோவே எனக்குக் கிடையாது. என்கூட பிறந்தவங்க யார்கூடவும் நான் பேசுறது இல்ல. சின்ன வயசுலே கல்யாணம் ஆகிட்டதால என்னோட பசங்ககூட நல்ல புரிதல் இருக்கும். எந்த இடத்துல கோபப்படணும்னு எனக்குத் தெரியும். இந்த கேரக்டர் எல்லாருக்கும் இருக்கக்கூடிய விஷயம். எப்பவும் சிரிச்சிட்டே இருக்க முடியாது."
```குக் வித் கோமாளி' டைட்டில் ஜெயிப்பீங்கனு நினைச்சீங்களா?"

``செமி ஃபைனல் நடந்துட்டு இருந்தப்ப ஃபைனல் ரவுண்டுக்கு நாலு பேர் போக இருந்தாங்க. அதுல மூணாவது ஃபைனலிஸ்ட்டா என்னோட என்ட்ரி இருந்தது. பிரியங்கா வெளில போயிட்டாங்க. இதுக்கப்புறம் ஃபேமிலி, நண்பர்கள்னு எல்லாரும் `கப் முக்கியம் அக்கா'னு சோஷியல் மீடியால மீம் போட ஆரம்பிச்சிட்டாங்க. அப்பதான் ஜெயிக்கணும்னு வெறி வந்துச்சு."
`` `குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியில் சிவாங்கி மற்றும் பாலா ரெண்டு பேர்ல யார்கூட என்ட்ரி கொடுக்கணும்னு நினைப்பீங்க?"
``இந்த நிகழ்ச்சில சிவாங்கி மற்றும் பாலாகூட நல்ல புரிதல் இருந்தது. பாலாவுக்கும் எனக்கும் அக்கா - தம்பி உறவு ஏற்பட்டச்சு. சிவாங்கியும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தா. ஃபைனல்ல சிவாங்கிகூட சமைச்சிட்டேன். அதனால பாலாகூட திரும்பவும் சமைக்கணும் நினைப்பேன். என்னோட பசங்களுக்கும் இவங்க ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும்."
``நீங்க கோமாளியா இருந்தா... குக்கா யார் இருக்கணும்?"
``எனக்கு சமையல் எந்தளவுக்குப் பிடிக்குமோ அதைவிட அதிகமா நான் சொல்லப் போற ரெண்டு பேருக்குச் சமையல் ரொம்பப் பிடிக்கும். நான் ரொம்ப மதிக்குற ரசிக்குற ரெண்டு பேர். ராதிகா சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி."
`` `கலக்கப்போவது யாரு' நடுவரானது பற்றி?"
``விஜய் டிவி எப்பவும் நம்ம திறமையை மதிப்பாங்க. ஒரு நிகழ்ச்சி பண்ணி முடிச்சிட்டோம்; இதோட விட்டுருவோம்னு அவங்க எப்பவும் நினைக்கிறது இல்ல. `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியோட புரோமோ ஷூட்டுக்கு ஒருநாள் முன்னாடி உடம்பு சரியில்லாம மாத்திரை போட்டு தூங்கிட்டேன். இந்த நிகழ்வுக்கு ஒருநாள் அப்புறம், `குக் வித் கோமாளி' சக்சஸ் மீட் இருந்தது. அப்போ பி.ஆர்.ஓ பிரியா போன் பண்ணி `நாளைக்கு வரமுடியுமா'னு கேட்டாங்க. `நாளைக்கு ஏன்'னு கேட்டேன். இந்த ஷோ பத்தி சொன்னாங்க. ஓகே சொல்லிட்டேன். நிறைய பேருக்கு `கலக்கப்போவது யாரு' ஷோவுக்கு வனிதா எப்படினு ஆச்சர்யமா கேட்டாங்க. பல பேர் சந்தோஷமா கமென்ட் பண்ணியிருந்தாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நிகழ்ச்சிக்கான நடுவர்ன்னா அவங்களோட நடிப்பு சம்பந்தப்பட்ட விஷயம். நான் நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். பத்துப் படத்துக்கு உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். அதனால என்னோட தீர்ப்பு சரியா இருக்கும். மனசுலபட்டதை அப்படியே சொல்லிடுவேன்."