Published:Updated:

தொட்டு நடிக்கக்கூடாது... அனுமதி கிடைத்தும் `நோ' ஷூட்டிங்... சின்னத்திரையில் என்னதான் நடக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில்
சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில்

`கொரோனா ஊரடங்கு’ தொடரும் நிலையில் சீரியல் ஷூட்டிங்கிற்குத் தமிழக அரசு அனுமதியளித்தும், இதுவரை எந்தவொரு சீரியலின் ஷூட்டிங்கும் தொடங்கவில்லை.

ஸ்பாட்டில் 20 பேருக்கு மேல் இருக்கக்கூடாது, இண்டோரில்தான் நடத்தவேண்டும், கேரவனில் ஏசி போடக்கூடாது என்பன போன்ற சில கட்டுப்பாடுகளே ஷூட்டிங் தொடங்காததற்குக் காரணம் என்கிறார்கள்.

ஜீ தமிழ் சேனலில் `றெக்க கட்டிப் பறக்குது மனசு’ தொடரைத் தயாரித்த சமீரா அன்வரிடம் பேசினேன்.

சமீரா
சமீரா

``ஒரு சீரியல் தயாராகுதுன்னா சுமார் 100 பேர் வரைக்கும் வேலை கிடைக்கும். இப்ப ஷூட்டிங் நடக்காததால இவங்களுக்கு வேலை இல்லை. அதனால சீக்கிரம் ஷூட்டிங் நடத்தணும்னு கோரிக்கை வச்சிருக்காங்க. ஆனா இப்ப பர்மிஷன் கிடைச்சும் சந்தோஷப்பட முடியலை. எப்படித்தான் ஆட்களைக் குறைச்சாலும் ஒரு சீரியல் ஷூட்டிங்குக்குக் குறைஞ்சது 40 பேர் வரைக்கும் தேவைப்படுவாங்க.

இன்னொரு விஷயம், இன்னைக்கு முக்கால்வாசி சீரியல்கள்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்டுகள் பெங்களூரு, கேரளான்னு வெளிமாநிலங்கள்ல இருந்து வர்றவங்களா இருக்காங்க. அப்படி வர்றவங்களைச் சென்னை வந்ததும் தனிமைப்படுத்தணும்னு சொல்வாங்களானும் தெரியலை. இந்த ஆர்ட்டிஸ்டுகள்ல எத்தனை பேர் முதல்ல நடிக்கச் சம்மதிப்பாங்கன்னும் தெரியலை. ஹீரோ ஹீரோயின் தொட்டு நடிக்கச் சம்மதிப்பாங்களாங்கிற மாதிரியான விஷயங்கள்லாம் கூட இருக்கு.

தவிர, ஆர்ட்டிஸ்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்னு சொல்லியிருக்கறதா கேள்விப்பட்டேன். இதை சேனலா அல்லது தயாரிப்பாளரா யார் செய்யறதுன்னு தெளிவா சொல்லியிருக்காங்களானும் தெரியலை. ஏன்னா, பெரும்பாலும் இன்னைக்கு funded serials-னு ஆகிட்டதால, தயாரிப்பாளங்கிறவர் வெறும் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்தான். பட்ஜெட்டுக்குள் சீன் எடுத்தாகணும்கிற சூழல்ல இந்த இன்ஷூரன்ஸ் பெரும் சுமையா இருக்கும்.

இப்படி நிறையச் சிக்கல்கள் இருக்கிறதாலதான் அரசு அனுமதி தந்த பிறகும் கூட ஷூட்டிங் தொடங்க முடியாத நிலை’’ என்றார் சமீரா.

முன்னணி சேனல் ஒன்றில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலின் தயாரிப்புத் தரப்பு, சீரியலில் நடித்து வரும் அந்த சீனியர் நடிகரை ஷூட்டிங்கிற்கு அழைக்க, ``எனக்கு 60 வயசாகுது... இப்போதைய நிலைமைல வரமுடியாது" எனச் சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில் பெப்சி அமைப்பு, 20 பேர் என்ற எண்ணிக்கையை உயர்த்தி உத்தரவிடவும், அப்படியே மேலும் சில தளர்வுகள் கேட்டும் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் என்ன சொல்கிறார்கள்?

’பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா
’பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா

`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவிடம் பேசினேன்.

``இதுல என்ன சொல்றதுன்னே தெரியலை. முக்கியமான கதாபாத்திரங்கள் நடிச்சாதான் சீரியல் எடுபடும். மொத்தம் 20 பேர்தான் வரணும்னா அதுல ஆர்ட்டிஸ்டுகள் ரெண்டு பேர்தான் இருப்பாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா, பொருளாதார ரீதியில பார்த்தா, ஆர்ட்டிஸ்டுகள் ஓரளவு லாக் டௌனைச் சமாளிச்சிடலாம். ஆனா ஒரு சீரியலுக்குப் பின்னாடி இருந்து உழைக்கிற டெக்னீஷயன்கள்தான் வேலை இழந்து ரொம்பவே கஷ்டப்படுறாங்க. 20 பேர்தான் கலந்துக்கணும்கிற நிபந்தனையால அந்த டெக்னீஷியன்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவாங்க'’ என்றவர், ``எனக்கு இந்த வார இறுதியில் ஷூட்டிங் இருக்கும்னு சொல்லியிருக்காங்க’' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் வெங்கட்டிடம் பேசிய போது, ``நான் இப்ப கோயம்புத்தூர்ல இருக்கேன். சென்னையின் கொரோனா புள்ளி விவரத்தைக் காட்டி, `கட்டாயம் அங்க ஷூட்டிங் போய்த்தான் ஆகணுமா’ன்னு வீட்டுல கலவரமாகுறாங்க. நான் பாட்டுக்குக் கிளம்பி வந்துடறேன்னு வச்சுக்கோங்க, அங்க வந்ததும், வெளியூர்ல இருந்து வந்திருக்கேன்னு ரெண்டு வாரம் தனிமைப்படுத்திட்டாங்கன்னா? அரசாங்கம், சேனல், தயாரிப்பாளர்கள்னு கூடிப்பேசி நல்லவொரு முடிவை எடுத்துட்டுச் சொல்லட்டும்னு காத்திட்டிருக்கேன்" என்றார்.

வெங்கட்
வெங்கட்

இதற்கிடையே நடிகையும், தயாரிப்பாளருமான குஷ்பு, ``ஒரு ஷூட்டிங் நடக்க குறைந்தது 35 பேரையாவது அனுமதிக்கவேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஜூன் முதல் வாரத்தில்தான் ஷூட்டிங்குகள் தொடங்குமா என்பது தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு