Published:Updated:

``கொரோனாவுக்கும் என் போட்டோவுக்கும் என்ன லின்க்?!'' - வித்யா பிரதீப்

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

பயோ டெக்னாலஜி முடித்துவிட்டு, தற்போது ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டத்துக்காக படித்துக்கொண்டிருப்பவரிடம் இந்த ஆராய்ச்சி வேலைகள் குறித்தும், க்வாரன்டீன் நாள்கள் குறித்தும் பேசத் தொடர்புகொண்டோம்...

கொரோனோ தொற்றால் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியிருக்க, அதன் அவசியத்தை வலியுறுத்தித் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில்,`நாயகி’ சீரியலின் நாயகியான வித்யா பிரதீப், லேப்பில் ஆய்வு செய்வது போன்ற புகைப்படங்கள் ட்விட்டரில் பகிர்ந்திருக்க, கீழே `கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிங்க’ என்ற ரீதியிலான கமென்டுகள் இடம்பெற்றிருந்தன.

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

பயோ டெக்னாலஜி முடித்துவிட்டு, தற்போது ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டத்துக்காக படித்துக்கொண்டிருப்பவரிடம் இந்த ஆராய்ச்சி வேலைகள் குறித்தும், க்வாரன்டீன் நாள்கள் குறித்தும் பேசத் தொடர்புகொண்டோம்...

``படங்கள், சீரியல் ஷூட்டிங் எல்லாம் நடக்காதனால, வீட்டு வேலைகள் செய்றது, வொர்க்கவுட் பண்றது, OTTல படங்கள் பார்க்குறது, என்னோட ரிசர்ச் வொர்க் தொடர்பான வேலைகள் பண்றதுனு நேரம் சரியா இருக்கு. ட்விட்டர்ல என்னோட படிப்பு தொடர்பான ஆராய்ச்சி வேலைகள், நான் லேப்ல இருக்கற மாதிரியான புகைப்படங்களைப் பார்த்துட்டு நிறைய பேர் போன் பண்ணிக் கேட்டாங்க. அது என்னோட அக்கவுன்ட்டே கிடையாது. நான் ட்விட்டர்ல அவ்வளவு ஆக்டிவ் இல்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்ல மட்டும்தான் ஆக்டிவா இருக்கேன். சில மாதங்களுக்கு முன்னாடி, நான் என்னோட செல் கல்ச்சுரல் ரிசர்ச் வேலைகள்ல இருந்தப்ப எடுத்த புகைப்படங்கள்தான் அது. அந்த சமயம் ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணியிருந்தேன்."

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

``அதை எடுத்து, இந்த க்வாரன்டீனோட தொடர்புபடுத்தி, என்னோட பெயர் இருக்குற ஃபேக் அக்கவுன்ட்ல இருந்து போட்டிருக்காங்க. அப்துல்கலாம் சார்கூட இருக்க மாதிரியான புகைப்படங்களும் ஷேர் பண்ணியிருக்காங்க. அது எங்க லேப்பை சார் பார்க்க வந்தப்ப, எந்த மாதிரியான வேலைகள் நாங்க பண்ணிட்டிருக்கோம்னு நான் விளக்கினது. அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ. இதையெல்லாம் இந்த மாதிரியான சமயத்துல ஏன் எடுத்து பரப்பிட்டு இருக்காங்கன்னு புரியல.

இந்த ஆராய்ச்சி வேலைகள் தொடர்பா நான் பண்ணின பேப்பர்கள் ஜர்னல்ல பப்ளிஷ் ஆகியிருக்கு. கடந்த 5 வருஷமா இந்த வேலைகள் போயிட்டிருக்கு. இடையில படங்கள், சீரியல், விளம்பரங்கள்னு பிஸியாகிட்டதால இந்த நாள்கள்லதான் மறுபடியும் தொடர்ந்து படிப்புல கவனம் செலுத்திட்டு வர்றேன். ரிசர்ச் எல்லாம் முடிஞ்சு பேப்பர் வொர்க்கும் வேற சில வேலைகளும் மட்டும் மிச்சம் இருக்கு. இந்த வருஷம் கண்டிப்பா முடிச்சிருவேன்னு நம்புறேன்.

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

பி.ஹெச்டி பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சு நிறைய பேர் படிப்பு, நடிப்புனு ரெண்டையும் எப்படி சமாளிக்கறீங்கன்னு கேட்குறாங்க. ரெண்டுமே எனக்குப் பிடிக்கும். இது பண்ண முடியும், முடியாதுங்கிறது நாம முடிவு பண்றதுதானே. என்னோட சூழ்நிலையை புரிஞ்சிட்டு என்னோட ரிசர்ச் ஸ்டாஃப்ஸும், குடும்பமும் எனக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தாங்க. சின்ன வயசுல இருந்தே நடிக்க ஆசை இருந்தது. என்னோட குடும்பத்துல இருந்து நடிக்க வந்தது நான் மட்டும்தான். எனக்கு வந்த வாய்ப்புகள்ல எது எனக்கு சரின்னு தோணுச்சோ அதை எடுத்து பண்ணிட்டு இருக்கேன்.”

``க்வாரன்டீன்ல என்ன பண்ணிட்டிருக்கீங்க?"

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

``சென்னையில இருக்க பிரபலமான ஒரு கண் மருத்துவமனையில நான் ஜூனியர் சயின்டிஸ்டா இருக்கேன். அங்கதான் என்னோட ஆராய்ச்சி தொடர்பான வேலைகள் நடக்கும். இடையில நடிப்புல பிஸியாகிட்டதால அங்கயும் போக முடியலை. ரொம்ப முக்கியமான வேலைகளுக்கு மட்டும் தேவைனு அவங்க கூப்பிடும்போது போயிட்டிருக்கேன். என்னோட பேப்பர் வொர்க்கும் பாதியிலேயே இருக்கு. இதையெல்லாம் இந்த க்வாரன்டீன் நாள்கள்ல சரி பண்ணத் திட்டம் போட்டிருக்கேன்.

அம்மா, அப்பாகூட அதிக நேரம் இப்ப இருக்க முடியுது. வெளிய போகாம இருக்குறதும், நம்மைத் தனிமைப்படுத்திக்கறதும் இந்த நேரத்துல நாம செய்ய வேண்டிய கடமை. அதுக்கு முக்கியமான நடவடிக்கையா அரசு இதை முன்னெடுத்துருக்காங்க. `இதெல்லாம் நமக்கு வராது’ங்கற அசட்டுத் தைரியம் ரொம்பத் தப்பு. பெரியவங்க, குழந்தைங்க ரொம்ப பத்திரமா இருக்கணும். ஏன்னா, அவங்களுக்கான எதிர்ப்பு சக்தி ரொம்பக் குறைவு. இந்த மாதிரியான விஷயங்களைக் கவனத்துல வெச்சிட்டு கடைப்பிடிச்சோம்னா இந்த அசாதாரண நாள்கள், சீக்கிரமே சரியாகிடும்."

அடுத்த கட்டுரைக்கு