Published:Updated:

`` `அக்னி நட்சத்திரம்' சீரியலிலிருந்து விலகியது ஏன்?'' - நடிகை வினோதினி விளக்கம்

வினோதினி

இத்தனை வருடங்கள் சினிமா, சீரியல் எனத் தலைகாட்டாமல் இருந்த எனக்கு மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு அது சந்தோஷமே! ஆனால்...

Published:Updated:

`` `அக்னி நட்சத்திரம்' சீரியலிலிருந்து விலகியது ஏன்?'' - நடிகை வினோதினி விளக்கம்

இத்தனை வருடங்கள் சினிமா, சீரியல் எனத் தலைகாட்டாமல் இருந்த எனக்கு மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு அது சந்தோஷமே! ஆனால்...

வினோதினி

கடந்த மே மாதம் முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல், 'அக்னி நட்சத்திரம்'. இந்த சீரியல் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், அந்த சீரியலிலிருந்து விலகியிருக்கிறார், வினோதினி. ஏன் இந்த அதிரடி முடிவு எனக் கேட்டோம். ''சமீபத்தில்தான் என் கணவருக்கு சாலை விபத்து நடந்தது. அந்த விபத்தில் என் கணவர் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அளவுக்குக் காயப்பட்டிருந்தார். அடையாறு மலர் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தோம். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறார்.

`` `அக்னி நட்சத்திரம்' சீரியலிலிருந்து விலகியது ஏன்?'' - நடிகை வினோதினி விளக்கம்

அவர் விரைவில் குணமடைய என்னென்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டுமோ அதை மருத்துவமனை சார்பில் கொடுத்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புதான் 'அக்னி நட்சத்திரம்' சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வந்தேன். இந்த திடீர் விபத்து காரணமாக என் கதாபாத்திரத்தை சீரியலிலிருந்து தள்ளிவைத்தார்கள். என் கணவர் உடல்நிலை தேறி வரத் தாமதமாகும் என்பதால், நானே 'நான் மீண்டும் சீரியலில் இணைய எப்படியும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். அதனால், இப்போதைக்கு சீரியலிலிருந்து விலகிக்கொள்கிறேன்' எனச் சொன்னேன்.

அதனால்தான் தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை. என் கணவர் உடல்நிலை தேறிவிட்ட பிறகு, மீண்டும் அந்த சீரியலில் இணைவேன்.'' என்றவரிடம், தற்போது, நீங்கள் நடித்திருக்கும் புரோமோ டிவி மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகி வருகிறதே என்று கேட்டதற்கு, ''அது பழைய வீடியோ. புரமோவுக்காக வைத்திருந்ததை இப்போது டெலிகாஸ்ட் செய்து வருகிறார்கள். ஏதோ பிரச்னையின் காரணமாக சீரியலை விட்டு விலகுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன. இத்தனை வருடங்கள் சினிமா, சீரியல் எனத் தலைகாட்டாமல் இருந்த எனக்கு மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு அது சந்தோஷமே. இருந்தும், என் கணவரின் உடல்நிலை இப்படி இருக்கும்போது நிச்சயம் என்னால் இப்போதைக்கு தொடர்ந்து நடிக்க முடியாது.'' என்றார், வினோதினி.

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம்

'அக்னி நட்சத்திரம்' சீரியலில் மெளனிகா ஜெயந்தியாகவும், வினோதினி நளினியாகவும் நடித்து வந்தனர். மெளனிகா , வினோதினி இருவருமே பாலு மகேந்திராவின் வளர்ப்புகள். 'வண்ண வண்ணப் பூக்கள்' படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து இருவரும் ஒரு சீரியல் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதும், இருவருமே சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கிறார்கள் என்பதும் கூடுதல் சிறப்பு. எது எப்படியோ... கணவரின் உடல் நலம் சரியான பிறகு உங்களை சீரியலில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் வினோதினி.