Published:Updated:

AKS - 53: ஏற்றிவிடும் கிஷோர், பலிகடாவாகும் பரத்... பாண்டியன் - கவிதாவுக்கு இடையே இருப்பது என்ன?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (04-11-2021) வெளியான 53-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 53: ஏற்றிவிடும் கிஷோர், பலிகடாவாகும் பரத்... பாண்டியன் - கவிதாவுக்கு இடையே இருப்பது என்ன?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (04-11-2021) வெளியான 53-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

பரத்தும் புனிதாவும் கிஷோர் அழைத்ததன் பேரில் அவனுடன் மது அருந்த உணவகம் வந்திருக்கின்றனர். கிஷோர் புனிதாவிற்காக ஒரு பாடல் பாடுகிறான். அதைக்கேட்ட புனிதா இரண்டு வருடங்களுக்கு முன்பு கிஷோரை சந்தித்திருந்தால் அவனுடைய குரலுக்காகவே அவனைக் காதலித்திருக்கலாம் எனச் சொல்கிறாள். அதைக் கேட்டு பரத்துக்கு கோபம் வருகிறது. அவன் போட்டிக்கு தானும் அதுபோல் பாடுவேன் என சொல்லி பாடுகிறான். பரத் பாடியது மொக்கையாக இருக்கிறது என்று கிஷோர் சொல்கிறான்.

பரத் கோபத்தில் கிஷோரை ஒருமையில் பேசுகிறான். தன்னை அங்கு அழைத்து அவமதிக்கும் விதமாக நடந்ததாகக் குற்றம் சாட்டுகிறான். கிஷோர் பரத்திடமும் புனிதாவிடமும் மன்னிப்பு கேட்கிறான். கிஷோர் அவர்களை கெட் டுகெதர் என்று சொல்லி அழைத்த நோக்கமே தவறானது. அவர்கள் வந்ததிலிருந்தே கிஷோர் பரத் மற்றும் புனிதாவின் காதலை பொறாமையுடனே பார்த்துக் கொண்டிருக்கிறான். அதன் வெளிப்பாடாக பரத்தின் மனம் வருந்த செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே தான் காதல் தோல்வியில் இருப்பதாகச் சொல்லி பாடல் பாடியதைப் போல கிஷோரின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

AKS - 53
AKS - 53

அதோடு நிறுத்தாமல் பரத் பாடியதை மொக்கையாக இருக்கிறது என்று சொல்லி பரத் மற்றும் புனிதாவின் இடையில் பிரச்னையை உண்டாக்கி புனிதாவை தன்வசம் இழுக்க திட்டம் போட்டிருப்பதை போல கிஷோர் நடந்து கொள்கிறான். அல்லது குறைந்தபட்சம் தன்னுடைய ஏமாற்றத்தை, பொறாமையை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அவர்களை அழைத்து இருக்கிறான். புனிதாவுக்கு இருக்கும் அறிவிற்கும், புரிதலுக்கும் கிஷோர் பரத்திடம் நடந்து கொள்வது தவறு என்பது புரிந்திருக்க வேண்டும். ஆனால் புனிதா பரத்தின் பக்கம் நிற்காமல் அவனைக் கடிந்து கொண்டு கிஷோரிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்கிறாள். பொதுவாக இதுபோன்ற பிரச்னைகளில் பரத்தை போல கோபத்தை வெளிப்படுத்தி விடுபவர்கள் தவறானவர்கள் ஆகவும், கிஷோரை போன்று மறைமுகமாக மற்றவர்களுக்கு பிரச்னைகளை உருவாக்குபவர்கள் நல்லவர்களாகவும் ஆகி விடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது இந்தச் சம்பவத்தின் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பரத் மற்றும் புனிதா இரண்டு வருடங்களாக லிவ்-இன் உறவில் இருக்கிறார்கள். சராசரியாக இருப்பவர்களை விட அதிகமான காதல், புரிதலுடன் இருக்கிறார்கள். பரத் முற்போக்காக பல விஷயங்களில் நடந்து கொள்கிறான். ஆனால் பரத்துக்கு கிஷோரை போன்ற மூன்றாவது ஒரு ஆள் தங்களுக்குள் வரும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாமல் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறான். கிஷோர் புனிதாவிடம் ப்ரொபோஸ் செய்வான் என ஆரம்பத்தில் சரியாக கணித்த பரத்துக்கு புனிதாவின் முன்னிலையில் கிஷோர் வேண்டுமென்றே தன்னை மட்டம் தட்டுகிறான் எனத் தெரிந்தபோது அதே மனமுதிர்ச்சியுடன் அவனை பொருட்படுத்தாமல் இருந்துவிட்டு வெளியேறி இருக்கலாம். பரத் கோபப்பட்டதன் மூலமாக கிஷோரின் எண்ணம் நிறைவேறி இருக்கிறது.

AKS - 53
AKS - 53

அதேபோல் புனிதாவிற்கு கிஷோரின் மீது ஆரம்பத்தில் சந்தேகம் இல்லாமல் இருந்தாலும் அவன் பரத்தை நடத்திய விதத்தில் கிஷோரின் நோக்கம் புரிந்திருக்க வேண்டும். அவள் பரத் பக்கம் நின்று பேசியிருக்காவிட்டாலும் இருவருக்கும் பொதுவாக பேசலாம். ஆனால் புனிதா, தன்னை தேவதை என கொண்டாடும் கிஷோர் பரத்தை மட்டம் தட்டும்போது அவனோடு சேர்ந்து பரத்தை கேலி செய்கிறாள். பரத்தின் மீது கோபம் வருவது போலவே கிஷோரை நாகரிகமாக ஒதுக்குவது எப்படி என்கிற சிந்தனையும் வந்திருக்க வேண்டும்.

