`ஆதித்யா' தொலைக்காட்சியின் தொகுப்பாளராக நமக்கு அறிமுகமானவர் அகல்யா வெங்கடேசன். சின்னத்திரை, வெள்ளித்திரையிலும் நடிகையாகவும் வலம் வந்தவர். அவருக்கும், அருண் குமார் என்பவருக்கும் இன்று காலை திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

அருண் குமார் தமிழ்நாடு காவல் துறையில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இரு வீட்டுப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது! இவருடைய நிச்சயதார்த்தத்திற்கு இயக்குநர் சசிகுமார் பங்கெடுத்து தம்பதியை வாழ்த்தியிருந்தார். இதுகுறித்து நாம் கேட்டதற்கு, 'ராஜவம்சம்' படத்தில் நடிச்சப்ப தான் எனக்கு சசிகுமார் அண்ணன் பழக்கமானார். சொந்த அண்ணன் - தங்கை உறவு எங்களுக்குள் இருக்கு. அதனால அண்ணன் இடத்தில் இருந்து அவரே விழாவைச் சிறப்பிச்சிருந்தார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், இவர்களுடைய திருமணம் இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தில் பெரிய அளவில் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. இரு வீட்டுப் பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் கோயிலில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 8-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வுக்கு மீடியாத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி, சசிகுமார் போன்ற பிரபலங்கள் நிச்சயம் திருமண வரவேற்பில் கலந்து கொள்வார்கள் என்கின்றனர் அகல்யாவின் நண்பர்கள்!
வாழ்த்துகள் அகல்யா - அருண்!