கிஷோர் வேண்டுமென்றே இவற்றை செய்கிறான் என்று பரத்துக்கு தெரிகிறது. அப்படியிருக்க தனது கோபத்தை புனிதாவின் மீது காட்டுவதன் மூலம் தங்களுக்குள் சண்டையிட்டு நேரத்தை வீணாக்கி மன உளைச்சலுக்கு ஆளாகத் தேவையில்லை. வெளியிலிருந்து ஒருவர் சட்டென்று ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட கூடிய அளவு தங்களுடைய உறவை உறுதி அற்றதாக பரத்தும் புனிதாவும் வைத்திருக்கிறார்கள். ஆனால் வெளியில் தாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அபரிதமான புரிதல் மற்றும் அன்புடன் இருப்பதாக பேசிக் கொண்டும், நம்பிக் கொண்டும் இருக்கிறார்கள்.

சிவா காயத்ரி உடனிருந்த கணங்களை நினைவுகூர்ந்து பார்க்கிறான். காயத்ரி பேசுவதை போல, அவனுக்கு சமைத்துக் கொண்டு வந்திருப்பதைப் போல, சிவாவை பாடச் சொல்லிக் கேட்பது போல, அவனுக்கு பிரமை உண்டாகிறது. சிவா அவனை சுற்றி எல்லா இடத்திலும் காயத்ரியின் மாயத் தோற்றத்தை கண்டு தவிப்பில் இருக்கும் சமயம், அவனுடைய முன்னாள் காதலி மாயாவிடம் இருந்து அழைப்பு வருகிறது. சிவா போனை எடுத்ததும் மாயா கொஞ்சம் பேச வேண்டும் என்று கேட்கிறாள். சிவா பேசுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி அழைப்பை துண்டித்து விடுகிறான்.

AKS - 53
AKS - 53

சிவா மாயாவின் குரலைக் கேட்டதும் பதற்றமடைகிறான். அவளிடம் பேச ஒன்றுமில்லை என்று கூறுகிறான். சிவாவிற்கு காயத்ரியின் மீது காதல் வந்ததால் மாயாவிடம் பேசக்கூடாது என்று எண்ணத் தேவையில்லை. சிவா மாயாவை விட்டு பிரியும்போது பிரச்னை செய்தது, மாயாவின் தந்தையிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது இவற்றிற்காகவாவது மாயாவிடம் சிவா வருத்தம் தெரிவித்து பேசி இருக்கலாம்.

சிவாவுக்கு காயத்ரிக்கு சுந்தருடன் நிச்சயமாகிவிட்டது நினைவுக்கு வருகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு சிவா மாயாவுக்கு கால் செய்து எங்கே சந்திக்கலாம் எனக் கேட்கிறான். சிவா காயத்ரியை தொந்தரவு செய்யமாட்டேன் என்று புனிதாவிடம் கூறியிருக்கிறான். அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறான். அதனாலேயே மாயா சிவாவிடம் சந்திக்கலாமா எனக் கேட்டபோது முதலில் வேண்டாம் என மறுத்த சிவா, பிறகு சம்மதம் தெரிவிக்க அவளுக்கு கால் செய்து பேசுகிறான். ஆனால் சிவா காயத்ரியின் காதல் நினைவுகளில் இருந்து தப்பிக்க மீண்டும் மாயாவுடனான காதலை புதுப்பிக்க நினைத்தால் அது கவிதா ராஜேஷை செய்வது போல் காதலின் பேரால் ஒருவரைத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதை போன்றது.

AKS - 53
AKS - 53

ராஜேஷுடன் தங்கியிருக்கும் கவிதாவிற்கு பாண்டியனைப் பற்றிய கவலையே அதிகமாக இருக்கிறது. அவள் முதல் முறையாக பாண்டியனை அதிகம் மிஸ் செய்வதாக உணர்கிறாள். அதை ராஜேஷிடம் சொல்லிவிட்டு அறைக்கு வெளியில் வந்து பாண்டியனுக்கு கால் செய்கிறாள். பாண்டியனும் கவிதாவை விட்டு பிரிந்து இருப்பதில் தூங்க முடியாமல் இருக்கிறான். ஆனால் பாண்டியன் எதுவும் பேசாமல் கவிதா பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு தன் எண்ணத்தை சொல்வதற்கு மனத் தடையாக கவிதா மற்றும் ராஜேஷின் காதல் இருக்கலாம். கவிதா பாண்டியனை விட்டு பிரிந்து இருப்பது மூச்சு முட்டுவது போல இருக்கிறது என்றும் இந்த அவஸ்தையை தாங்க முடியவில்லை என்றும் சொல்லி அழுகிறாள்.

கவிதா தன்னுடைய நிலையை எவ்வாறு ராஜேஷுக்கு விளக்க போகிறாள்?
சிவா மீண்டும் மாயாவுடன் இணைவானா?

காத்திருப்போம்!